திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்குத் தினமும் 6 காட்சிகள் காலை 6 மணி முதல், அடுத்த நாள் இரவு 2.30 மணி வரை திரையிட்டுக் கொள்ளத் தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

கடந்த வாரம் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

Jailer 2 Celebrations
Jailer 2 Celebrations

அதில் இந்த விடியற்காலை 6 மணி காட்சிக்காகத் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும், தயாரிப்பாளர்கள் சங்கமும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து கோரிக்கையை முன்வைத்திருந்தன. அதற்குத் தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அரசாணையில், “தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் ப்ரொடியூசர்ஸ் அசோசியேஷன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளைத் தமிழக அரசிடம் முன்வைத்தன.

அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடும் நாளிலிருந்து ஒரு வார காலத்திற்குத் திரைப்படங்களை நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிட அனுமதியளிக்கும்படிக் கோரியிருந்தன.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திரைப்படத் துறையினர் அளித்த கோரிக்கை குறித்துக் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் செய்ய உத்தேசித்து, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதிதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்குத் தினசரி ஆறு காட்சிகளுக்கு மிகாமல் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஆறு காட்சிகள் திரையிடவும் உத்தரவிட்டுள்ளார்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Theatre
Theatre

கடைசியாக விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியான சமயத்தில் இது போன்ற சிறப்புக்காட்சிகள் திரையிடப்பட்டிருந்தன.

அப்போது ரசிகர் ஒருவருக்கு ஏற்பட்ட விபத்தினால் சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

More in Cinema
அண்ணனு கூப்பிடாத.. ஹீரோயின் சான்ஸ் வாங்கி தரேன் அட்ஜெஸ்ட் பண்ணு.. இளம்பெண்ணிடம் கவிதை கோபாலின் லீலை அண்ணனு கூப்பிடாத.. ஹீரோயின் சான்ஸ் வாங்கி தரேன் அட்ஜெஸ்ட் பண்ணு.. இளம்பெண்ணிடம் கவிதை கோபாலின் லீலை November 4, 2026 நெப்போலியன் மகன் தனுஷ் நடிகராகிட்டாரு.. ஆசையை உடனே நிறைவேற்றிய தந்தை.. சூப்பர் குடும்பம் நெப்போலியன் மகன் தனுஷ் நடிகராகிட்டாரு.. ஆசையை உடனே நிறைவேற்றிய தந்தை.. சூப்பர் குடும்பம் November 4, 2026 விஜய்தான் அடுத்த 20 வருஷத்துக்கு முதலமைச்சர் போல.. மடியில் குழந்தைகள் விளையாடுறாங்களே விஜய்தான் அடுத்த 20 வருஷத்துக்கு முதலமைச்சர் போல.. மடியில் குழந்தைகள் விளையாடுறாங்களே November 4, 2026 Scene OverSeas Review – சீன் ஓவர்சீஸ் விமர்சனம்.. சூர்யாவும், நஸ்லினும் கலக்கல்.. படம் ஹிட்டாகுமா? Scene OverSeas Review – சீன் ஓவர்சீஸ் விமர்சனம்.. சூர்யாவும், நஸ்லினும் கலக்கல்.. படம் ஹிட்டாகுமா? November 4, 2026 சீன் போட முடியாது.. ஜெயிலர் 2 தீபாவளி தான்.. சூர்யா ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட தியேட்டர்! சீன் போட முடியாது.. ஜெயிலர் 2 தீபாவளி தான்.. சூர்யா ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட தியேட்டர்! November 4, 2026 அனிருத் திருமணத்துக்கு பிறகுதான் அவர் வாழ்க்கையில் ட்விஸ்ட்டாம்.. கணிப்பால் அதிர்ச்சி கொடுக்கும் ஜோதிடர் அனிருத் திருமணத்துக்கு பிறகுதான் அவர் வாழ்க்கையில் ட்விஸ்ட்டாம்.. கணிப்பால் அதிர்ச்சி கொடுக்கும் ஜோதிடர் November 4, 2026

See all 218 in Cinema →

Latest News

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *