‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ரித்விக்கைப் பேட்டி கண்டோம்.

‘ஜெயிலர் 2’ அனுபவம், படப்பிடிப்புத் தளத்தில் நடந்த நிகழ்வுகள், அவரின் அடுத்தடுத்த இலக்குகள் உள்ளிட்டவற்றைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார்.

Jailer 2
Jailer 2

நம்மிடையே பேசுகையில், “‘ஜெயிலர் 2’ படத்தை மக்கள் கொண்டாடுகிறார்கள். ‘ஜெயிலர்’ முதல் பாகம் பண்ணும்போது ‘ஜெயிலர் 2’ வரும் என்றெல்லாம் நான் நினைக்கவே இல்லை.

ரஜினி சாருடன் ஒரே ஒரு படம் நடிப்பதே பெரிய விஷயம், இதில் இரண்டாவது முறையும் என்னை அழைத்து வாய்ப்பு கொடுத்தபோது ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது. ரஜினி சார் படப்பிடிப்புத் தளத்தில் தனக்கான ஷாட் இல்லை என்றாலும்கூட அங்கேயே இருந்து மற்றவர்கள் நடிப்பதை ரொம்பவே கவனிப்பார்.

என்னுடனும் ஜாலியாக ஃப்ரண்ட்லியாகப் பேசுவார். அதேபோல் எஸ்.ஜே. சூர்யா சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். ஒரு காட்சி சிறப்பாக வரும் வரை அவரே ‘ஒன் மோர்’ கேட்டுத் திரும்பத் திரும்பச் செய்து காட்டுவார்.

இயக்குநர் நெல்சன் சார் செட்டில் எப்போதும் ஜாலியாகக் கலாய்த்துக் கொண்டுதான் இருப்பார். நான் தினமும் ஊத்தாப்பம்தான் சாப்பிடுவேன், அதை வைத்தே என்னை இயக்குநர் நெல்சன் சார் கிண்டல் செய்வார்” என்றவர், தன்னுடைய பெற்றோர் குறித்து, “யூடியூப் சேனல்தான் என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

அதைத் தவிர நாங்கள் ஒரு ஸ்டார்ட் அப் வைத்திருக்கிறோம். ஆனால், இன்னும் அதிலிருந்து வருமானம் எதுவும் வரவில்லை” என்றார்.

jailer 2 - Rithvik
jailer 2 – Rithvik

தொடர்ந்து பேசியவர், “சினிமாவில் இதுவரை சப்போர்ட்டிங் கேரக்டர்களில்தான் நடித்து வருகிறேன். ஆனால், குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொண்ட ஒரு படத்தில் முதன்மைக் கதாபாத்திரமாக நடிக்க வேண்டும் என்பது என் ஆசை.

நான் எப்போதுமே ஜாலியாகத்தான் இருப்பேன். நிறைய புத்தகங்கள் படிப்பேன், கேம்ஸ் விளையாடுவேன். எனக்கு ஒரு காமிக்ஸ் எழுத்தாளராக வேண்டும் என்றும் ஆசை இருக்கிறது.

எதிர்காலத்தில் ஹாரர், ஃபேண்டசி, அட்வென்ச்சர், காமெடி, மிஸ்டரி என எனக்குப் பிடித்த கதைகளை எழுதி அதை நானே இயக்கி விஷுவலாகக் காட்ட வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்” எனப் பகிர்ந்துகொண்டார்.

See all 188 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *