மதுராந்தகத்தில் சில தினங்களுக்கு முன்பு பிரச்சாரம் செய்தபோது தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இரட்டை இலையும், விசில் சின்னமும் ஒன்றுதான் என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இதுதொடர்பாகப் புகார் அளித்திருப்பதாக அதிமுக எம்.பி இன்பதுரை தெரிவித்திருக்கிறார்.

அவர், ” மதுராந்தகம் தொகுதியில் 23.09.2026 நடைபெற்ற பிரச்சாரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் “இரட்டை இலை முடிந்துவிட்டது” என்றும், எம்.ஜி.ஆர்.–ஜெயலலிதாவின் அரசியல் பாரம்பரியம் தற்போது “விசில்” சின்னத்தில் இருப்பதாகவும் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

மேலும், முன்னதாக நடைபெற்ற பிரச்சாரத்தில் “இரட்டை இலை – விசில் ஒன்றே” என்ற பொருளிலும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இன்று புகார் அளித்துள்ளேன்.

இரட்டை இலை மற்றும் விசில் இரண்டு வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் சின்னங்கள். அவற்றை ஒன்றாகச் சித்தரிப்பதன் மூலம் வாக்காளர்களிடையே தேர்தல் அடையாளம் தொடர்பான குழப்பம் ஏற்படுத்தப்பட்டதா என்பதை தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்.

எனவே, தேர்தல் ஆணையம் முழுமையான வீடியோ, ஆடியோ பதிவுகள் மற்றும் பிரச்சாரப் பொருட்களை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கோர வேண்டும்.

முக்கியமாக, Election Symbols (Reservation and Allotment) Order, 1968-ன் Para 16A-ன் கீழ், TVK-க்கு Show Cause Notice அனுப்பி, விளக்கம் கேட்க வேண்டும்.

அந்த விசாரணையில் Model Code of Conduct அல்லது தேர்தல் ஆணையத்தின் சட்டபூர்வ உத்தரவுகள் மீறப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், Para 16A-ன் கீழ் TVK-வின் அங்கீகாரத்தை தற்காலிகமாக Suspend செய்யவும், தேவையான பட்சத்தில் அங்கீகாரத்தை Withdraw செய்யவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.

 இன்பதுரை
இன்பதுரை

நாங்கள் வெறும் “இரட்டை இலை – விசில்” என்ற ஒப்பீடு மட்டுமே Section 123, R.P. Act கீழ் corrupt practice என்று கூறவில்லை.

முழுமையான பேச்சு, அதன் சூழல் மற்றும் பிரச்சாரப் பொருட்களை ஆய்வு செய்து, வாக்காளர்களிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதா என்பதை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும்.

தேர்தல் சின்னங்களின் தனித்துவமும், வாக்காளர்களின் தெளிவான முடிவும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

More in TamilNews
BB Tamil: 'அந்த ஒருவரை ஜெயிக்க விடாதீங்க!' – வெளியேறும்போது அவினாஷை பார்த்து ஆவேசமான லட்சுமி பிரியா BB Tamil: 'அந்த ஒருவரை ஜெயிக்க விடாதீங்க!' – வெளியேறும்போது அவினாஷை பார்த்து ஆவேசமான லட்சுமி பிரியா September 25, 2026 திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரையிடம் அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை… அதிர்ச்சியில் திமுக-வினர் திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரையிடம் அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை… அதிர்ச்சியில் திமுக-வினர் September 25, 2026 'அண்ணனா இருப்பேன் – அரணா இருப்பேன்னு வாய்கிழிய பேசிய முதல்வர் எங்கே?' – உதயநிதி காட்டம் 'அண்ணனா இருப்பேன் – அரணா இருப்பேன்னு வாய்கிழிய பேசிய முதல்வர் எங்கே?' – உதயநிதி காட்டம் September 25, 2026 ஜெம் வீரமணி: 'ஜூலை 5… அழைக்கப்பட்ட 3 அமைச்சர்கள் + சபாநாயகர்!' – சர்ச்சையாகும் விழாவின் பின்னணி! ஜெம் வீரமணி: 'ஜூலை 5… அழைக்கப்பட்ட 3 அமைச்சர்கள் + சபாநாயகர்!' – சர்ச்சையாகும் விழாவின் பின்னணி! September 25, 2026 மதுரை வரும் விஜய் : தகர சீட்டுகளால் மறைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்; பின் வாபஸ்! என்ன நடந்தது? மதுரை வரும் விஜய் : தகர சீட்டுகளால் மறைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்; பின் வாபஸ்! என்ன நடந்தது? September 25, 2026 சிக்கிமை புரட்டி போட்ட நிலச்சரிவு.. பாறைகள் சகதியில் மூழ்கிய கிராமங்கள் சிக்கிமை புரட்டி போட்ட நிலச்சரிவு.. பாறைகள் சகதியில் மூழ்கிய கிராமங்கள் September 25, 2026

See all 702 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *