தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று (செப்.15) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது அவரிடம் இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், “ஊழல் லஞ்சம், கலெக்ஷன், கமிஷன் இல்லாத ஆட்சியை தவெக நடத்துகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படி ஒரு ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.

 வீரபாண்டியன்,  பெ.சண்முகம்
வீரபாண்டியன், பெ.சண்முகம்

இந்த ஆட்சி நடைபெறுவதற்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது இடதுசாரி கட்சிகள். நாங்கள் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறோம். எங்கள் அமைச்சர்கள் நேர்மையாக இருக்கிறார்கள். எல்லா அமைச்சர்களும் நேர்மையாக இருக்கிறார்கள்.

சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு தந்த இடதுசாரி கட்சிகள் இப்போது தனித்து நிற்க முடிவு எடுத்தது என்னைப் போன்றவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. தங்கள் முடிவை இடதுசாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஆனால் அதனை அவர்கள் செய்ய மாட்டார்கள். முடிவு எடுத்த பிறகு மறுபரிசீலனை செய்ய வாய்ப்பில்லை. அவர்களின் இந்த முடிவை நாம் கனத்த இதயத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்” என்று பேசியிருக்கிறார் மாணிக்கம் தாகூர்.

More in TamilNews
இல்லாத புற்றுநோய்க்கு 11 ஆண்டு கீமோதெரபி சிகிச்சை – இந்த பெண்ணுக்கு என்ன நடந்தது? இல்லாத புற்றுநோய்க்கு 11 ஆண்டு கீமோதெரபி சிகிச்சை – இந்த பெண்ணுக்கு என்ன நடந்தது? September 15, 2026 'நான் கேள்விப்பட்டிராத ஊரில் குடியேற ரூ. 5 லட்சம் தந்தனர்' – அமெரிக்காவில் என்ன நடக்கிறது? 'நான் கேள்விப்பட்டிராத ஊரில் குடியேற ரூ. 5 லட்சம் தந்தனர்' – அமெரிக்காவில் என்ன நடக்கிறது? September 15, 2026 ரூ.2,000-க்கு மேல் யுபிஐ பரிவர்த்தனை செய்ய இனி கட்டணமா? 5 கேள்வி – பதில்கள் ரூ.2,000-க்கு மேல் யுபிஐ பரிவர்த்தனை செய்ய இனி கட்டணமா? 5 கேள்வி – பதில்கள் September 15, 2026 புது செல்போன் வாங்க பழையதை எக்சேஞ்ச் செய்கிறீர்களா? ஆபத்தை தவிர்க்க கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள் புது செல்போன் வாங்க பழையதை எக்சேஞ்ச் செய்கிறீர்களா? ஆபத்தை தவிர்க்க கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள் September 15, 2026 'கழுத்தை நெரிக்கும் இணைய கூலிப்படைகள்; கட்சிப் பேதம் எல்லாம் இல்லை.!' – கடிவாளம் போடுமா தலைமைகள்? 'கழுத்தை நெரிக்கும் இணைய கூலிப்படைகள்; கட்சிப் பேதம் எல்லாம் இல்லை.!' – கடிவாளம் போடுமா தலைமைகள்? September 15, 2026 `வெளியிலிருந்துதான் ஆதரவு' – இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள்! `வெளியிலிருந்துதான் ஆதரவு' – இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள்! September 15, 2026

See all 793 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *