பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை அண்ணா நகர் பாங்க் ஆப் இந்தியா வங்கியிலிருந்து 13 கிலோ எடை கொண்ட தங்கக் கவசத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வருகை தந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “தேவர் ஜெயந்தி முன்னிட்டு தங்க கவசத்தை எடுத்து ஒப்படைத்துள்ளோம். முதலமைச்சர் எதைப் பற்றியும் வாயைத் திறப்பது இல்லை. அவரது அமைச்சர்கள் எதோ பேசுகிறார்.

அசுரவேகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், லஞ்சம் அதிகம் நடப்பது இந்த ஆட்சியில்தான். ஆனால் இதனைக் கட்டுபடுத்துவதற்கு இவர் காவல்துறையைக் கட்டுப்பாட்டில் வைக்கவில்லை. கொள்ளையடிக்கிறான் போகிறான், தலையை வெட்டுகிறான் எந்தவித கட்டுப்பாடும் இல்லை. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை. விலைவாசி விண்ணைத்தொடுகிறது இனிமேல் வாழவே முடியாது.

திமுக 25 ஆண்டுகள், அதிமுக 31 ஆண்டுகள் எனத் திமுக, அதிமுகவும் சிறப்பான ஆட்சிகளைக் கொடுத்துள்ளோம். ஆனால் இப்போதைய ஆட்சியில் அரிசி, எண்ணைய் என அனைத்து விலையும் உயர்ந்துவிட்டது; அரிசி பதுக்கல் தொடங்கிவிட்டது. மழை பாதிப்பை நம்ம டிவி பார்ப்பது போலதான் அவர்களும் டிவியைத் தான் பார்க்கிறார்கள். பேப்பரில்தான் செய்தி வருகிறது. மாற்று நடவடிக்கை இல்லை.

முத்துராமலிங்க தேவர் சிலையின் தங்க கவசம்
முத்துராமலிங்க தேவர் சிலையின் தங்க கவசம்

நடிகர் தனுஷைப் பார்த்து ஆளுங்கட்சி பதற்றமடைகிறது. நடிகராக 5 ஆண்டு ஆட்சி கொடுத்திருக்கிறார்கள், அடுத்து தனுஷிடம் கொடுத்துவிடுவார்களோ என்று பதட்டமடைகின்றனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தவெகவில் மரியாதை இல்லை. 101ஆவது துணை பொதுச்செயலாளராக உள்ளார். தனுஷிற்குப் பின்னால் பாஜக இருந்தால் என்ன; பாஜகவுடன் பேசுவதில் என்ன தவறு; நாங்கள் பாஜகவுடன்தான் இருக்கிறோம்

தனுஷ் அதிமுகவிற்கு வருவாரா? பாஜகாவிற்கு வருவாரா எனக் கேட்கிறார்கள். பாஜகவில் இருந்தால் தவறு ஒன்றுமில்லை. விஜய் அரசு இந்த 6 மாசம் தாண்டட்டும் எதோ அதிர்ஷ்டத்தில் வந்துவிட்டார்.

அதிமுக – பாஜக கூட்டணி் 45 ஆயிரம் வாக்குகள் வாங்கியிருக்கிறோம். அதிமுக இருக்கிறதா எனக் கேட்கும் நிர்மல்குமாருக்கு கண் தெரியுமா? பரமசிவன் பாம்பு கழுத்தில் இருக்கும் பாம்பு போல மாறியுள்ளார் நிர்மல்குமார். அதிமுக என்பது தனிப்பட்ட பலம்,

தவெகவை ஆதரித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போதைய ஆட்சி குறித்து பேசுவது நியாயமானது. நாங்கள் வரவேற்கிறோம் பாராட்டுகிறோம், கரெக்டா தில்லா ஆம்பளைகள்போல பேசுகின்றனர். ஆனாலும் அதற்கு பின்னாலும் ஆதரிப்பது ஏன்?சண்முகமும் வீரபாண்டியும் சிந்தித்தால் நல்லா இருக்கும்.

தனுஷ்

நாங்கள்தான் நிரந்தரமாக இருப்போம், அதிமுகவிற்கு டெபாசிட் கிடைக்காது என்றார் நிர்மல்குமார். ஆனால் அவரது கூட்டணி கட்சிதான் டெபாசிட் இழந்துள்ளது” என்றார்.

‘ஒருங்கிணைந்த அதிமுக வாய்ப்புள்ளதா?’ என்ற கேள்விக்கு, “3 பேர்தான் சென்றுள்ளனர். அவர்களுக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை.

இந்த ரெயில் செங்கொட்டை டெல்லிக்குப் போய்கொண்டு இருக்கிறது. ஏறிகொண்டால் எல்லோரும் பத்திரமாகச் சேரலாம்; அங்குபோனால் மந்திரி பதவி கிடைக்கும் என்கிறார்கள்; பல விஷயங்களுக்காக மன்னிப்புக் கேட்டு சிலர் வந்திருக்கிறார்கள். அதற்குப் பின்னாலும் ஒழுங்காக நடக்கவில்லை என்றால் பொதுச்செயலாளர் நடவடிக்கை எடுப்பார்” என்றார்.

‘சசிகலா, டிடிவி ஒருங்கிணைப்பா என்ற கேள்விக்கு?’ என்ற கேள்விக்கு, “அதை அவர்களிடம் கேளுங்கள், அதைப் பற்றி தெரியவில்லை. பொதுச்செயலாளர் பசும்பொன்னிற்கு வருகை தருகிறார்.

அதிமுகவை வீழ்த்திவிடலாம் எனக் கதைகள் சொல்கிறார்கள் அதனை நம்ப வேண்டாம், வருடா வருடம் அம்மா வந்தார்கள்; எடப்பாடி தவறாது வருகிறார், தேவர் சமூகம் மட்டுமல்ல; அத்தனை சமுதாயமும் ஆதரிக்கும் ஒரே கட்சி அதிமுகதான்” என்றார்.

விஜய்
விஜய்

‘பாமக – தவெகவில் கூட்டணிக்குச் செல்கிறதா?’ என்ற கேள்விக்கு, “யூகம் அது; அவர்கள் இடைத்தேர்தலில் வேலை பார்க்கவில்லை, எங்கு வேலை பார்த்தார்கள் எனத் தெரியும். மறுபடியும் கூட்டணிக்கு வருகிறார்களா? என பொதுச்செயலாளர்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஆதவ் அர்ஜுனா அதிமுக, தவெகவும் ஒன்றுதான் என்றால் அதிமுகவின் திட்டத்தைச் செயல்படுத்துங்கள். அம்மா, எம்ஜிஆரை முதலமைச்சர் ஆதரித்தால் அவர்களது படத்தைப் பின்னால் போட சொல்லுங்கள். இந்தக் கட்சி பள்ளத்தில் போகிறது என்பதால் எம்ஜிஆர், அம்மாவை கையில் தூக்கி அவர்களது திட்டங்களை எடுத்துநடத்துகிறார்கள்” என்றார்

More in TamilNews
“தேவையற்ற வதந்திகள்.. "- கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன் “தேவையற்ற வதந்திகள்.. "- கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன் October 28, 2026 "திருநீறு, ருத்ராட்சையுடன் திருவள்ளுவர் ஓவியம்; திருப்பரங்குன்றம் விவகாரத்திலும்..!"- வானதி கோரிக்கை "திருநீறு, ருத்ராட்சையுடன் திருவள்ளுவர் ஓவியம்; திருப்பரங்குன்றம் விவகாரத்திலும்..!"- வானதி கோரிக்கை October 28, 2026 அன்பில் மகேஸ் கைது; பெண் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு – பின்னணி என்ன? அன்பில் மகேஸ் கைது; பெண் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு – பின்னணி என்ன? October 28, 2026 செஞ்சி: `கோயிலில் வெள்ளைப் பூ வந்தது.. என் மகள் உயிருடன் வருவாள்!’ – நம்பிக்கையுடன் சிறுமியின் தாய் செஞ்சி: `கோயிலில் வெள்ளைப் பூ வந்தது.. என் மகள் உயிருடன் வருவாள்!’ – நம்பிக்கையுடன் சிறுமியின் தாய் October 28, 2026 'ஒன்றிய அரசின் பாதையில் தவெக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை..!'- சிபிஐ வீரபாண்டியன் பேட்டி 'ஒன்றிய அரசின் பாதையில் தவெக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை..!'- சிபிஐ வீரபாண்டியன் பேட்டி October 28, 2026 சோப்பு நுரை: “என்னை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணீங்க இப்போ எங்கே போனீங்க" – செல்லூர் ராஜூ கலகல சோப்பு நுரை: “என்னை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணீங்க இப்போ எங்கே போனீங்க" – செல்லூர் ராஜூ கலகல October 28, 2026

See all 589 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *