ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழா பசும்பொன்னில் யாக வேள்வியுடன் தொடங்கி நடந்து வருகிறது.
நிறைவு நாளான இன்று (30-ந்தேதி) பசும்பொன்னில் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள்.
இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் முதல்வர் விஜய் பங்கேற்பார் எனத் தகவல் வெளியானது. ஆனால் முதல்வர் பங்கேற்கவில்லை என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும், நடிகருமான கருணாஸ் பசும்பொன்னில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அய்யாவின் குருபூஜை விழாவில், முதன்முறையாக நேரடியாக முதல்வர் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறப்பட்டது. கடைசி நேரத்தில் அந்தப் பயணம் மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் உருவச்சிலைக்கு நேரில் சென்று அரசு சார்பில் மரியாதை செலுத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கையை தேவர் அய்யாவின் தொண்டர்களும், பக்தர்களும் மனதார வரவேற்கிறோம். தமிழ்நாட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் வழிமுறையையோ, முக்குலத்தோர் மக்களையோ புறக்கணித்துவிட்டு யாரும் அரசியல் செய்ய முடியாது என்பது வெளிப்படையான உண்மை.
மாநிலம் முழுவதும் பரவலாக வாழும் இந்தச் சமூக மக்களை ஒதுக்கிவிட்டு எவராலும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை அனைத்து அரசியல் வல்லுநர்களும் அறிவர். சட்டமன்றத்திலும் இதைப் பலமுறை பேசியிருக்கிறேன். எனவே, வரும் காலங்களில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் நேரடியாக பசும்பொன்னுக்கு வருகைதந்து தேவர் அய்யாவின் அருளைப் பெறுவார் என நம்புகிறேன்.

கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே, எதிர்க்கட்சிகள் மீது வழக்குத் தொடர்வது, அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளை அரசியல் ரீதியாகப் பயன்படுத்துவது இந்தியா முழுவதும் தொடர்கதையாக உள்ளது. தற்போது அன்பில் மகேஸ் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவரது முன்ஜாமீன் மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அவர் தவறு செய்யவில்லை என்பதையும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்பதையும் சட்டரீதியாக எதிர்கொண்டு நிரூபிப்பார். நடிகர் தனுஷ் தன் அரசியல் வருகை குறித்து இன்னும் தனது தெளிவான நிலையை வெளிப்படுத்தாதபோது, நாமாகவே ஏன் யூகங்களின் அடிப்படையில் கற்பனை செய்து, படம் வரைந்து, கண், மீசை எல்லாம் வைக்கவேண்டும். அவர் தனது அதிகாரப்பூர்வ முடிவை அறிவிக்கும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்.. திவாலாகும் அனில் அம்பானி? உலகமே அறிய வேண்டிய அண்ணன் தம்பி பாடம்
November 4, 2026
'பிரஷர் ஏறி நொந்து போயிருக்கேன்!' – 20% கமிஷன் சர்ச்சை; கொதிக்கும் தவெக எம்.எல்.ஏ குழந்தைராணி!
November 4, 2026
"அங்கிள் விஜய் அவர்களே, இது சாதாரண ஆபீஸ் வேலை கிடையாது!" – மு.க. ஸ்டாலின் தாக்கு!
November 4, 2026
இனி இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் சீறிப்பாயலாம்.. 4 நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி
November 4, 2026
"அலறும் ஈரான்".. இந்தியா உள்பட 4 நாடு கப்பல்களுக்கு மட்டும் ஹார்முஸ் சந்தியில் அனுமதி ஏன்? பின்னணி
November 4, 2026
“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தலைப்பில் விதிகளுக்குப் புறம்பாக கல்லூரி நிகழ்வு…" – சு.வெங்கடேசன்
November 4, 2026
KFC Reveals Official Avengers: Doomsday Menu 'Worthy' of Dr. Doom
November 4, 2026
The Budget-Friendly Flashforge Adventurer 5M 3D Printer Drops to a Mere $131 Ahead of Black Friday
November 4, 2026
Watch: PM and Ed Miliband play steel drums in Antigua
November 4, 2026
Photos: Iran marks US embassy takeover with rallies against US, Israel
November 4, 2026
Get a Nintendo Switch 2 Console (USA Model) for $448 During the AliExpress Early Black Friday Sale
November 4, 2026