சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில், ஊர்வசி, ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

‘விடாமுயற்சி’ திரைப்படத்தைத் தொடர்ந்து இதிலும் மிரட்டும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரெஜினா. அவரை ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காகச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.

Mookuthi Amman 2
Mookuthi Amman 2

நம்மிடையே பேசியவர், “என் திரைப்பயணத்திலேயே முதல்முறையாக இந்த மாதிரியான ஒரு பெரிய கமர்சியல் படத்தில் வில்லியாக நடித்திருக்கிறேன். தொழில்நுட்ப ரீதியாகவும் எமோஷனல் ரீதியாகவும் ஒவ்வொரு தருணத்தையும் மிகவும் ரசித்துச் செய்தேன்.

உங்களுக்கும் அதே போன்றதொரு அனுபவம் கிடைக்கும். நான் வருகின்ற காட்சிகள் மற்றும் ஷாட்டுகளில் கிராபிக்ஸ் அதிகமாக இருக்கும். இயக்குநர் சுந்தர் சி சார் கூறியது போல், படத்தில் குறைந்தபட்சம் 3,000 சிஜி ஷாட்கள் உள்ளன.

கிராபிக்ஸுக்காக ஒரு பெரிய குழு கடந்த ஒரு வருடமாக உழைத்து வருகிறது. வரலாற்றுப் படங்கள் என்றாலே ஹெவி மேக்கப் மற்றும் ஆடைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒரு நடிகையாக நான் அதை மிகவும் ரசித்துச் செய்கிறேன்.

மேக்கப் போட நேரம் எடுக்கும் என்றாலும், மனதளவில் அதை ஏற்றுக்கொண்டு செய்யத் தொடங்கிவிட்டால் அது கடினமாகத் தெரியாது. சுந்தர் சி சார் தனது ஃபேண்டஸி உலகில் ஓர் அம்மன் படத்தைத் தனது சொந்த முத்திரையோடு கமர்சியலாக உருவாக்கியிருக்கிறார்.

அதில் நான் வில்லியாக நடித்திருப்பதும் முற்றிலும் புதிய அனுபவம். தினமும் என் மேக்கப்பிற்கே 2 மணி நேரம் செலவாகும்.

குறிப்பாக என் இண்ட்ரோ காட்சிக்கு தேன் மற்றும் பிஸ்தா பச்சை நிறத்திலான ஒரு பிசுபிசுப்பான திரவத்தைத் தலை முதல் கால் வரை என் மீது ஊற்றிவிட்டார்கள். அதைச் சமாளித்து நடித்ததே ஒரு தனி அனுபவம்தான்” என்றார்.

Regina Cassandra Interview - Mookuthi Amman 2
Regina Cassandra Interview – Mookuthi Amman 2

‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்திற்காக நடிகை நயன்தாராவுக்கு 60 அடியில் கட்-அவுட்டை அவருடைய ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள்.

அது குறித்துப் பேசிய ரெஜினா, “பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி ஆண் சூப்பர் ஸ்டார்களுக்கு மட்டுமே பிரமாண்டமான கட்-அவுட்கள் வைக்கப்பட்டுப் பார்த்திருக்கிறோம்.

ஆனால் நடிகைகளுக்கு அதை யாரும் செய்ததில்லை. நயன்தாராவிற்கு கட்-அவுட் வைக்கப்பட்ட பிறகுதான், ராதிகா மேமிற்கு ‘தாய் கிழவி’ படத்திற்காக கட்-அவுட் வைத்திருந்த விஷயம் எனக்குத் தெரியவந்தது.

30-40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் சாதித்து வரும் ராதிகா மேமிற்கு இப்போதுதான் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆண் நடிகர்களுக்கு இணையான பிரமாண்ட கட்-அவுட்கள் நயன்தாரா, ராதிகா போன்ற பெண் நடிகைகளுக்கும் வைக்கப்படுவது திரையுலகில் ஆரோக்கியமான ஒரு மாற்றத்தின் அடையாளம்” என்றவர், “‘விடாமுயற்சி’ திரைப்படத்திற்குப் பிறகு எனக்கு வில்லி கதாபாத்திரங்கள் நிறைய வருகின்றன.

Regina Cassandra Interview - Mookuthi Amman 2
Regina Cassandra Interview – Mookuthi Amman 2

அந்த வரிசையில்தான் ‘மூக்குத்தி அம்மன் 2’ பட வாய்ப்பும் வந்தது. அஜித் சாருடன் ‘விடாமுயற்சி’ போன்ற பெரிய திரைப்படத்தில் நடித்த பிறகு, எந்தவொரு திரையுலகிலும் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களுக்குள் நடிகர்களை அடைப்பது மிகவும் எளிதாக நடந்துவிடும்.

ஆனால், அப்படி நடந்துவிடக் கூடாது என்பதில் நான் மிகத் தெளிவாக இருக்கிறேன். அதன் காரணமாகவே நான் மிகவும் கவனமாக, குறைந்த அளவிலான திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்” எனப் பகிர்ந்துகொண்டார்.

More in Cinema
நீலாம்பரி கார்.. கருணாஸ் எப்போதுமே கெத்துதான்.. யாருக்காகவும் கவலைப்பட மாட்டார்.. பிரபலம் ஓபன் நீலாம்பரி கார்.. கருணாஸ் எப்போதுமே கெத்துதான்.. யாருக்காகவும் கவலைப்பட மாட்டார்.. பிரபலம் ஓபன் November 3, 2026 விஜே பிரியங்காவுக்கு வளைகாப்பு.. கணவரும், மனைவியும் செம மகிழ்ச்சி.. சீக்கிரம் வாரிசு வந்துடும் விஜே பிரியங்காவுக்கு வளைகாப்பு.. கணவரும், மனைவியும் செம மகிழ்ச்சி.. சீக்கிரம் வாரிசு வந்துடும் November 3, 2026 அம்மா வேண்டாம் என முடிவு எடுத்தாயா?.. போராடியிருக்கலாம்.. மகளை நினைத்து விஜய் ஆண்டனி மனைவி உருக்கம் அம்மா வேண்டாம் என முடிவு எடுத்தாயா?.. போராடியிருக்கலாம்.. மகளை நினைத்து விஜய் ஆண்டனி மனைவி உருக்கம் November 3, 2026 ரஜினிகாந்துக்கு இல்லை.. சூர்யாவுக்கு மட்டும் 6 மணி ஷோவா?.. விஜய்க்கு எதிராக கிளம்பிய சர்ச்சை! ரஜினிகாந்துக்கு இல்லை.. சூர்யாவுக்கு மட்டும் 6 மணி ஷோவா?.. விஜய்க்கு எதிராக கிளம்பிய சர்ச்சை! November 3, 2026 டேர் டெவில் பூஜை.. ஷாலினிக்கு கிஃப்ட் செய்த பார்த்திபன்.. பழங்கால பொருளை தேடி பிடிச்சிருக்காரு டேர் டெவில் பூஜை.. ஷாலினிக்கு கிஃப்ட் செய்த பார்த்திபன்.. பழங்கால பொருளை தேடி பிடிச்சிருக்காரு November 3, 2026 "பழையன நினைத்தல், புதியன புகுத்தல்" – ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவராகப் பதவியேற்ற எஸ்.சரவணன் பாலிசி! "பழையன நினைத்தல், புதியன புகுத்தல்" – ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவராகப் பதவியேற்ற எஸ்.சரவணன் பாலிசி! November 2, 2026

See all 234 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *