திருவண்ணாமலை எம்.பி-யும் தி.மு.க இளைஞரணி மாவட்ட அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரையின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார் இன்று காலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிற நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பிலிருந்து சோனைக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்களை இன்னும் வெளியிடவில்லை.

இதனிடையே, `ஏ.பி.யு’ என்கிற கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் சி.என்.அண்ணாதுரை. கடந்த 14-12-2025 அன்று, திருவண்ணாமலை மலப்பாம்பாடியில் வடக்கு மண்டல தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு நடைபெற்றது.

எம்.பி சி.என்.அண்ணாதுரை

இந்த மாநாட்டுக்கான திடல் அமைக்க அருகிலுள்ள மலப்பாம்பாடி ஏரியில் இருந்து ஆயிரக்கணக்கான லோடு மண் சட்டத்துக்குப் புறம்பாக அள்ளப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த முறைகேடான செயல் மூலம் அரசுக்கு சுமார் ரூ.8 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும், எம்.பி அண்ணாதுரையின் ஏ.பி.யு கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான பொக்லைன் இயந்திரங்களும், லாரிகளும் பயன்படுத்தப்பட்டதாக அறப்போர் இயக்கம் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்தது.

இந்த புகார் மீதான விசாரணையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை நடைபெறலாம் என்கிற தகவலும் வெளியாகியிருக்கிறது. சோதனை நிறைவுற்ற பிறகே விவரங்கள் முழுவிபரங்கள் வெளிவரக்கூடும் என்பதால், இந்த அதிரடி சோதனை தி.மு.க-வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

More in TamilNews
BB Tamil: 'அந்த ஒருவரை ஜெயிக்க விடாதீங்க!' – வெளியேறும்போது அவினாஷை பார்த்து ஆவேசமான லட்சுமி பிரியா BB Tamil: 'அந்த ஒருவரை ஜெயிக்க விடாதீங்க!' – வெளியேறும்போது அவினாஷை பார்த்து ஆவேசமான லட்சுமி பிரியா September 25, 2026 “இரட்டை இலையும், விசில் சின்னமும் ஒன்று' என பேசுவதா? TVK அங்கீகாரம் Suspend?' – அதிமுக மூவ் “இரட்டை இலையும், விசில் சின்னமும் ஒன்று' என பேசுவதா? TVK அங்கீகாரம் Suspend?' – அதிமுக மூவ் September 25, 2026 'அண்ணனா இருப்பேன் – அரணா இருப்பேன்னு வாய்கிழிய பேசிய முதல்வர் எங்கே?' – உதயநிதி காட்டம் 'அண்ணனா இருப்பேன் – அரணா இருப்பேன்னு வாய்கிழிய பேசிய முதல்வர் எங்கே?' – உதயநிதி காட்டம் September 25, 2026 ஜெம் வீரமணி: 'ஜூலை 5… அழைக்கப்பட்ட 3 அமைச்சர்கள் + சபாநாயகர்!' – சர்ச்சையாகும் விழாவின் பின்னணி! ஜெம் வீரமணி: 'ஜூலை 5… அழைக்கப்பட்ட 3 அமைச்சர்கள் + சபாநாயகர்!' – சர்ச்சையாகும் விழாவின் பின்னணி! September 25, 2026 மதுரை வரும் விஜய் : தகர சீட்டுகளால் மறைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்; பின் வாபஸ்! என்ன நடந்தது? மதுரை வரும் விஜய் : தகர சீட்டுகளால் மறைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்; பின் வாபஸ்! என்ன நடந்தது? September 25, 2026 சிக்கிமை புரட்டி போட்ட நிலச்சரிவு.. பாறைகள் சகதியில் மூழ்கிய கிராமங்கள் சிக்கிமை புரட்டி போட்ட நிலச்சரிவு.. பாறைகள் சகதியில் மூழ்கிய கிராமங்கள் September 25, 2026

See all 702 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *