திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான மாணவி, தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவியை அவரது தாய்மாமன் மகன் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.

லட்சுமணனின் குடும்பத்தினர் மாணவியின் வீட்டுக்குச் சென்று தங்களின் விருப்பத்தைச் சொல்லி பெண் கேட்டுள்ளனர். ஆனால், மாணவியின் பெற்றோர் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால், கடந்த 6 மாதங்களாக இருவீட்டாருக்கும் பிரச்னை ஏற்பட்டுவந்துள்ளது.

மாணவி கடத்தல்
மாணவி கடத்தல் (சித்தரிக்கப்பட்ட படம்)

இந்த நிலையில், லட்சுமணன் வீடுபுகுந்து அத்தை மகளான மாணவியை வலுகட்டாயமாக திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்துடன் அவரை காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் உடனடியாக அம்பலூர் காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்துள்ளார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய போலீஸார், கள்ளக்குறிச்சிக்கு விரைந்து சென்று மாணவியை மீட்டுள்ளனர். மேலும், இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்ட மாணவியின் தாய் மாமன் சந்திரன், அவரது மகன் லட்சுமணன் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 15 பேரைக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

See all 667 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *