பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மாரடைப்பால் இன்று (அக்.8) காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 75.

கோவாவில் உள்ள தனது வீட்டில் சுய நினைவை இழந்து மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நடிகர் நானா படேகரை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மணிபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும், மருத்துவமனை கொண்டுச் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

நானா படேகர்
நானா படேகர்

அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் நானா படேகருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அரசியல்வாதியும், நடிகையுமான குஷ்பு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” இதை என்னால் நம்ம முடியவில்லை. பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

மிகுந்த வேதனையில் இருக்கிறேன். சிறந்த நடிகர், தனக்கென சொந்த சிந்தனையும், நம்பிக்கையும் கொண்டவர். எளிமையான மனம் கொண்ட மனிதர்.

அவருடன் பணியாற்றும் பாக்கியமும், பெருமையும் எனக்கு கிடைத்தது. உங்களை மிகவும் மிஸ் செய்வோம் நானா பாவ்” என்று இரங்கல் தெரிவித்திருகிறார்.

நானா படேகர்
நானா படேகர்

ஹிந்தி மற்றும் மராத்திய திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த பிரபல நடிகர் நானா படேகர் தமிழில் ‘பொம்மலாட்டம்’, ‘காலா’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

More in TamilNews
பட்டினப்பாக்கம்: "இடைத்தேர்தல் முடிந்த மறுநாளே நிலப் பயன்பாடு மாற்றமா?" – அரசுக்கு சீமான் கண்டனம்! பட்டினப்பாக்கம்: "இடைத்தேர்தல் முடிந்த மறுநாளே நிலப் பயன்பாடு மாற்றமா?" – அரசுக்கு சீமான் கண்டனம்! October 8, 2026 TVK: அரசு மருத்துவமனையில் தவெக எம்எல்ஏ திடீர் ஆய்வு; மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்கள் TVK: அரசு மருத்துவமனையில் தவெக எம்எல்ஏ திடீர் ஆய்வு; மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்கள் October 8, 2026 “விஷக் குப்பியா… தூக்குக் கயிறா? ஏன் ஏதாவது ஒரு கட்சியை ஆதரிக்க வேண்டும்?" – கேட்கிறார் திலகபாமா “விஷக் குப்பியா… தூக்குக் கயிறா? ஏன் ஏதாவது ஒரு கட்சியை ஆதரிக்க வேண்டும்?" – கேட்கிறார் திலகபாமா October 8, 2026 "பயனர்களின் தரவு பாதுகாப்பை உறுதி செய்யவே..!" – எலான் மஸ்க் பதிவிற்கு மத்திய அரசு பதில் "பயனர்களின் தரவு பாதுகாப்பை உறுதி செய்யவே..!" – எலான் மஸ்க் பதிவிற்கு மத்திய அரசு பதில் October 8, 2026 கைவிடப்படுகிறதா மறுசீரமைப்பு? ஸ்டாலின் கணக்கு டு ஓடிவந்த டிடிவி; ஒதுங்கி நின்ற எடப்பாடி!| கழுகார் கைவிடப்படுகிறதா மறுசீரமைப்பு? ஸ்டாலின் கணக்கு டு ஓடிவந்த டிடிவி; ஒதுங்கி நின்ற எடப்பாடி!| கழுகார் October 8, 2026 தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் மீது பணமோசடி புகார்; வைரலாகும் வீடியோ! தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் மீது பணமோசடி புகார்; வைரலாகும் வீடியோ! October 8, 2026

See all 636 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *