வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகேயுள்ள கே.ஜி.ஏரியூரைச் சேர்ந்தவர் காந்தி (வயது 47). இவர் தனது மனைவி மேரியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு ஒன்றை அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது, “நான் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறேன். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எனது தந்தை ஆனந்தன் இறந்துவிட்டார். அவரது பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்கினர். அப்போது தவறுதலாக எனது பெயரையும் சேர்த்து நீக்கிவிட்டனர். இதனால், எனது குடும்பத்துக்குக் கிடைக்க வேண்டிய முறையான ரேஷன் பொருள்கள் கிடைப்பதில்லை.

எனது பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க அணைக்கட்டு தாலுகா அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், எனது மகன்கள் 2 பேரும் ராணுவத்தில் சேர உள்ளனர். அவர்கள் பணியில் சேர குடும்ப அட்டையில் தந்தை பெயர் இல்லாததால், இறப்பு சான்றிதழ் கேட்கின்றனர். எனது மகன்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்றால் எனது பெயர் ரேஷன் கார்டில் சேர்க்கப்பட வேண்டும், அல்லது எனக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். விவசாயியின் இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.
"ரஷ்ய எண்ணெய்க்காக அமெரிக்கா இந்தியா மீது வரி விதிப்பதற்கு முன் யோசிக்க வேண்டும்.!" – JP Morgan CEO
September 23, 2026
தாராபுரம்: `விருப்பப்பட்டவர்கள் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்..!' – ஆவேசமான நிர்வாகிகள்!
September 23, 2026
"ஒரு குழந்தையின் கனவு நனவானது போல உணர்கிறேன்.!" – நடிகை பார்வதி
September 23, 2026
பாசிட்டிவ் ரூட்டில் ஈரான் போர் நிறுத்தம்? 'நவம்பருக்கு பின் ஒப்பந்தம்' – ட்ரம்ப் சொன்ன தகவல்கள்!
September 23, 2026
America AI, தானாகவே China AI மீது Attack நடத்தினால்… போரே வெடிக்கும்! | AI Hotline Explained
September 23, 2026
"சங் பரிவாரின் B Team ஆக மாறிவிட்டது காங்கிரஸ் அரசு" – பினராயி மீதான விசாரணைக்கு சிபிஎம் கண்டனம்
September 23, 2026
Zelensky at UNGA: ‘Limit Putin's money. Limit his war’ — key takeaways from Ukraine president’s address
September 23, 2026
White House denies report of 90-day US diesel export ban
September 23, 2026
CDC Recognizes Measles Death After Pennsylvania Conflict
September 23, 2026
Barrecore and Boom Cycle owner suddenly shuts studios
September 23, 2026
Why is the price of protein powder rising?
September 23, 2026
CM congratulates badminton team after bronze medal win
September 23, 2026