தமிழக முதலமைச்சர் விஜய், வரும் நவம்பர் 2-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதன்முறையாக அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் முதன்முறையாக புதுக்கோட்டைக்கு வருகை தருவதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன.
திருச்சி சரக ஐ.ஜி. நேரில் ஆய்வு:
முதலமைச்சரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்சி சரக ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேற்று
( அக்டோபர்-29) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் பயணிக்கும் முக்கிய வழித்தடங்கள், அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் மற்றும் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஹெலிபேட் தளம் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரகுமார் குப்தா, மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோருடன் இணைந்து ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து, உரிய பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கினார்.

புதிய பஸ் நிலையம் – உள்விளையாட்டு அரங்கம் திறப்பு:
புதுக்கோட்டை சத்தியமூர்த்தி சாலையில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட புதிய உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, பல்வேறு துறைகள் சார்பில் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் உரை நிகழ்த்துகிறார்.

தனி விமானம் மூலம் பயணம்:
விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் வரும் 2-ந்தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வருகை தருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாகவோ அல்லது சாலை மார்க்கமாகவோ புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்குச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரமாண்ட ‘ரோடு ஷோ’:
புதுக்கோட்டை வருகை தரும் முதலமைச்சருக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புதுக்கோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக முதலமைச்சர் விஜய் காரில் சென்று, பொதுமக்களைச் சந்திக்கும் வகையில் பிரமாண்ட ‘ரோடு ஷோ’ நடத்தத் தவெக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டு வருகிறது.
விராலிமலை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், முதலமைச்சரின் இந்தப் புதுக்கோட்டை வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் தவெக தரப்பில் பெரும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்.. திவாலாகும் அனில் அம்பானி? உலகமே அறிய வேண்டிய அண்ணன் தம்பி பாடம்
November 4, 2026
'பிரஷர் ஏறி நொந்து போயிருக்கேன்!' – 20% கமிஷன் சர்ச்சை; கொதிக்கும் தவெக எம்.எல்.ஏ குழந்தைராணி!
November 4, 2026
"அங்கிள் விஜய் அவர்களே, இது சாதாரண ஆபீஸ் வேலை கிடையாது!" – மு.க. ஸ்டாலின் தாக்கு!
November 4, 2026
இனி இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் சீறிப்பாயலாம்.. 4 நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி
November 4, 2026
"அலறும் ஈரான்".. இந்தியா உள்பட 4 நாடு கப்பல்களுக்கு மட்டும் ஹார்முஸ் சந்தியில் அனுமதி ஏன்? பின்னணி
November 4, 2026
“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தலைப்பில் விதிகளுக்குப் புறம்பாக கல்லூரி நிகழ்வு…" – சு.வெங்கடேசன்
November 4, 2026
KFC Reveals Official Avengers: Doomsday Menu 'Worthy' of Dr. Doom
November 4, 2026
The Budget-Friendly Flashforge Adventurer 5M 3D Printer Drops to a Mere $131 Ahead of Black Friday
November 4, 2026
Watch: PM and Ed Miliband play steel drums in Antigua
November 4, 2026
Photos: Iran marks US embassy takeover with rallies against US, Israel
November 4, 2026
Get a Nintendo Switch 2 Console (USA Model) for $448 During the AliExpress Early Black Friday Sale
November 4, 2026