மும்பையிலுள்ள பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருக்கும் வினோத் (ஹரிஷ் கல்யாண்) பதவி உயர்வுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அவரை கோவாவிலுள்ள லோக்கல் கிளைக்குப் பணிமாற்றம் செய்கிறது நிர்வாகம். கோவாவில் தரையிறங்கும் வினோத்திற்கு, சுற்றுலா வழிகாட்டியான ஃபென்னியைக் (சித்தி இத்னானி) கண்டு ஈர்ப்பு வருகிறது.

ஃபென்னியை வைத்து வெற்றிகரமாக ஒரு நிகழ்ச்சியைச் செய்துகாட்டி, தன்னை நிரூபிக்க முடிவெடுக்கிறார் வினோத். முதலில் மறுத்தாலும், கோமா நிலையில் இருக்கும் தன் காதலர் ரிச்சியின் (ரினில்) மருத்துவச் செலவிற்காக ஒத்துக்கொள்கிறார் ஃபென்னி. இந்தப் பயணத்தில் வினோத்துக்கும் ஃபென்னிக்கும் இடையில் கண்ணாமூச்சி ஆடும் காதலைப் பேசுகிறது இயக்குநர் சசியின் ‘நூறு கோடி வானவில்’.
கோபம், துருதுருப்பு, காதல், அதன் தத்தளிப்பு எனத் துடிப்பான இளைஞர் கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண் கச்சிதம். ஆங்காங்கே தலைகாட்டும் குடும்ப எமோஷனிலும் குறைகளில்லை. கண்மூடித்தனமான காதல், அப்பாவித்தனம், முக்கோணக் காதலோடு மல்லுக்கட்டுவது என எந்நேரமும் எமோஷன்களோடு நடைபோடும் ஃபென்னி கதாபாத்திரத்தை, சில மிகை நடிப்புத் தருணங்களோடு கரைசேர்க்கிறார் சித்தி இத்னானி. ஃபென்னியின் காதலனாக ரினிலின் செயற்கைத்தனமான நடிப்பு பெரிய மைனஸ். கோவை சரளா, தம்பி ராமையா, விஜே பார்வதி, சின்னி ஜெயந்த் ஆகியோர் சொன்னதை மட்டும் செய்திருக்கிறார்கள்.

கோவாவின் பழைமையின் அழகையும், பசுமையின் பொலிவையும் இந்தக் காதல் கதைக்கு டபுள் இன்ஜினாக மாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார். காதல் படத்திற்கான மீட்டரைப் படத்தொகுப்பாளர் எம்.சுபாரத் கச்சிதமாகப் பிடித்திருந்தாலும், பல இடங்களில் வேகத்தைக் கூட்டத் தவறியிருக்கிறார். சித்து குமாரின் ‘போதும் போ’, ‘கண்ணாட்டி’ ஆகிய பாடல்களும், சில பின்னணி இசை கோவைகளும் காதலுக்கு ஸ்ருதி சேர்க்கின்றன.
பரபரப்பான மும்பை இளைஞன் vs நிதானமான கோவா இளைஞி என்ற தொடக்க லைனும், கோவாவின் பின்புலமும் சுவாரஸ்யம் தருகின்றன. ஃபென்னியின் காதல், லட்சியம், வினோத்தின் காதல், அவரது லட்சியம் என மையக்கதை தேவையான திருப்பங்கள், முட்டல் மோதல்களுடன் நகர்ந்தாலும், படம் முழுதும் நீடிக்கும் செயற்கைத்தனம் திரையோடு நம்மை ஒன்றவிடாமல் செய்கிறது. மேலும், திருப்பங்களும் திரைக்கதையும் மேம்போக்காகவும், யூகிக்கும் வகையிலும் நகர்வது பெரிய மைனஸ்.

