திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6- ம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
த.வெ.க சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சத்தியபாமா வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், ஒரு மாதத்திற்குள் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க- வில் இணைந்து கொண்டார். இந்த நிலையில், தற்போது த.வெ.க சார்பில் அதே தொகுதியில் அவரை வேட்பாளராக களம் இறக்கியிருப்பதால் பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் மக்கள் சிலர் இவருக்கு எதிராக கோஷங்களையும் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். பிரசார கூட்டங்களில் சலசலப்பு மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படுவதால் இவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காவல்துறையினர் புடை சூழ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று தாராபுரம் தொகுதிக்குட்பட்ட பெரிய குமாரபாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த மக்கள் விலைவாசி உயர்வு, பாசன வசதி திட்டம் போன்றவைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியதுடன் சத்தியபாமாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சத்யபாமாவும் அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ஆக்ரோஷமாகவும் ஆவேசமாகவும் பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து சத்தியபாமாவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட த.வெ.க நிர்வாகிகள், “தாராபுரம் தொகுதியில் விருப்பப்பட்டவர்கள் மட்டும் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்ககள். மற்றவர்கள் அவர்களின் விருப்பம் போல் வாக்களித்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம்” என மக்களிடம் ஆவேச மொழியில் பேசிவிட்டு கிளம்பியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன.
"ரஷ்ய எண்ணெய்க்காக அமெரிக்கா இந்தியா மீது வரி விதிப்பதற்கு முன் யோசிக்க வேண்டும்.!" – JP Morgan CEO
September 23, 2026
"ஒரு குழந்தையின் கனவு நனவானது போல உணர்கிறேன்.!" – நடிகை பார்வதி
September 23, 2026
பாசிட்டிவ் ரூட்டில் ஈரான் போர் நிறுத்தம்? 'நவம்பருக்கு பின் ஒப்பந்தம்' – ட்ரம்ப் சொன்ன தகவல்கள்!
September 23, 2026
America AI, தானாகவே China AI மீது Attack நடத்தினால்… போரே வெடிக்கும்! | AI Hotline Explained
September 23, 2026
"சங் பரிவாரின் B Team ஆக மாறிவிட்டது காங்கிரஸ் அரசு" – பினராயி மீதான விசாரணைக்கு சிபிஎம் கண்டனம்
September 23, 2026
"பினராயி விஜயன் மீது விசாரணைக்கு உத்தரவு" – அமலாக்கத்துறை பரிந்துரையை ஏற்று கேரள அரசு அதிரடி
September 23, 2026
டாடா குழுமத்தின் ஓனர் யார்..? நோயல் டாடாவின் உண்மையான அதிகாரம் என்ன தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
September 23, 2026
"ரஷ்ய எண்ணெய்க்காக அமெரிக்கா இந்தியா மீது வரி விதிப்பதற்கு முன் யோசிக்க வேண்டும்.!" – JP Morgan CEO
September 23, 2026
UPI MDR கட்டணம்: கூகுள் பே , போன்பே போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு தான் கொள்ளை லாபம்..!!
September 23, 2026
ஆகஸ்ட் இருசக்கர விற்பனையில் டாப் 10 நிறுவனங்கள்… ஹீரோவை வீழ்த்தி ஹோண்டா ஆதிக்கம்!
September 23, 2026
ஈரான் அழிக்கப்படும் என டிரம்ப் சொன்ன பின்பும்.. 3 மணிநேரம் மீட்டிங்.. நியூயார்க் நகரில் நடந்தது என்ன?
September 23, 2026
Madras High Court dismisses AIADMK whip’s case against amendment to Mekedatu resolution passed by Tamil Nadu Assembly
September 23, 2026