மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயிகள் விதைத்த அனைத்துப் பயிர்களும் கருகிவிட்டன. அதிகமான மாவட்டங்களில் மிகவும் சொற்ப அளவே மழை பெய்துள்ளது.
இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதோடு கால்நடைகளுக்கும் தீவனத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாநில அரசு சில இடங்களில் தீவன கிடங்கு அமைத்து விவசாயிகளுக்குத் தீவனம் சப்ளை செய்து வருகிறது.
வறட்சியால், கிணறுகள் வறண்டு காணப்படுகிறது. கால்நடைத் தீவனத்திற்குப் பற்றாக்குறை இருப்பதால், விவசாயிகள் தங்கள் கால்நடைகளை உயிருடன் வைத்திருக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்.
கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள குப்சங்கி கிராமத்தைச் சேர்ந்த பால் விவசாயி ராஜகே இது குறித்து கூறுகையில், “நான் என் மனைவியின் தங்க நகைகளை அடமானம் வைத்து வீட்டிற்கு தீவனம் கொண்டு வந்தேன். எனக்கு வேறு வழியில்லை. மழை சரியாகப் பெய்யாத காரணதால் பயிர்கள் காய்ந்து நிலம் தரிசாகக் கிடக்கிறது.

இரண்டு 500 அடி ஆழ்துளை கிணறுகள் மற்றும் எங்கள் 55 அடி கிணறு அனைத்தும் வறண்டுவிட்டன. நான் இந்தக் கால்நடைகளுக்கு உணவளிக்கவில்லை என்றால், அவை எப்படி உயிர்வாழும்?” என்றார்.
இப்போது வாங்கி வந்திருக்கும் தீவனம் சில மாதங்களுக்கு அவரது 12 கால்நடைகளுக்கு உணவளிக்க போதுமானது. ஆனால் அவர் சாதாரண கட்டணத்தை விட கிட்டத்தட்ட இருமடங்கு பணம் செலுத்தி வாங்கி இருக்கிறார். ஒரு கிலோ ரூ.3 முதல் ரூ.4 வரை விற்கப்பட்ட தீவனம் தற்போது கிலோ ரூ.9 ஆக உள்ளது.
பெரும்பாலான இடங்களில் கால்நடைகள் கடன் வாங்கி பெறப்பட்ட தீவனத்தையும், விலைக்கு வாங்கப்பட்ட தண்ணீரையும் குடித்து வருகின்றன. அங்குள்ள குப்சங்கி கிராமத்தில் வசிக்கும் பால் பண்ணை விவசாயி சுதர்சன் சௌகுலே, தீவனம் வாங்க பால் கூட்டுறவு சொசைட்டியில் சுமார் ரூ.4 லட்சம் கடன் வாங்கியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் தலா ரூ.1.2 லட்சம் செலவு செய்து வாங்கிய எருமை மாடுகளின் மதிப்பு இப்போது சந்தையில் கால் பங்குக்கூட கேட்க ஆள் இல்லாமல் இருக்கிறது.
பால் விலை குறைந்துள்ள நிலையில், தீவனம் மற்றும் தண்ணீர் விலை உயர்ந்துள்ளது. இது குறித்து செளகுலே கூறுகையில், ”நான் கடன் வாங்கிய பணத்தில் 15 டன் தீவனங்களை வாங்கினேன். நான் விலங்குகளுக்கு தண்ணீரும் விலைக்கு வாங்க வேண்டியிருக்கிறது. நாங்கள் எப்படியாவது சமாளித்து வருகிறோம். ஆனால் இதை எங்களால் எப்போதும் செய்ய முடியாது. நிலைமை மோசமாகும் முன் அரசாங்கம் தீவன முகாம்களைத் தொடங்க வேண்டும்” என்றார்.
விவசாயிகள் தீவனத்திற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். பல குடும்பங்கள் தாங்கள் கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அதிகமான விவசாயிகள் கடனில் இருக்கிறார். சில விவசாயிகள் தீவனம் வாங்க பணம் இல்லாமல் தங்களுக்கு வாழ்வளித்த கால்நடைகளை மார்க்கெட் விலையை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் கால்நடைகளை வாங்குவதற்குக்கூட ஆள் இல்லாமல் இருக்கிறது. கால்நடைகளை வாங்கிய விலையில் இருந்து பாதி விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகமான விவசாயிகள் தங்களது மனைவியின் தாலி செயினை அடமானம் வைத்து கால்நடைகளுக்கு தீவனம் வாங்கி வந்து கொடுக்கின்றனர். இது குறித்து விவசாயிகள் நல ஆர்வலர் அங்குஷ் கூறுகையில், “மக்கள் தங்களிடம் இருந்த ஒவ்வொரு பண ஆதாரத்தையும் தீர்ந்துவிட்டனர். உறவினர்கள், சங்கங்கள் மற்றும் கடன் வழங்குபவர்களிடம் கடன் வாங்கியுள்ளனர். பலர் கால்நடைகளை வாங்குவதற்கு ஏற்கனவே கடன் பெற்றுள்ளனர். இப்போது அந்த விலங்குகளை வாழ வைப்பதற்காக புதிய கடன்களை வாங்குகின்றனர்” என்று தெரிவித்தார்.

13 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை
மகாராஷ்டிராவில் 2022ம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் வரை 13,128 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இது சராசரியாக தினசரி எட்டுக்கும் அதிகமாகும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் இது தெரிய வந்துள்ளது. ஆனால் மாவட்ட வாரியான புள்ளிவிவரங்களை வழங்க அரசு மறுத்துவிட்டது. தற்கொலை செய்த விவசாயிகளில் நிதி உதவிக்கு தகுதியான 7,850 விவசாயிகள் குடும்பம் தலா ஒரு லட்சம் பெற்றுள்ளன.
“தேவையற்ற வதந்திகள்.. "- கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன்
October 28, 2026
"திருநீறு, ருத்ராட்சையுடன் திருவள்ளுவர் ஓவியம்; திருப்பரங்குன்றம் விவகாரத்திலும்..!"- வானதி கோரிக்கை
October 28, 2026
அன்பில் மகேஸ் கைது; பெண் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு – பின்னணி என்ன?
October 28, 2026
செஞ்சி: `கோயிலில் வெள்ளைப் பூ வந்தது.. என் மகள் உயிருடன் வருவாள்!’ – நம்பிக்கையுடன் சிறுமியின் தாய்
October 28, 2026
'ஒன்றிய அரசின் பாதையில் தவெக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை..!'- சிபிஐ வீரபாண்டியன் பேட்டி
October 28, 2026
சோப்பு நுரை: “என்னை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணீங்க இப்போ எங்கே போனீங்க" – செல்லூர் ராஜூ கலகல
October 28, 2026
Chris Mason: Budget felt cautious despite its range of small measures
October 28, 2026
Your pay, energy bills and savings: How the Budget affects you
October 28, 2026
Davies crossing divide between pitch and boardroom
October 28, 2026
Update to iOS 27.2 Now to Patch Hundreds of Bugs
October 28, 2026
Cheika happy to 'fly the flag' for Lebanon
October 28, 2026
Watch: What are the key points from the Budget and how will they be funded?
October 28, 2026