கண்மூடித்தனமான காதலால் தன் சின்ன சின்ன ஆசைகளையும், லட்சியங்களையும், சுயத்தையும் துறக்கும் பெண்ணுக்கு ஏற்படும் மனப்போராட்டத்தையும், காதலால் மனதிற்குள் வரும் ஊசலாட்டத்தையும் ஃபென்னி கதாபாத்திரம் மூலம் நன்றாகப் பதிவு செய்கிறது திரைக்கதை. ஆனால், ஏற்கனவே கண்மூடித்தனமான காதலிலிருக்கும் பெண்ணுக்கு ஏன் வேறொரு ஆண் மீது காதல் வருகிறது என்பதற்கான அழுத்தமான காட்சிகள் இல்லாமல் இருப்பது குழப்பத்தையே தருகிறது.
திருநர் கதாபாத்திரம் மூலம் இயக்குநர் என்ன நிறுவ வருகிறார் என்பதிலும் குழப்பமே! ஆங்காங்கே மெல்லுணர்வைப் பேசும் காட்சிகளும், சின்ன சின்ன ஒன்லைனர்களும் ஆறுதல் தருகின்றன. கவிதைப்பூர்வமான சில வசனங்கள் ரசிக்க வைத்தாலும், அதே வகையான ஏனைய வசனங்கள் செயற்கைத்தனத்தோடு துருத்திக்கொண்டு நிற்கின்றன.
காதலின் எதார்த்தத்தையும் ஊசலாட்டத்தையும் பேசும் அழகான மையக்கதையை, முழுமையும் தெளிவும் இல்லாத திரைக்கதையால் கலைத்துப் போடுகிறது இந்த ‘நூறு கோடி வானவில்’.
Scene vs Mookuthi Amman 2: தீபாவளி ரேஸ்.. மூக்குத்தி அம்மன் 2வை முடித்து விட்ட சீன்.. தப்பித்த தனுஷ்!
November 11, 2026
சீன் வெற்றி.. சூர்யாவுக்கு ஹாட்ரிக் ஹிட்.. ஜோதிகாவுடன் சேர்ந்து கொண்டாட்டம்.. 8 கிராம் தங்க நாணயம்
November 11, 2026
கீர்த்தி சுரேஷ் கையை பிடித்த தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்.. ஒட்டி உரசுறாருனு பேச்சு.. என்ன இதெல்லாம்?
November 11, 2026
மானிய பணம் மக திருமணக்கு போதும்னு இருந்தேன், மறுத்துட்டாங்க!- பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ துரை மனைவி
November 10, 2026
" 'பிச்சைக்காரன் 3' அடுத்தாண்டு அயூத பூஜைக்கு வரும்!" – விஜய் ஆண்டனி கொடுத்த அப்டேட்!
November 10, 2026
Atlee: "நீ இல்லாமல் நான் ஒன்றுமில்லை!" – மனைவி பிரியா அட்லீ குறித்து அட்லீ
November 10, 2026
தங்கம் விலை ரூ.2,000க்கு மேல் சரிவு..!! தங்கம் விலை மேலும் குறையுமா?
November 11, 2026
வீணாகும் வாழைக் கழிவை பயன்படுத்தி ரூ.2.5 கோடி வருமானம் ஈட்டும் பிசினஸ்! கலக்கும் பீகாரைச் சேர்ந்த 3 நண்பர்கள்!
November 11, 2026
WhatsApp-இல் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்..!! இனி எல்லாமே ஒரே செயலியில்..!! குணால் ஷா அப்டேட்..!!
November 11, 2026
கிளாட் Vs சாட் ஜிபிடி.. நிதி நிர்வாகத்திற்கு சிறந்த AI டூல் எது?
November 11, 2026
AI நம்பி மோசம் போன நிறுவனங்கள்.. மீண்டும் மனிதர்களையே வேலைக்கு அமர்த்த வேண்டிய கட்டாயம்..!!
November 11, 2026
Scientists discover why some mosquitoes love you and others don't
November 11, 2026