ஏகன், ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண் என இளம் பட்டாளங்கள் நடித்திருக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்காக நடிகர் அதிர்ச்சி அருணைப் பேட்டி கண்டோம்.

‘ஹைக்கூ’-விலிருந்து தொடங்கி பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை அதிர்ச்சி அருண் பகிர்ந்துகொண்டார்.
நம்மிடையே பேசியவர், ” ‘ஹைக்கூ’ திரைப்படம் ரொம்ப நல்லா வந்திருக்கும். ஷூட்டிங் முதல் நாளே இயக்குநர் யுவராஜ், ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் வரை எல்லாரையும் கூப்பிட்டு, ‘அதிர்ச்சி யார் வந்தாலும் முதல்ல அண்ணான்னு கூப்பிடுங்க’னு சொல்லி ட்ரெயின் பண்ணி வச்சுட்டாரு.
என்னை எல்லோரும் அண்ணான்னுதான் கூப்பிட்டாங்க. நடிகை ஃபெமினா ஜார்ஜ் என்னை அண்ணான்னு கூப்பிட்டாகூட பரவால்ல, அவங்க அம்மாவே வந்து ‘அண்ணா நல்லா இருக்கீங்களா’னு கேக்குற அளவுக்கு ஆயிடுச்சு” என ஜாலியாகத் தொடங்கியவர், “பல்லாவரத்தில் வளர்ந்த எனக்கு, அதே இடத்திலிருந்து வந்து பெரிய ஆளான சந்தானம் சார், சமந்தா மேம் போன்றவர்களைப் பார்த்துச் சின்ன வயதிலிருந்தே சினிமா ஆசை இருந்தது.
ஆனால் காலேஜ் முடித்து வெளியே வந்த பிறகே சினிமா நாம் நினைத்தது போல அவ்வளவு சுலபம் இல்லை எனப் புரிந்தது” என்றார்.

வி.ஜே. சித்துவின் டீம் சமீபத்தில் ஹிப்ஹாப் ஆதி இசையில் ‘மீசைய முறுக்கு 2’ படத்தில் ஒரு பாடலைப் பாடியிருந்தார்கள். அந்த டீமில் அதிர்ச்சி அருணும் ஒருவர். அந்தப் பாடல் அனுபவம் குறித்துப் பகிர்ந்தவர், “ஹிப்ஹாப் தமிழா ஆதி அண்ணன் கூப்பிட்டார். சித்து அண்ணன்தான் நம்மை ஹிப் ஹாப் ஆதி அண்ணா பாட வைக்கப் போவதாக சொன்னார்.
எங்களை அங்கு ஜாலியாக கோரஸ் பாட வச்சாரு.” என்றவர், ” ‘டயங்கரம்’ படத்துல சின்ன கேரக்டர்தான் பண்ணியிருக்கேன். அதுல கேரக்டர் வேற எதுவும் இல்ல. நான் ஒரு கேரக்டர் பண்ணினால் நல்லா இருக்கும்னு சித்து அண்ணன் கேட்டாரு. அவர் சொன்ன கேமியோ கேரக்டர்ல நான் நடிச்சிருக்கேன்!” எனப் பகிர்ந்துகொண்டார்.
ஜேசனும் நானும்.. அதை சொல்ல நீங்க யார்?.. கிசுகிசு வதந்திக்கு சாந்தினி கொடுத்த பதிலடி!
October 23, 2026
விக்ரம் வேதா : `இருவரும் நமக்கு உணர்த்திச் செல்வது என்ன?' | புதிர்களின் பின்னல்! | `சினி'ஸ்கோப் 35
October 23, 2026
உதட்டை கடிங்க மேடம்.. கன்றாவியா இருக்கும்.. கவர்ச்சி பட இயக்குநர்களை வறுத்தெடுத்த ஷகீலா!
October 23, 2026
Jailer 2 Day 8 Box Office – ஜெயிலர் 2 8வது நாள் வசூல் இவ்வளவா?.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலைமை என்ன?
October 23, 2026
திருமணத்துக்கு ராஷ்மிகா மந்தனாவை கெஞ்ச விட்ட விஜய் தேவரகொண்டா.. இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்
October 23, 2026
ஜெயிலர் 2 முரட்டு வில்லன்.. நீச்சல் குளத்தில் யாருடன் குளிக்கிறாரு பாருங்க.. மனைவி போட்ட கமெண்ட்!
October 22, 2026
Canadian Politician Wants the Government to Bail Out Mass Effect Developer BioWare
October 23, 2026
Hundreds to defy Palestine Action ban in protest at US embassy in London
October 23, 2026
NFL would cancel Paris game if unsafe due to riots, Steelers’ Rodgers says
October 23, 2026
Trump ordered to testify in $10bn BBC lawsuit discovery: What happens now?
October 23, 2026
Russia drops cluster bombs on Ukraine as Kyiv consolidates front line
October 23, 2026