‘ஸ்கிரிப்ட் தயாரானதும் என்னுடைய சித்தப்பாகிட்டதான் பேசினேன். ‘படம் பண்ணப் போறேன், எங்கூட இருப்பீங்களா’னு கேட்டேன். அவரும் ஓ.கே. சொன்னதுடன் படம் தொடங்குனதுல இருந்து இப்ப வரைக்கும் அவ்வளவு சப்போர்ட்டா இருக்கார்’
– ‘சிக்மா’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் ஜேசன் சஞ்சய் இப்படிப் பெருமையாகக் குறிப்பிட்டதிலிருந்து ‘யாருப்பா அந்த சஞ்சீவ்’ என அவரைத் தேடத் தொடங்கி விட்டனர் பலரும்.
சஞ்சீவுமே ஜேசனைப் பாராட்டியதுடன் நில்லாமல் ‘எல்லாப் புகழும் என்னுடைய அண்ணிக்கே’ என ஜேசனின் அம்மா சங்கீதாவையும் புகழ்ந்து தள்ள, ஒரே நாளில் வைரலாகி விட்டார் சஞ்சீவ்.
சரி, யார் இந்த சஞ்சீவ்? பார்க்கலாமா?
முதல்வர் விஜய்யின் சித்தி ஷீலாவின் மூத்த மகன்தான் இவர். நடிகர் விக்ராந்த்தின் உடன் பிறந்த அண்ணன். இவரது நிஜப் பெயர் சந்தோஷ்.
குழந்தை நட்சத்திரமாக ‘அஞ்சலி’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஹீரோவாக முயற்சி செய்தார்.. அப்போது முதல் பெயரை சஞ்சீவ் என மாற்றிக் கொண்டார். ஹீரோ முயற்சி கை கொடுக்காததால் இயக்குநராவது என முடிவெடுத்து ஸ்கிரிப்ட் பக்கம் கவனம் செலுத்த தொடங்கினார்.
தனது தம்பி விக்ராந்தை வைத்து ஒரு படத்தை இயக்கவும் செய்தார்.
இயக்குநராகும் முயற்சியும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. ஆனாலும் இன்னும் சினிமா முயற்சியைக் கைவிடவில்லை என்கிறார்கள்.
ஆரம்பத்தில் தன்னுடன் நடித்த ரிச்சர்டு உள்ளிட்ட சக ஆர்ட்டிஸ்டுகளுடனும் தொடர்பிலேயே இருப்பவர், சில மாதங்களுக்கு முன் நடந்த அஞ்சலி ரீ யூனியன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதாகச் சொல்கிறார்கள்.
விஜய்க்கு சித்தி மகன் என்ற போதும் ஜேசன் இவரிடம் சிறு வயது முதலே அட்டாச்மென்டாக இருப்பாராம். காரணம், விஜய் ஷூட்டிங்கிற்காக அடிக்கடி வெளியில் இருக்கும் சூழலில் ஜேசனையும் அவருடைய தங்கையையும் பள்ளிக்கு கூட்டிக் கொண்டு போய் வருவது, ஷாப்பிங் அழைத்துச் செல்வது என அவ்வளவு அக்கறையாக கவனித்து வந்திருக்கிறார்.

தவிர வீட்டில் சங்கீதா விஜய்க்கு தேவையான சின்னச் சின்ன உதவிகளையும் செய்து வந்ததால், ஜேசன் தொடர்பான எந்தவொரு விஷயத்தையும் சஞ்சீவிடமும் பகிர்ந்து வருவாராம் சங்கீதா. ஜேசன் படம் இயக்க முடிவு செய்ததும் சஞ்சீவிடம் சங்கீதாவுமே பேசி உடனிருந்து சப்போர்ட் செய்யச் சொல்லியிருக்கிறார். இதனாலேயே சிக்மா படம் தொடங்கியது முதலே ஜேசனுக்கு பக்கபலமாக இருந்து வந்தவர், விழா மேடையிலும் அண்ணிக்கு மறக்காமல் நன்றி கூறி நெகிழ்ந்திருக்கிறார் என்கிறார்கள்.
Anbil Avan: 'இன்னும் பெரிய அளவில்!'; ரேஸிலிருந்து தள்ளிப் போகும் அசோக் செல்வன் படம் – காரணம் என்ன?
September 22, 2026
“மீசைய முறுக்கு பார்த்து சென்னைக்கு ஓடி வந்தேன்!" – ரசிகர் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்த ஆதி
September 22, 2026
"ரஜினி சார் மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க, ஆனா..!"- 'மொத ராத்திரி' நடிகர் ரிஷிகாந்த்
September 22, 2026
"சங்கத்திற்காகச் சில ஆலோசனைகளும் வழங்கினார்!" – எழுத்தாளர் சங்கத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்
September 22, 2026
ராவணனின் வயிற்றிலேயே பாய்ந்த சூலம்.. சாமியாடி சதியை முறியடித்த குணசேகரன்..எதிர்நீச்சல் தொடர்கிறது!
September 22, 2026
Dharman: "50 வருடத்திற்குப் பிறகும் ஒரு குழந்தையைப் போல…"- ரஜினி காந்த் குறித்து அஸ்வத் மாரிமுத்து
September 22, 2026
How a Nagoya baseball ground was transformed into an Asian Games cricket venue
September 23, 2026
Japan gets a crash course in cricket as Asian Games bring sport to new audience
September 23, 2026
சிஎஸ்கே அணி பயிற்சியாளர் பதவிக்கு நெஹ்ராவா? அஸ்வின் வெளியிட்ட பரபரப்பு தகவல்
September 23, 2026
Roshibina Devi assures medal after second chance, one win away from Asian Games final
September 23, 2026
ஐபிஎல் சூதாட்ட புகார்.. விளக்கம் கொடுத்துள்ள சிஎஸ்கே.. வீரர்களுக்கு எச்சரிக்கை
September 23, 2026
Pranati Nayak qualifies for Asian Games vault final, sets up shot at redemption
September 23, 2026