நடிகர் மற்றும் சுயாதீன இசைக்கலைஞர் டீஜே இசையில் ‘தேன் குடிக்க 404’ பாடல் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் பின்னணிப் பாடகி பிரகதி, டீஜேவுடன் தான் சேர்ந்து பாடிய பாடல்களுக்குப் ராயல்டி தொகை கொடுக்கப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து டீஜே, அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் தனது விளக்கத்தையும் பதிவிட்டிருந்தார். ‘தேன் குடிக்க 404’ பாடலுக்காக டீஜேவைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் கேட்டோம்.

Teejay Arunasalam
Teejay Arunasalam

நம்மிடையே பேசுகையில், “எங்களது கூட்டணி 2015-ஆம் ஆண்டு தொடங்கியது. 2016-ல் நாங்கள் வெளியிட்ட மியூசிக் வீடியோ மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதுவரை எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை.

நாங்கள் நட்பாகத்தான் இருந்தோம். 2018-ஆம் ஆண்டு ‘நகிலா நகிலா’ பாடல் வெளியான பிறகே, முதன்முறையாகப் பேமெண்ட் குறித்துக் கேட்டார். அப்போது படப்பிடிப்பில் இருந்ததால், ‘போனில் பேசிக்கொள்ளலாம்’ எனக் கூறினேன்.

அதன்பிறகு 2025 மே மாதம் வரை அவர் இது குறித்துப் பேசவே இல்லை. ஆனால், 2025-ல் திடீரென ‘நகிலா நகிலா’ பாடலோடு சேர்த்து ‘தேன் குடிக்க’ பாடலுக்கும் பேமெண்ட்டும், ஸ்ப்ளிட் ராயல்டியும் வேண்டும் எனக் கேட்டது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

இது குறித்து எங்களது வழக்கறிஞர் மூலமாகச் சட்டப்பூர்வ விளக்கம் அளித்தோம். 2022-ல் எனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய பிறகே முறையான ஒப்பந்தப் பேப்பர்வொர்க் குறித்து எனக்கு முழுமையாகத் தெரியவந்தது.

ராயல்டி உரிமை என்பது பாடலாசிரியர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளருக்கு மட்டுமே உரியது. ஒரு சிங்கருக்கு அத்தகைய உரிமை உள்ளதா என IPRS மூலமாகக் கேட்டறிந்தேன். அவர்களும் அப்படி ஒரு உரிமை இல்லை என்றே தெளிவுபடுத்தினர்.

Teejay Arunasalam
Teejay Arunasalam

இந்த உண்மைகளை விளக்கியும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது புதிய பாடல் வெளியாகும் நேரத்தில் இந்த விவகாரத்தைப் பொதுவெளியில் கொண்டு வந்ததை தவறான நகர்வாக பார்க்கிறேன்.

சட்டம் சார்ந்த இந்த விஷயத்தை அவர்கள் சட்டப்பூர்வமாகவோ அல்லது தொழில்முறையிலோ அணுகியிருக்கலாம். இந்தச் செயல் என்னைப் பெரிதும் பாதித்துள்ளது. என் வழக்கறிஞரின் ஆலோசனைப்படி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்” என்றார்.

முழு காணொளியை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

See all 169 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *