மகாராஷ்டிராவில் பீவாண்டி உட்பட சில இடங்களில் மின் விநியோகத்தில் ஈடுபட்டு இருக்கும் டோரண்ட் பவர் நிறுவனம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள கர்ஜத் வனப்பகுதியில் 3 ஆயிரம் மெகாவாட் நீர் மின் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.

ரூ.13,500 கோடி மதிப்பிலான இத்திட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் சஹ்யாத்ரி மலையில் உள்ள பீமாசங்கர் வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டி அமைக்கப்பட இருக்கிறது. ஆனால் வனவிலங்கு சரணாலத்தில் இருந்து 16 கிமீ தொலைவில் இந்த மின் உற்பத்தி மையம் அமைய இருப்பதாக மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்த டோரன்ட் பவர் நிறுவனத்தின் 3,000 மெகாவாட் நீர்மின் திட்டத்திற்காக வனப் பகுதிகளை உள்ளடக்கிய நிலத்தில் உள்ள 32,490 மரங்கள் வெட்டப்பட இருக்கிறது.

இது குறித்து எதிர்க்கட்சிகளும் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் இத்திட்டத்திற்கு 18 மாதங்களுக்கு முன்பே பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டதாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,”எதிர்க்கட்சியினர் தவறான கருத்துகளைப் பரப்புகின்றனர். நாங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டங்களைக் கொண்டு வருகிறோம். அனைத்து முதலீடுகளும் மகாராஷ்டிராவிற்கே வருகின்றன. இந்தத் திட்டம் மகாராஷ்டிராவிற்குத் தூய்மையான ஆற்றலை வழங்கும். ஆனால், தவறான பிம்பத்தை உருவாக்குவது மகாராஷ்டிராவிற்கு எதிரான செயலாகும். யாருடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்படாது. இந்தத் திட்டம் ஒரே நாளில் உருவானது அல்ல. இருப்பினும், கிராம மக்களின் கருத்துகளைக் கேட்டு, அதற்கேற்ப ஒரு தீர்வை எட்டுவோம். அரசியலுக்காகத் தவறான கருத்துகளைப் பரப்புவது முறையல்ல” என்று கூறினார்.

இது குறித்து டோரண்ட் பவர் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ”கர்ஜத் பகுதியில் உள்ள சைடோங்கர், கோட்வால் கலதி மற்றும் பால் ஆகிய கிராமங்களில் அமையவுள்ள தூய்மையான எரிசக்தி திட்டத்திற்குத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது. பீமாசங்கர் ஜோதிர்லிங்கக் கோயிலுக்கு அருகில் இந்தத் திட்டத்தின் எந்தவொரு பகுதியும் அமையவில்லை. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதிகளைப் பெறுவதற்கு முன்னதாக, 18 மாதமாக விரிவான சட்டப்பூர்வ நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.

இந்தத் திட்டத்திற்கு சுமார் 233 ஹெக்டேர் வன நிலம் மட்டுமே தேவைப்படுகிறது. இது இதே திறன் கொண்ட வழக்கமான நீர்மின் திட்டத்திற்குத் தேவைப்படும் நிலப்பரப்பை விட சுமார் 52 மடங்கு குறைவு ஆகும். மேலும், இழப்பீட்டு அடிப்படையில் காடுகளை வளர்ப்பதற்கான செயல் திட்டம் ஒன்றையும் தாங்கள் கொண்டுள்ளோம்”என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு வரும் 3ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இத்திட்டத்திற்கு மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து சிவசேனா(உத்தவ்) சட்டமன்ற உறுப்பினர் ஆதித்ய தாக்கரே அளித்த பேட்டியில், ”பெரிய அளவிலான மரங்களை வெட்டுவதன் மூலம் மகாராஷ்டிராவை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பாலைவனமாக மாற்றுகிறார். இத்திட்டத்திற்காக 32,490 மரங்கள் வெட்டப்படும் என அரசு கூறினாலும், 4-5 லட்சம் மரங்கள்வ்ரை அகற்றப்படலாம்.

கர்ஜத் சென்று உள்ளூர் மக்களை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க இருக்கிறோம்”என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே நாளை கர்ஜத் தாலுகாவிற்கு சென்று உள்ளூர் கிராம மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேசப்போவதாக அறிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) எம்.எல்.ஏ.ரோஹித் பவார் இது குறித்து கூறுகையில்,“மரம் வெட்டுதல் ஒரு முழு சுற்றுச்சூழல் அமைப்பையும் முடிவுக்குக் கொண்டுவரும். அதன் அபாயகரமான விளைவுகளை மனிதகுலம் தாங்க வேண்டியிருக்கும்” என்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி வருவதற்கு முன்னதாக மரங்களை வெட்டி முடிக்கும் பணி துரிதப்படுத்தப்படுகிறதா என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கிடையே இத்திட்டத்தில் அதானி குழுமத்திற்கு பங்கு இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி இருக்கிறது.

இது குறித்து அதானி குழுமம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ”சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்கள் தவறானவை மற்றும் புனையப்பட்டவை. அதானி குழுமத்திற்கு எந்த மின் திட்டமும் இல்லை. சம்பந்தப்பட்ட இடத்தில் முன்மொழியப்பட்ட அல்லது நடந்துகொண்டிருக்கும் பகுதி அல்லது அதன் அருகாமையில், அல்லது வீடியோக்களில் சித்தரிக்கப்பட்ட செயல்பாடுகளுடன் எந்த வகையிலும் அதானி நிறுவனத்திற்கு தொடர்பு இல்லை,” என்று தெரிவித்துள்ளது.

More in TamilNews
“தேவையற்ற வதந்திகள்.. "- கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன் “தேவையற்ற வதந்திகள்.. "- கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன் October 28, 2026 "திருநீறு, ருத்ராட்சையுடன் திருவள்ளுவர் ஓவியம்; திருப்பரங்குன்றம் விவகாரத்திலும்..!"- வானதி கோரிக்கை "திருநீறு, ருத்ராட்சையுடன் திருவள்ளுவர் ஓவியம்; திருப்பரங்குன்றம் விவகாரத்திலும்..!"- வானதி கோரிக்கை October 28, 2026 அன்பில் மகேஸ் கைது; பெண் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு – பின்னணி என்ன? அன்பில் மகேஸ் கைது; பெண் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு – பின்னணி என்ன? October 28, 2026 செஞ்சி: `கோயிலில் வெள்ளைப் பூ வந்தது.. என் மகள் உயிருடன் வருவாள்!’ – நம்பிக்கையுடன் சிறுமியின் தாய் செஞ்சி: `கோயிலில் வெள்ளைப் பூ வந்தது.. என் மகள் உயிருடன் வருவாள்!’ – நம்பிக்கையுடன் சிறுமியின் தாய் October 28, 2026 'ஒன்றிய அரசின் பாதையில் தவெக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை..!'- சிபிஐ வீரபாண்டியன் பேட்டி 'ஒன்றிய அரசின் பாதையில் தவெக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை..!'- சிபிஐ வீரபாண்டியன் பேட்டி October 28, 2026 சோப்பு நுரை: “என்னை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணீங்க இப்போ எங்கே போனீங்க" – செல்லூர் ராஜூ கலகல சோப்பு நுரை: “என்னை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணீங்க இப்போ எங்கே போனீங்க" – செல்லூர் ராஜூ கலகல October 28, 2026

See all 589 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *