தற்போது உலக அளவில் எகிறியிருக்கும் கச்சா எண்ணெய்யின் விலைக்கும், பல நாடுகளில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டிற்கும் ஈரான் போரும், ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடலும்தாம் காரணம்.

இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் என ஈரான் போரில் இருக்கும் மூன்று நாடுகளுக்குமே பங்குண்டு.

ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு நீங்கள்தான் காரணம்… நாங்கள்தான் காரணம் என்று அமெரிக்காவும், ஈரானும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றன.

இஸ்மாயில் பாகாயி பதிவு
இஸ்மாயில் பாகாயி பதிவு

இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்கா கூறியது குறித்து ஈரானின் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்திருக்கிறார்…

“எரிபொருள் விலை உயர்விற்கு அமெரிக்க அதிகாரிகள் ஈரான் மீது பழி சுமத்துகிறார்கள்.

ஆக்கிரமிப்புப் போரை உண்மையில் யார் தொடங்கியது… யாருடைய நடவடிக்கைகள் ஹார்முஸ் நீர்ச்சந்தியின் மூடு விழாவிற்கும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்துப் பாதிப்பிற்கும் நெருக்கடியை உருவாக்கின என்பதை மறந்துவிடும் அளவுக்கு மக்களுக்கு நினைவாற்றல் குறைவாக இருக்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள் போலும்.

ஹிட்லரும்…

ஆனால், இது ஒன்றும் புதிய தந்திரம் அல்ல. 1939-இல் ஹிட்லரும் போலந்து மீதான தனது படையெடுப்பை இதே போன்று ஒரு தற்காப்பு நடவடிக்கை என்றே சித்தரித்தார்.

சட்டவிரோதமான ஒரு ‘விருப்பப் போரை’த் தூண்டியவர், அதனால் ஏற்படும் மோசமான விளைவுகளுக்குப் பாதிக்கப்பட்டவர் மீதே பழி போடும் போது, அதை ‘ராஜதந்திர புத்திசாலித்தனம்’ என்று பார்க்க வேண்டுமா அல்லது வெறும் மடமையின் சான்றாகப் பார்க்க வேண்டுமா?!”

See all 740 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *