வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து கோடிக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டது, ‘படிவம் 6’-ல் விதிகளை மீறி மாற்றங்கள் செய்தது, தரவுத்தளத்தை மத்தியமயமாக்கியது, தேர்தல் ஆணையர்களின் அனுமதியின்றி பல உத்தரவுகள் வெளியானது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் முன்வைத்திருக்கின்றனர் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் புலனாய்வு கட்டுரை வெளியிட்டது.
மேலும், முக்கிய முடிவுகள் தங்கள் கவனத்திற்கு வராமலேயே எடுக்கப்படுவதாக இரு ஆணையர்களும் 10 மாதங்களில் 14 முறை எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஆனால் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டு முடிவுகள் மேற்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இதனால், தேர்தல் ஆணையத்திற்குள் அதிகாரிகளிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென ஏராளமான எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் Gen-Z இளைஞர்களிடமிருந்து வாக்குரிமையை அப்பட்டமாகப் பறிக்கும் சதியில் அமித் ஷாவுடன் சேர்ந்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஈடுபட்டிருக்கிறார் என்றும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பாக விளங்கும் முதன்முறை வாக்காளர்களான 18 வயது Gen-Z இளைஞர்களிடமிருந்து வாக்குரிமையை அப்பட்டமாகப் பறிக்கும் சதியில் அமித் ஷாவுடன் சேர்ந்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஈடுபட்டு வந்திருப்பது இப்போது வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த 1958-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடைமுறையில் இருந்துவந்த வருடாந்திர சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (SSR) 2024 ஜனவரிக்குப் பிறகு முடக்கி வைத்து, லட்சக்கணக்கான புதிய தலைமுறை இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் இணையவிடாமல் இவர் தடுத்து நிறுத்தி வந்திருப்பது ஆதாரங்களுடன் தற்போது அம்பலமாகியுள்ளது.

நமது தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை குறித்தும், நாட்டின் ஜனநாயக அமைப்புகள் ஆளும் பாஜகவின் பிடிக்குள் சிக்கிச் சீரழிக்கப்பட்டு வருவது குறித்தும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து எச்சரித்து வந்த உண்மை இப்போது ஒட்டுமொத்த நாட்டிற்கும் தெளிவாகப் புரிந்துவிட்டது. இளைஞர்களின் மாற்றத்திற்கான குரலையும், மோடி அரசின் அநீதிகளை எதிர்க்கும் இளைஞர் சக்தியையும் தேர்தல் களத்திற்கு வரவிடாமல் திட்டமிட்டுத் தடுக்கும் அற்ப அரசியலில் தலைமை ஆணையர் ஈடுபட்டு வந்தது இதன்மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஜனநாயகத்தின் அடித்தளத்தையே சிதைத்து, லட்சக்கணக்கான இளைஞர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கும் துரோகத்தில் ஈடுபட்டு வந்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், இதற்கு முழுப் பொறுப்பேற்று உடனடியாகத் தனது பதவியை விட்டு வெளியேற வேண்டும். Gyanesh, it’s over agent” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
BB Tamil: 'அந்த ஒருவரை ஜெயிக்க விடாதீங்க!' – வெளியேறும்போது அவினாஷை பார்த்து ஆவேசமான லட்சுமி பிரியா
September 25, 2026
திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரையிடம் அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை… அதிர்ச்சியில் திமுக-வினர்
September 25, 2026
“இரட்டை இலையும், விசில் சின்னமும் ஒன்று' என பேசுவதா? TVK அங்கீகாரம் Suspend?' – அதிமுக மூவ்
September 25, 2026
'அண்ணனா இருப்பேன் – அரணா இருப்பேன்னு வாய்கிழிய பேசிய முதல்வர் எங்கே?' – உதயநிதி காட்டம்
September 25, 2026
ஜெம் வீரமணி: 'ஜூலை 5… அழைக்கப்பட்ட 3 அமைச்சர்கள் + சபாநாயகர்!' – சர்ச்சையாகும் விழாவின் பின்னணி!
September 25, 2026
மதுரை வரும் விஜய் : தகர சீட்டுகளால் மறைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்; பின் வாபஸ்! என்ன நடந்தது?
September 25, 2026
தேர்தலில் யார் அதிக செலவு செஞ்சாங்க? கணக்கு காட்டாத தவெக.. டாப் லிஸ்டில் திமுக..!
September 25, 2026
BB Tamil: 'அந்த ஒருவரை ஜெயிக்க விடாதீங்க!' – வெளியேறும்போது அவினாஷை பார்த்து ஆவேசமான லட்சுமி பிரியா
September 25, 2026
மீண்டும் அம்பாசடர்? EV கார் உற்பத்திக்காக மேற்குவங்க அரசுடன் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் பேச்சுவார்த்தை!
September 25, 2026
திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரையிடம் அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை… அதிர்ச்சியில் திமுக-வினர்
September 25, 2026
“இரட்டை இலையும், விசில் சின்னமும் ஒன்று' என பேசுவதா? TVK அங்கீகாரம் Suspend?' – அதிமுக மூவ்
September 25, 2026
India Post GDS Result 2026: 1st Merit List Expected Soon, Check PDF Download Details
September 25, 2026