தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய விவகாரம் மற்றும் முன்னாள் பள்ளிப் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தேனி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 விசாரணை கைதிகளில் ஒருவர் வலிப்பு வந்தது போல நாடகமாடி, அதைப் பார்க்க வந்த காவலர்களைக் கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இது தொடர்பாக இரவு முழுவதும் நடைபெற்ற தீவிரத் தேடுதல் வேட்டையில் இதுவரை 4 பேர் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 13 பேரையும் பிடிக்க வனப்பகுதிகள் மற்றும் கேரளா எல்லை உட்பட அனைத்துச் சோதனைச் சாவடிகளிலும் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சிறையில் பாதுகாப்பு குறைபாடுகள் அல்லது வாகன சோதனையில் சிக்கல்கள் ஏதேனும் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய டிஜிபி சந்தீப் ரத்தோர் மற்றும் ஐஜி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிக்கு பாதுகாப்புச் சான்றிதழ் வழங்குவதில் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து ஊழல் செய்த வழக்கில், முன்னாள் பள்ளிப் கல்வித்துறை அமைச்சர் நேற்று நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். என்.ஜி.ஓ-க்கள், கிறிஸ்தவ மிஷனரிகள் மற்றும் டிரஸ்ட்டுகள் நடத்தும் பள்ளிகளை மிரட்டி இந்தத் தொகை பெறப்பட்டுள்ளது.
`எங்கே பைல்களை திறங்க பார்ப்போம்’ என்று கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, ஒரே ஒரு பைலை திறந்து பார்த்ததற்கே முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சரின் கைது, திமுகவுக்கு ஒரு மிகப்பெரிய அவமானம். திமுகவினர் கை வைக்காத துறைகளே இல்லை எனும் அளவுக்கு நிலமை சென்றுள்ளது. பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்காகக் கல்வித் துறை சார்பில் வழங்கப்படும் சான்றிதழுக்குக் கூட இவர்கள் ‘பார்ட்டி ஃபண்ட்’ வசூலித்துள்ளனர்.

நாட்டில் 2,000-க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் என்.ஜி.ஓ-க்கள் நடத்தும் பள்ளிகள் உள்ளன. இதில் இவர்கள் விட்டுவைத்த பள்ளிகள் எதுவுமில்லை. பள்ளிகளை நடத்துபவர்களைத் தவிர வேறு யாருக்குமே இப்படி ஒரு சான்றிதழ் இருப்பதே பெரும்பாலும் தெரியாது. அந்த ஒரே ஒரு சான்றிதழின் மூலம் மட்டும் ஒரே ஆண்டில் ரூ.400 கோடி அளவுக்கு வசூல் செய்யப்பட்டுள்ளது. “மூன்று பைல் இருக்குனு சொல்றீங்களே அதை திறங்க’ என எதிர்க்கட்சித் தலைவர் கேட்டிருந்தார். ஆனால், முதல்வர் ஒரே ஒரு பைல்தான் இப்போது திறந்துள்ளார்.
இந்த ஒரே ஒரு பைலுக்கே இவ்வளவு பெரிய நாடகத்தை நடத்திவிட்டு, கொஞ்சம் கூடக் கூச்சமில்லாமல் இது பழிவாங்கும் நடவடிக்கை என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிடுகிறார். இன்னும் நிறைய பைல் இருக்கு. `கரூர்லயே நாம் இதைச் செய்திருக்க வேண்டும், அங்கே அவரை முடித்திருக்க வேண்டும்’ என்று நீதிமன்றத்திற்கு வெளியே நின்று கொண்டு செந்தில் பாலாஜி மற்றும் அன்பில் மகேஸ் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினார்கள். அப்படியென்றால், கரூரில் நடந்த சம்பவ திட்டமிடலின் பின்னணியில் நீங்கள்தான் இருந்தீர்களா? அந்தச் சம்பவத்தின் போது நேரில் சென்று நாடகமாடியதன் பின்னணியும் இதுதானா? கரூரிலேயே இதைச் செய்திருக்க வேண்டும் என்று பகிரங்கமாகப் பேசும் அளவுக்குத் திமுகவினரின் போக்கு மிகவும் தரங்கெட்டுப்போயுள்ளது.
இன்னும் பல பைல்கள் விசாரணையில் உள்ளன. போக்குவரத்துக் கழகத் துறையில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வழங்கியதில் பெரும் ஊழலும் முறைகேடும் நடந்துள்ளதாகத் லஞ்ச ஒழிப்புத் துறையின் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்ட உடனேயே நீதிமன்றத்திற்குச் சென்று இடைக்காலத் தடை பெற்றனர். தவறு செய்யவில்லை என்றால் நீதிமன்றத்திற்குச் சென்று விசாரணைக்கு ஏன் தடை வாங்க வேண்டும்? தவறு செய்யாத பட்சத்தில் தைரியமாக விசாரணையை எதிர்கொள்ள வேண்டியதுதானே? அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் உரிய ஆதாரங்கள் உள்ளன.
தற்போதுதான் அந்தத் தடையாணை நீக்கப்பட்டு உள்ளது. இனி இந்த வழக்கின் விசாரணையும் முறையாகவும் துரிதமாகவும் நடைபெறும். சட்டப்படி அனைத்து விதிகளையும் பின்பற்றி விசாரணை முன்னெடுக்கப்படும். தற்போது தைரியமாகப் பல பள்ளிகள் புகார் அளிக்க முன்வந்துள்ளன. ஆயிரக்கணக்கான சி.பி.எஸ்.இ மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளிடம் இருந்து இந்த நிதி வசூலிக்கப்பட்டுள்ளது. இது பழிவாங்கும் நடவடிக்கை என திமுக தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் பழிவாங்கும் நோக்கம் எதுவும் இல்லை. சாட்சிகள் தைரியமாகப் புகார் அளிக்கவே இந்த நீதிமன்றக் காவல் நடவடிக்கை அவசியமாகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
“தேவையற்ற வதந்திகள்.. "- கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன்
October 28, 2026
"திருநீறு, ருத்ராட்சையுடன் திருவள்ளுவர் ஓவியம்; திருப்பரங்குன்றம் விவகாரத்திலும்..!"- வானதி கோரிக்கை
October 28, 2026
அன்பில் மகேஸ் கைது; பெண் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு – பின்னணி என்ன?
October 28, 2026
செஞ்சி: `கோயிலில் வெள்ளைப் பூ வந்தது.. என் மகள் உயிருடன் வருவாள்!’ – நம்பிக்கையுடன் சிறுமியின் தாய்
October 28, 2026
'ஒன்றிய அரசின் பாதையில் தவெக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை..!'- சிபிஐ வீரபாண்டியன் பேட்டி
October 28, 2026
சோப்பு நுரை: “என்னை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணீங்க இப்போ எங்கே போனீங்க" – செல்லூர் ராஜூ கலகல
October 28, 2026
Chris Mason: Budget felt cautious despite its range of small measures
October 28, 2026
Your pay, energy bills and savings: How the Budget affects you
October 28, 2026
Davies crossing divide between pitch and boardroom
October 28, 2026
Update to iOS 27.2 Now to Patch Hundreds of Bugs
October 28, 2026
Cheika happy to 'fly the flag' for Lebanon
October 28, 2026
Watch: What are the key points from the Budget and how will they be funded?
October 28, 2026