தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு முதலமைச்சர் விஜய் வருகை தர இருக்கிறார். முதல்வர் வருகையையொட்டி மதுரை ராஜாஜி மருத்துவமனை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மருத்துமனை முன்பு சாலைகள் அமைக்கும் பணிகளும், மருத்துவமனைக்குள் கற்கள் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருவதோடு சுத்தப்படுத்தும் பணிகளும் நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது ராஜாஜி மருத்துவமனை முன்பு கழிவு நீர் கால்வாயை தகர சீட்டுகள் கொண்டு மறைக்கும் பணிகள் நடைப்பெற்றது. இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் தகரசீட்டுகள் அமைக்கும் பணியை நிறுத்தி அவற்றை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார். இதனால் தகரசீட்டுகள் அமைக்கும் பணிகளை நிறுத்தி அதை அப்புறப்படுத்தும் பணிகளில் நடைப்பெற்று வருகிறது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துமனை

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே போல முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதுரைக்கு வந்திருந்த போது திறந்த வெளியில் இருந்த பந்தல்குடி கழிவுநீர் கால்வாயை பச்சை துணி மூலம் மறைத்து கட்டபட்டது. அந்த விவகாரம் பூதாகரமாகி  உடனே கழிவுநீர் கால்வாயை சுற்றிலும் சுற்று சுவர் கட்டுவதற்கு உத்தரவிட்டது அப்போது அரசு. இதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. தற்போது மீண்டும் அதே போல கழிவு நீர் கால்வாயை மறைக்கும் பணிகளை செய்து விட்டு மீண்டும் அதை திரும்ப பெற்றுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

More in TamilNews
BB Tamil: 'அந்த ஒருவரை ஜெயிக்க விடாதீங்க!' – வெளியேறும்போது அவினாஷை பார்த்து ஆவேசமான லட்சுமி பிரியா BB Tamil: 'அந்த ஒருவரை ஜெயிக்க விடாதீங்க!' – வெளியேறும்போது அவினாஷை பார்த்து ஆவேசமான லட்சுமி பிரியா September 25, 2026 திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரையிடம் அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை… அதிர்ச்சியில் திமுக-வினர் திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரையிடம் அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை… அதிர்ச்சியில் திமுக-வினர் September 25, 2026 “இரட்டை இலையும், விசில் சின்னமும் ஒன்று' என பேசுவதா? TVK அங்கீகாரம் Suspend?' – அதிமுக மூவ் “இரட்டை இலையும், விசில் சின்னமும் ஒன்று' என பேசுவதா? TVK அங்கீகாரம் Suspend?' – அதிமுக மூவ் September 25, 2026 'அண்ணனா இருப்பேன் – அரணா இருப்பேன்னு வாய்கிழிய பேசிய முதல்வர் எங்கே?' – உதயநிதி காட்டம் 'அண்ணனா இருப்பேன் – அரணா இருப்பேன்னு வாய்கிழிய பேசிய முதல்வர் எங்கே?' – உதயநிதி காட்டம் September 25, 2026 ஜெம் வீரமணி: 'ஜூலை 5… அழைக்கப்பட்ட 3 அமைச்சர்கள் + சபாநாயகர்!' – சர்ச்சையாகும் விழாவின் பின்னணி! ஜெம் வீரமணி: 'ஜூலை 5… அழைக்கப்பட்ட 3 அமைச்சர்கள் + சபாநாயகர்!' – சர்ச்சையாகும் விழாவின் பின்னணி! September 25, 2026 சிக்கிமை புரட்டி போட்ட நிலச்சரிவு.. பாறைகள் சகதியில் மூழ்கிய கிராமங்கள் சிக்கிமை புரட்டி போட்ட நிலச்சரிவு.. பாறைகள் சகதியில் மூழ்கிய கிராமங்கள் September 25, 2026

See all 702 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *