த.வெ.க-வுக்கு எதிர் அரசியல் செய்வதில் தி.மு.க தலைவர் பட்டாசாய் வெடித்துவரும் நிலையில் பூஸ்வானமாகப் போயிருக்கிறது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அரசியல் நகர்வுகள்.
‘தலைவரே இவ்வளவு ஆக்டிவ்வாக இருக்கும்போது, சின்னவர் எங்கே.. ஓய்வில் இருக்கிறாரா என வெடிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், “த.வெ.க ஆட்சியமைந்த நாள் முதலே சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொலை, கொள்ளை, குழந்தை கடத்தல், போதை பொருள் புழக்கம் என தமிழ்நாடே ரணகளமாகிக் கிடக்கின்றன. செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை மறுபக்கம் சிறையிலிருந்து குற்றவாளிகள் தப்பியோடி வருகிறார்கள்.
பயிர்கடன் தள்ளுபடிக்காக விவசாயிகளும் புதிய தலைமை செயலகம் அமைக்கக் கூடாதென மீனவர்களும் ஊதிய சிக்கல்கள் குறித்து ஒப்பந்த ஊழியர்கள் போராடுகிறார்கள். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கவிருக்கும் சைக்கிள் கொள்முதலில் முறைகேடு, டெண்டர் ரத்து செய்யப்படுவதில் தெளிவின்மை என த.வெ.க அரசில் எக்கசெக்க சிக்கல்கள் தலைவிரித்தாடுகின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் உதயநிதி இவ்விவகாரங்களை வைத்துக் கொண்டு அரசுக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம், ஆனால் ஏனோ தெரியவில்லை அறிக்கை விடுவதோடு நிறுத்திக் கொள்கிறார். எங்கள் தலைவர் எம்.எல்.ஏ-வாகக்கூட இல்லாத நிலையிலும் த.வெ.க-வின் அட்டூழியங்களை இடித்துரைக்கிறார். ஆனால், உதயநிதியும் முதல்வர் விஜய்யை போலவே பிரஸ்மீட் கூட நடத்துவதில்லை” என்கிறார்கள்.

சட்டப்பேரவை நிகழ்வுகளின் போது ஆக்ட்டிவாக இருந்த உதயநிதி, இப்போது அமைதியாகிவிட்டார். முன்னர் மென்மையாக விமர்சித்து வந்த திமுக தலைவர் ஸ்டாலின் இப்போது அடித்து ஆடுகிறார்.
இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர்கள் சிலர், “த.வெ.க ஆட்சியமைந்ததும் ஆளும் தி.மு.க-வைவிட எதிர்க்கட்சியாக தி.மு.க வீரியமாக களமாடும் என்றெல்லாம் பில்டப் கொடுத்தார்கள், தி.மு.க தலைவர் ஸ்டாலினை தவிர அங்கே யாருமே எதிர்க்கட்சி அரசியலை முன்னெடுக்கவில்லை. விஜய் VS உதய் என தமிழக அரசியல் மாறிவிட்ட பிறகும் உதயநிதி குறிஞ்சி இல்லத்தைவிட்டு வெளிவர மறுக்கிறார். எதற்கெடுத்தாலும் ‘அறிக்கை கொடுத்துவிடுங்கள்.. பார்த்துக் கொள்ளலாம்’ என அசால்ட்டாக இருப்பதால் சீனியர்கள் உடன்பிறப்புகள் தொடங்கி தொண்டர்கள் வரை உதயநிதிமீது ஆதங்கத்தை கொப்பளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். உடனடியாக உதயநிதி தனது அரசியல் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்றனர்.
US Elections: அமெரிக்க செனட் வரலாற்றில் முதல் தன்பாலின ஈர்ப்பாளர்; இணையுடன் மேடையேறிய கிறிஸ் பப்பாஸ்
November 5, 2026
இடைத்தேர்தல் ரேஸ்: ED போடும் பிரஷர்… விராலிமலையை வசமாக்க முயற்சியில் 'ரசகுல்லா' விஜயபாஸ்கர்!
November 5, 2026
6am Special Show: "பொழுதுபோக்குக்கு முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வளர்ந்திருக்கிறது?" – சீமான்
November 5, 2026
வாளுடன் வன்முறை வீடியோ: 34 வழக்குகள், 9 கைது, 210 அக்கவுண்ட்கள் முடக்கம்; சிவகங்கையில் அதிரடி
November 5, 2026
'முதலமைச்சரே மாணவர்களிடம் பாரபட்சம் காட்டலாமா?' – சர்ச்சையாகும் தவெகவின் கல்வி விருது!
November 5, 2026
Yuvraj Singh Wants Every Organisation to Run Its Own University
November 5, 2026
Fisherfolk seek transparency over proposed Tamil Nadu Secretariat complex at Pattinapakkam
November 5, 2026
'What a ride' – Meet the UFC's longest-serving Brit
November 5, 2026
Sheffield-born Jorgensen out to inflict more pain on England
November 5, 2026
ஹூண்டாய் கார்களுக்கு இனி பயன்பாட்டுக்கு ஏற்ப காப்பீடு கட்டணம்: 15% வரை தள்ளுபடி!
November 5, 2026
Ronaldo retires from Portugal duty
November 5, 2026