எப்போதும் தீபாவளிக்கு வெளியாகும் படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும். அந்த வரிசையில் இந்த வருடம் வெளியாகும் படங்களுக்குப் பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இருக்கிறது. சூர்யாவின் ‘சீன்’, உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாகும் ‘ராமாயணா’ எனப் பட வரிசைகளும் அதிகமாக இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

'சீன்' படத்தில்...
‘சீன்’ படத்தில்…

சீன்:

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆக்ஷனோடு சேர்த்து காமெடியும் சூர்யா இப்படத்தில் செய்திருக்கிறாராம். அத்தோடு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை நஸ்ரியா மீண்டும் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி தந்திருக்கிறார். ‘பேரழகன்’ படத்திற்குப் பிறகு இப்படத்தில் மலையாள இயக்குநருடன் சூர்யா இணைந்து பணிபுரிகிறார். நவம்பர் 6-ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்திற்குப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘கருப்பு’, ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ படங்களைத் தொடர்ந்து சூர்யா இதன் மூலம் ஹாட்ரிக் அடிப்பாரா எனவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

மூக்குத்தி அம்மன் 2:

‘மூக்குத்தி அம்மன்’ ஃபிரான்சைஸின் இரண்டாவது பாகத்தை இயக்குநர் சுந்தர் சி. எடுத்திருக்கிறார். இதிலும் அம்மனாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவரைத் தாண்டி, ஊர்வசி, ரெஜினா காசண்ட்ரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஹிப்ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படமும் நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 'மூக்குத்தி அம்மன்- 2'
‘மூக்குத்தி அம்மன்- 2’

நூறு கோடி வானவில்:

இயக்குநர் சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னானி ஆகியோர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பே எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படம் ‘நூறு கோடி வானவில்’. சித்து குமார் இசையமைத்திருக்கும் இப்படமும் தீபாவளி வெளியீடாக வருகிறது. இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

ராமாயணா – முதல் பாகம்:

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம் இந்தத் தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் – ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்திருக்கும் இப்படம் நவம்பர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. பல உலக மொழிகளில் பிரமாண்டமாக இப்படம் வெளியாகவிருக்கிறது.

Ramayana Trailer - Yash
Ramayana Trailer – Yash

இந்தப் படங்களைத் தாண்டி ஆண்டனி வர்கீஸ் பெபேவின் ‘டிஸ்கோ’ என்கிற மலையாளப் படமும், ‘சம்மர் ஹாலிடேஸ்’ என்கிற தெலுங்குப் படமும், ‘பவந்தரா’ என்கிற கன்னடப் படமும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகின்றன.

இதில் எந்தப் படத்திற்கு நீங்கள் வெயிட்டிங்?

See all 222 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *