நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் உரிமைக் குழு, சபை விதிகள் குழு, பொது நிறுவனங்கள் குழு உள்ளிட்ட 11 குழுக்களை நியமித்து உத்தரவிட்டார் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர். சட்டப்பேரவை விதிகளின்படி புதிய சட்டமன்றங்கள் அமையும் போது பொறுப்பேற்கும் அரசு இந்தக் குழுக்களை நியமிப்பது வழக்கமான நடைமுறைதான் என்றாலும் தற்போது அமைக்கப்பட்டுள்ள இரண்டு குழுக்கள் தொடர்பாக சலசலப்பு கிளம்பியிருக்கிறது.
இது தொடர்பாக சட்டப்பேரவை வட்டாரத்தில் விவரமறிந்த சிலரிடம் பேசிய போது, “புது அரசு பொறுப்பேற்றதும் சபை விதிகள் குழு, மதிப்பீட்டுக் குழு, பொதுக்கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் குழு, உரிமைக்கழு என பதினாறு குழுக்கள் நியமிக்கப் படுவது வழக்கம். சபை விதிகள் குழுவுக்கு சபாநாயகர் தலைவராக இருப்பார். முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் இருவருமே இந்தக் குழுவின் உறுப்பினர்களாக இருப்பர்.
அதேபோல் பொதுக்கணக்குக் குழுவின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது அவரால் பரிந்துரை செய்யப்படும் எதிர்க்கட்சி உறுப்பினரோ பொறுப்பு வகிப்பார்கள்.
பொதுக் கணக்கு குழு என்பது அரசின் வரவு செலவுகளை ஆராய்ந்து கண்காணிக்க அதிகாரம் கொண்ட முக்கியமான ஒரு குழு. மாநில சட்டசபைகள் போலவே மத்திய அரசு அளவிலும் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு உள்ளது. அரசு வரவு செலவில் வெளிப்படைத் தன்மையைப் பேணும் பொருட்டே இந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பை எதிர்க்கட்சி வசம் தருவது என்பது மரபாக பின்பற்றப் பட்டு வருகிறது.
தற்போது பாராளுமன்ற அளவில் பொதுக் கணக்கு குழு தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.கே.சி வேணுகோபால் இருக்கிறார்.
மற்ற அனைத்துக் குழுக்களுக்கும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களே தலைவர்களாக இருப்பர். உறுப்பினர்களாக அனைத்துக் கட்சி உறுப்பினர்களூம் இடம் பெறுவர்.
இந்த நிலையில் தற்போது தமிழக அரசு நியமித்திருக்கும் 11 குழுக்களில் உரிமைக் குழுவில் திமுகவின் பிரதிநிதியாக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

ஏனெனில் சில தினங்களுக்கு முன் பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய்யின் எலும்பை உடைப்பேன்’ எனப் பேசி கைதான நிலையில் ஆளுங்கட்சி தரப்பில் அந்த விவகாரத்தை உரிமைக்குழுவுக்கு அனுப்பி விசாரிக்க கோரிக்கை வைத்தனர். கோரிக்கை உரிமைக்குழு அமைத்தவுடன் குழுவுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவித்தார் சபாநாயகர்.
இப்படி இருக்க அதே உரிமைக்குழுவில் இவரே ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் மீதான புகாரை விசாரிக்கும் குழுவில் இவரே ஒரு உறுப்பினர் என்பதுதான் சர்ச்சையாகி இருக்கிறது.
இவர் மீதான புகார் உரிமைக்குழுவுக்கு அனுப்ப உத்தரவிட்ட பிறகே அந்தக் குழு உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதுதான் இதில் ஹைலைட் மற்றும் புரியாத புதிர்.
முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமாரிடம் இது தொடர்பாகப் பேசினோம்.

”சட்டசபைக் குழுக்களை நியமிக்கும் அதிகாரம் முழுக்க முழுக்க சபாநாயகருக்குதான் இருக்கிறது. அவரது முடிவே இறுதியானதாக இருக்கும். அவரது உரிமைனு கூடச் சொல்லலாம். அதனால் அதுபத்தி கேள்வி யாரும் கேடக முடியாது. அதேநேரம் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய ஒருத்தரை விசாரிக்க வேண்டிய இடத்துல அமர வைக்கிறதுலயும் சங்கடங்கள், நெருடல்கள் ஏற்படலாம். கேள்விகள் வருவதையும் தவிர்க்க முடியாது. இது குறித்து சிந்திக்க வேண்டியது சபாநாயகர் மட்டுமே” என்றவரிடம்,
‘பொதுக் கணக்கு குழு தலைவராக எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் இருப்பதுதானே மரபு.. கடந்த திமுக ஆட்சியில் செல்வப் பெருந்தகை இருந்தார். தற்போது திமுகவின் அதே பாணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினரை தவெக அரசு நியமித்திருக்கிறதே’ என்ற கேள்வியையும் கேட்டோம்.
”மரபு அதுதான். மத்திய அரசில் இந்த மரபு காலங்காலமா மதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருது. அதேநேரம் சட்டசபை விதிப்படி அது கட்டாயம்னு இல்லைனு சொல்றாங்க. திமுகவினருக்கு இந்த மாதிரி சின்னச் சின்ன லூப் ஹோல்கள் கிடைச்சா விடுவாங்களா? அதனால கடந்த ஆட்சியில மரபை மீறினாங்க. இன்னைக்கு வந்திருக்கிற அரசு மத்த எல்லாத்துலயும் அவங்களை தீவிரமா எதிர்ப்பாங்க. ஆனா இந்த மாதிரியான குறுக்கால புகுகிற விஷயங்கள்ல மட்டும் அவங்களும் நாங்களும் ஒண்ணுதான்னு நிரூபிக்கிறாங்க,, அவ்வளவுதான்” என்றார் அவர்.்
'கழுத்தை நெரிக்கும் இணைய கூலிப்படைகள்; கட்சிப் பேதம் எல்லாம் இல்லை.!' – கடிவாளம் போடுமா தலைமைகள்?
September 15, 2026
`வெளியிலிருந்துதான் ஆதரவு' – இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள்!
September 15, 2026
சட்டமன்றம் 2026: `தனிப்பட்ட தாக்குதலை ஸ்டாலினே நடத்தியிருக்கிறார்; அதே பாணி.!' – ஜவஹர் அலி | களம் 02
September 15, 2026
“டைம் பாஸ் ஆக்டிவிட்டி; துப்பில்லாத ஆட்சி’’ – முதல்வர் விஜய் மீது கொந்தளித்த எம்.பி கதிர் ஆனந்த்
September 15, 2026
"இது தான் தவெக சொன்ன மாற்றமா?" – தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கனிமொழி கேள்வி
September 15, 2026
இடைத்தேர்தல்: "கனத்த இதயத்துடன் ஏற்கிறோம்" – இடதுசாரிகளின் முடிவு குறித்து மாணிக்கம் தாகூர்
September 15, 2026
Exterminauts Wants You to Live a 9-to-5 Life that Bites Back | IGN Preview
September 15, 2026
ஸ்டாலின் உடல்நிலை எப்படி இருக்கு? பதறிப்போய் Phone போட்ட தோழர்..!
September 15, 2026
Forgotten Island Review
September 15, 2026
Unions urge ministers to soften planned changes to immigration rules
September 15, 2026
Unions warn against 'out of control' political spending
September 15, 2026
திமுகவிற்கு கம்யூனிஸ்டுகள் வைத்த செக்… பரந்தாமனுக்கு எதிராக களமிறங்கும் பிரபலம்..!
September 15, 2026