அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அன்பில் அவன்’ திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது.
‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜாதான் இப்படத்தின் கதாசிரியர்.
விக்னேஷ் ராஜா, இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திகேயன், அசோக் செல்வன் ஆகிய மூவரும் இணைந்துதான் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள்.

அத்தோடு, ஹேப்பி ஹை பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை அசோக் செல்வனும், அவருடைய சகோதரி அபிராமியும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இயக்குநர் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு, ‘தர்மன்’ திரைப்படம் தொடர்பாகப் பகிர்ந்திருக்கிறார்.
அவர் பேசுகையில், “என்னுடைய தொடக்கம் இங்குதான் அமைந்தது. என்னுடைய முதல் படத்தைத் தயாரித்ததும் ‘ஹேப்பி ஹை பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனம்தான். அதனால் கண்டிப்பாக நான் இந்த நிகழ்வுக்கு வந்தாக வேண்டும் என விரும்பினேன்.
‘அன்பில் அவன்’ கதையை நான் படித்திருக்கிறேன். இது நிச்சயமாக எல்லோருக்கும் பிடிக்கும். இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதிய கதை, கார்த்திகேயனின் இயக்கம், அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தனின் நடிப்பு, ‘ஹேப்பி ஹை பிக்சர்ஸ்’ தயாரிப்பு ஆகியவற்றால் இந்தப் படம் சிறப்பாக உருவாகியுள்ளது” என்றவர், ‘தர்மன்’ திரைப்படம் குறித்து, “மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது, படப்பிடிப்பு சரியாகத் திட்டமிட்டபடி சென்று கொண்டிருக்கிறது.

படத்தின் வேகம் மற்றும் குவாலிட்டி குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் ரஜினி. நான், அசோக் செல்வன் உட்பட அனைவரும் அவருடைய மிகப்பெரிய ரசிகர்கள்.
நான் என்னுடைய இரண்டு படங்களிலும் என்னுடைய நண்பர்களுடன்தான் பணியாற்றியிருக்கிறேன். இந்தப் படம் தொடங்கும்போது அதனை யோசித்து பயந்தேன்.
அவருடைய பணியாற்றும் விதம் அற்புதமாக இருக்கிறது. 50 வருடத்திற்குப் பிறகும் ஒரு குழந்தையைப் போல அந்த எக்சைட்மென்டோடு பணியாற்றி வருகிறார்.” எனக் கூறினார்.
Anbil Avan: 'இன்னும் பெரிய அளவில்!'; ரேஸிலிருந்து தள்ளிப் போகும் அசோக் செல்வன் படம் – காரணம் என்ன?
September 22, 2026
“மீசைய முறுக்கு பார்த்து சென்னைக்கு ஓடி வந்தேன்!" – ரசிகர் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்த ஆதி
September 22, 2026
"ரஜினி சார் மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க, ஆனா..!"- 'மொத ராத்திரி' நடிகர் ரிஷிகாந்த்
September 22, 2026
jason 'அஞ்சலி' குட்டிப் பையன்; கை கொடுக்காத ஹீரோ முயற்சி, ஜேசனின் `கேர் டேக்கர்'- யார் இந்த சஞ்சீவ்?
September 22, 2026
"சங்கத்திற்காகச் சில ஆலோசனைகளும் வழங்கினார்!" – எழுத்தாளர் சங்கத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்
September 22, 2026
ராவணனின் வயிற்றிலேயே பாய்ந்த சூலம்.. சாமியாடி சதியை முறியடித்த குணசேகரன்..எதிர்நீச்சல் தொடர்கிறது!
September 22, 2026
How a Nagoya baseball ground was transformed into an Asian Games cricket venue
September 23, 2026
Japan gets a crash course in cricket as Asian Games bring sport to new audience
September 23, 2026
சிஎஸ்கே அணி பயிற்சியாளர் பதவிக்கு நெஹ்ராவா? அஸ்வின் வெளியிட்ட பரபரப்பு தகவல்
September 23, 2026
Roshibina Devi assures medal after second chance, one win away from Asian Games final
September 23, 2026
ஐபிஎல் சூதாட்ட புகார்.. விளக்கம் கொடுத்துள்ள சிஎஸ்கே.. வீரர்களுக்கு எச்சரிக்கை
September 23, 2026
Pranati Nayak qualifies for Asian Games vault final, sets up shot at redemption
September 23, 2026