விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் கதையின் மையக் கதாபாத்திரத்தில் சாய் பிரித்விராஜ் என்கிற சிறுவன் நடித்திருக்கிறார்.

பதற்றமும் பயமும் கலந்த முகத்துடனேயே படம் முழுக்க வந்து, மக்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.

பத்தா | Baththa
பத்தா | Baththa

நம்மிடையே பேசியவர், “எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. சினிமாவுக்கு வரணும்ங்கிற ஆசையே என் அக்கா மூலமாதான் வந்துச்சு. அதனால அவளுக்குத்தான் நான் ஃபர்ஸ்ட் நன்றி சொல்லணும்.

என்னுடைய முதல் படத்துக்கே இவ்வளவு நல்ல கமெண்ட்ஸ் வர்றதைப் பார்க்கும்போது உண்மையிலேயே எனக்கு அளவற்ற மகிழ்ச்சியா இருக்கு. முதல்முறை நடிக்கும்போது எனக்குக் கொஞ்சம் பயமாதான் இருந்தது.

ஆனா, அவளுக்குக் கிடைக்காத பாராட்டு எனக்குக் கிடைச்சிருக்குன்னு அக்கா ரொம்பவே சந்தோஷப்படுறா. என் அக்கா கயலை ‘இன்ஃபினிட்டி அவுட் ஆஃப் 100 ‘ அளவுக்குப் பிடிக்கும்” என்றவர், “இப்போ தியேட்டருக்குப் போனா எல்லாரும் ‘சபரி பயலுங்கடா’னு கத்துறாங்க.

அதெல்லாம் பார்க்கும்போது ரொம்ப ஜாலியா இருக்கு. கென் கருணாஸ் அண்ணா, ‘யூத்’ படத்தில் நடித்த மூன்று கதாநாயகிகள், கருணாஸ் அங்கிள், கிரேஸ் ஆண்டி, கமல் சார் வரைக்கும் நிறைய பேர் எனக்கு மெசேஜ் பண்ணிப் பாராட்டினாங்க. கென் அண்ணா எனக்கொரு வாட்சும் வாங்கித் தந்தார். கமல் சாரும் எங்க டீமைப் பாராட்டியிருந்தார்.

‘பத்தா’ படத்தோட தேன்மொழி கதாபாத்திரத்துக்கு ஃபர்ஸ்ட் என் அக்காவைத்தான் கூப்பிட்டாங்க. ஆனா அவளுக்கு வயசும் ஹைட்டும் கரெக்ட்டா இல்லைன்னு சொல்லிட்டாங்க.

அப்போ சும்மா கூட போன என்னை இயக்குநர் பாலாஜி தரணிதரன் சார் ஆடிஷன் பண்ணி செலக்ட் பண்ணிட்டாரு. ஷூட்டிங் ஸ்பாட்ல விஜய்சேதுபதி சார் என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாரு, தினமும் ரொம்ப சப்போர்ட் பண்ணாரு.

படத்துல கிளைமாக்ஸ் விசாரணைக் காட்சி பண்ணும்போது அவர் எனக்கு ரொம்ப நல்ல வழிகாட்டினாரு. அந்தச் சீன் முடிஞ்சதும் பாலாஜி தரணிதரன் சார் கைத்தட்டி எனக்கு வாழ்த்து சொன்னாரு.

‘ஜெய் பீம்’ படம் பார்த்ததுல இருந்து எனக்கு லிஜோமோல் ஜோஸ் மேமைப் பிடிக்கும். அவங்களோட மலையாளப் படங்களும் நான் பார்த்திருக்கேன். அப்புறம் நான் விஜய் சாருடைய ஃபேன். ‘குஷி’, ‘கில்லி’, ‘மெர்சல்’, ‘துப்பாக்கி’, ‘மாஸ்டர்’, ‘ஜனநாயகன்’ இதெல்லாம் எனக்குப் பிடிச்ச படங்கள்.

Sai Prithviraj - Baththa
Sai Prithviraj – Baththa

இயக்குநர் அட்லி சார் கிட்டகூட ‘தேன்மொழி’ பாட்டைப் பாடிக் காட்டினேன். ‘டேய், நீயே சொந்தக் குரல்ல பாடியிருக்கலாம்டா, நடிப்பில் மிரட்டிட்ட’ன்னு பாராட்டினாரு.

அப்புறம் அவரோட சின்ன வயசு போட்டோவைக் காமிச்சாரு. பார்க்க அப்படியே என்னை மாதிரியே இருந்தாரு. அதோட அவரோட ‘ராக்கா’ படத்துல நடிக்க வைக்கிறேன்னும் சொல்லியிருக்கார்.

அடுத்ததா தனுஷ் சாருடைய 56வது படத்துல நடிச்சிட்டு வர்றேன். இப்போ நான் 4-ஆம் வகுப்பு படிச்சிட்டு இருக்கேன். 8-ம் வகுப்புக்குப் பிறகு படிப்புல முழுமையாகக் கவனம் செலுத்த ப்ளான் பண்ணியிருக்கேன்.

அப்புறம் காலேஜ் முடிச்சதும், மீண்டும் சினிமா வாய்ப்புகளுக்கு முயற்சி பண்ணலாம்னு இருக்கேன்” எனப் பகிர்ந்தவர் ‘பை பை’ சொல்லி முடித்துக் கொண்டார்.

See all 170 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *