ஜெர்மனியில் கல்வி மற்றும் பொதுச் சேவைகளுக்கான நிதியை அதிகரிக்க வலியுறுத்தியும், கட்டாய ராணுவ சேவைத் திட்டத்தைக் கைவிடக் கோரியும் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ‘Gen Z regelt’ என்ற அமைப்பின் சார்பில் நேற்று நாட்டின் 34 நகரங்களில் பேரணிகள் நடைபெற்றன. அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, ஃபிராங்க்பர்ட் உள்ளிட்ட இடங்களில் இரவில் கடைகள் சூறையாடப்பட்டு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது.
கல்வி முதல் ராணுவ சேவை வரை… கோரிக்கைகள் என்ன?
கல்வி உள்கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது, பொதுச் சேவைகளைப் பாதுகாப்பது, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது ஆகியவையே போராட்டக்காரர்களின் முதன்மை கோரிக்கைகளாக இருக்கின்றன. இதனுடன், கட்டாய ராணுவ சேவையை மீண்டும் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டு வருவதற்கு இளைஞர்கள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

‘Gen Z regelt’ அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் போராட்டங்கள், சமூக ஊடகப் பிரசாரங்கள் மூலமே பெருமளவில் முன்னெடுக்கப்பட்டன. நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஃபிராங்க்பர்ட்டில் வன்முறை…
கொளுந்துவிட்டு எறிந்த போராட்டம்!
பகலில் அமைதியான முறையில் நடைபெற்ற பேரணிகள், மாலைக்குப் பிறகு வன்முறையாக உருவெடுத்தன. ஃபிராங்க்பர்ட்டின் முக்கிய வணிகப் பகுதியான ‘ஸெய்ல்’ (Zeil) பகுதியில் கடைகளின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டு, சூறையாடப்பட்டன. காவல்துறையினர் மீது பட்டாசுகள், கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த காவல்துறையினர் பொதுமக்களை வெளியேற்றினர்.

இதேபோல ஹாம்பர்க் நகரில் சாலைத் தடுப்புகளுக்குத் தீ வைக்கப்பட்ட நிலையில், போராட்டக்காரர்களைக் கலைக்கக் காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களைப் பயன்படுத்தினர். கொலோன், ஸ்டுட்கார்ட், பெர்லின் உள்ளிட்ட நகரங்களிலும் மோதல் சம்பவங்கள் பதிவாகின. இதில் பல காவல்துறையினர் காயமடைந்தனர்.
அமைப்பாளர்களின் விளக்கம்
போராட்டங்களை ஒருங்கிணைத்த அமைப்பு, வன்முறைச் சம்பவங்களுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது. அதிகாரபூர்வப் போராட்டங்கள் முடிவடைந்த பின்னரே இந்த வன்முறைகள் நடந்துள்ளதால், தங்களது நியாயமான கோரிக்கைகளிலிருந்து வன்முறையைப் பிரித்துப் பார்க்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதேவேளையில், தெளிவற்ற தலைமை மற்றும் ஒருங்கிணைப்பு முறையைக் காரணம் காட்டி, ஜெர்மனியின் தேசிய மாணவர் அமைப்பான ‘Bundesschülerkonferenz’ இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டது.
இளைஞர்களின் சமூக மற்றும் பொருளாதாரக் கோரிக்கைகளை அரசு எவ்வாறு கையாளப்போகிறது என்பதும், வன்முறையைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுமே ஜெர்மனியின் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்கும்.
"எம்.ஜி.ஆர் துரைமுருகனை தன் கட்சியில் சேர அழைத்தார், ஆனால் அண்ணன்..!" – மு.க.ஸ்டாலின் பகிர்வு
November 1, 2026
'திமுக எழுப்பும் கேள்விக்கு தவெக பதில் சொல்லித்தான் ஆகணும்.!'- பாஜக வானதி சீனிவாசன்
November 1, 2026
"இப்போதெல்லாம் மின்கட்டணத்தைக் கேட்டாலே ஷாக் அடிக்குது"- தவெக வை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
November 1, 2026
வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்: ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் விஜய்!
November 1, 2026
இந்தியா கூட்டணி: பழைய கம்பீரம்; மாறாத பாணி- மாதிரி நடாளுமன்றத்தில் மீண்டும் ஒலித்த மீரா குமார் குரல்
November 1, 2026
வேலைக்கு நடுவே திடீரென மயங்கி விழுந்த இளம்பெண் – அறிகுறி இன்றி வரும் இந்த பாதிப்பை தடுப்பது எப்படி?
October 31, 2026
சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டும் முகேஷ் அம்பானி.. ஜியோ ஐபிஓ-வுக்கு புதிய வழியில் கல்லா கட்டும் ரிலையன்ஸ்..!
November 1, 2026
"எம்.ஜி.ஆர் துரைமுருகனை தன் கட்சியில் சேர அழைத்தார், ஆனால் அண்ணன்..!" – மு.க.ஸ்டாலின் பகிர்வு
November 1, 2026
Oil tank vandalism results in waterfowl park 'nightmare'
November 1, 2026
'Rok' solid recognition for Slovenian space scientist
November 1, 2026
Rare damselfly spotted by restored chalk river
November 1, 2026
Woman with disability dies in midnight fire at Korattur apartment
November 1, 2026