துருவ் விக்ரமிற்கு ‘பைசன்’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்று தந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.

இந்தப் படத்தை டோலிவுட்டின் ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. தமிழில், ‘டியூட்’, ‘குட் பேட் அக்லி’, ‘மொத ராத்திரி’ படங்களைத் தொடர்ந்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

Dhruv Vikram - Jackie
Dhruv Vikram – Jackie

‘ஆதித்ய வர்மா’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கரண் அரவிந்த் குமார், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

நேற்றைய தினம் படத்தின் தலைப்பையும் படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். படத்திற்கு ‘ஜாக்கி’ எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். முழுக்க முழுக்கக் கமர்சியல் படமாக இது இருக்கும் என்பதையும் போஸ்டர் அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது படக்குழு.

இதனைத் தொடர்ந்து டோலிவுட் இயக்குநர் ஒருவருடனும் துருவ் விக்ரம் கைகோத்திருக்கிறார்.

டோலிவுட் இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்திலும் துருவ் விக்ரம், ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். தமிழ் – தெலுங்கு என இருமொழிகளில் இப்படம் உருவாகவிருக்கிறது எனவும் அறிவித்திருக்கிறார்கள்.

Ramesh Varma - Dhruv Vikram
Ramesh Varma – Dhruv Vikram

இயக்குநர் ரமேஷ் வர்மா, தற்போது ‘மகாவீர் கர்ணா’ என்கிற ஹைப்ரிட் லைவ் ஆக்‌ஷன் படத்தில் பிஸியாகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்தியாவின் முதல் ஹைப்ரிட் லைவ் ஆக்‌ஷன் திரைப்படம் இதுதான் எனவும் விளம்பரப்படுத்தப்படுகிறது. ராகவா லாரன்ஸின் 25வது படமான ‘கால பைரவா’ படத்தையும் ரமேஷ் வர்மா இயக்குவதாக அறிவிப்பு முன்பு வெளியாகியிருந்தது.

More in Cinema
M நடிகையின் வளர்ச்சியால் மார்க்கெட்டை இழந்த எம் நடிகைகள்.. நடிகையை முடிக்க கூட்டு சதி ரெடியாம்? M நடிகையின் வளர்ச்சியால் மார்க்கெட்டை இழந்த எம் நடிகைகள்.. நடிகையை முடிக்க கூட்டு சதி ரெடியாம்? September 14, 2026 "ஆனாலும், படிப்புதான் முக்கியம்" – மகன் ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினரானது குறித்து நடிகர் முத்துக்காளை "ஆனாலும், படிப்புதான் முக்கியம்" – மகன் ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினரானது குறித்து நடிகர் முத்துக்காளை September 14, 2026 Vijay: "பிரியமுடன் விஜய், என் அன்பு சகோதரருக்கு..!" – அஜித்துக்கு விஜய் கொடுத்த பரிசு என்ன? Vijay: "பிரியமுடன் விஜய், என் அன்பு சகோதரருக்கு..!" – அஜித்துக்கு விஜய் கொடுத்த பரிசு என்ன? September 14, 2026 குழப்பத்தில் அரசியல் பெரும்புள்ளி.. விடாது துரத்தும் நடிகை.. வெளிநாட்டில் நடந்த கூத்து! குழப்பத்தில் அரசியல் பெரும்புள்ளி.. விடாது துரத்தும் நடிகை.. வெளிநாட்டில் நடந்த கூத்து! September 14, 2026 செத்து செத்து விளையாடுவோமா? நடிகர் முத்துக்காளை குடும்பத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! செத்து செத்து விளையாடுவோமா? நடிகர் முத்துக்காளை குடும்பத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! September 14, 2026 Mandaadi Day 4 Box Office – மண்டாடி 4வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸில் சூரி மாஸ் Mandaadi Day 4 Box Office – மண்டாடி 4வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸில் சூரி மாஸ் September 14, 2026

See all 177 in Cinema →

Latest News

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *