தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, முதல்வர் விஜயின் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. எனினும், இந்த நியமனம் தொடர்பான அரசாணை இதுவரை வெளியாகவில்லை.
ஜான் ஆரோக்கியசாமிக்கு அரசு வாகனம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், நியமனம் நடைமுறையில் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், அதற்கான ஆவணங்கள் ஏன் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் இல்லை.

இந்த நிலையில், பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தன் எக்ஸ் பக்கத்தில், “முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் ஆலோசகர் பணி நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிட அஞ்சுவது ஏன்? முதல்வர் திரு. விஜய் அவர்கள், ஜான் ஆரோக்கியசாமி என்பவரைத் தனது ஆலோசகராக அமர்த்தி, அவருக்கு அரசு வாகனம், காவல்துறைப் பாதுகாப்பு மற்றும் தலைமைச் செயலகத்திலேயே தனி அலுவலகம் என அரசு அதிகாரத்தை வாரி வழங்கியுள்ளார். இந்த நியமனம் குறித்த அரசாணையைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கேட்டால், முன்னுக்குப் பின் முரணான பதில்களை வழங்கி உண்மையை மூடி மறைக்கிறது திரு. விஜய் அரசு.
இது அரசின் வெளிப்படைத் தன்மையற்ற போக்கை அம்பலப்படுத்துவதோடு, அதன் பின்னணியில் உள்ள முறைகேடுகளை மறைக்கும் முயற்சியாகும். ஏற்கனவே, தான் கடைசியாக நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணாவிற்கு டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி, தனது மேலாளர் ஜெகதீஷ் பழனிசாமிக்கு முதல்வரின் தனிச் செயலாளர் பதவி, தனது நண்பரான விஷ்ணு ரெட்டிக்கு முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ஆலோசகர் பதவி, தனது நண்பரும் ஒளிப்பதிவாளருமான மனோஜ் பரமஹம்சாவிற்கு எம்.ஜி.ஆர் அரசுத் திரைப்படக் கல்லூரித் தலைவர் பதவி, தனது திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்குக் கோவில்களுக்கான அறங்காவலர் தேர்வுக்குழு உறுப்பினர் பதவி என திரு. ஜோசப் விஜய் அவர்கள், தனக்கு நெருக்கமானவர்களுக்கு பதவிகளைத் தாரைவார்த்து வரும் நிலையில், தற்போது தவெக-வின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியின் நியமனமும் அந்தப் பட்டியலிலேயே சேர்ந்துள்ளது.

அதிகாரப்பூர்வமற்ற நபர்களையும், தகுதியைப் பார்க்காமல் தனது சினிமா உறவுகளையும், நண்பர்களையும் மட்டுமே அதிகார மையத்தில் அமர்த்தி அழகு பார்ப்பதும், அதற்காகப் பொதுமக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்துவதும் தவெக அரசு தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்.
எனவே, இனிவரும் காலங்களில் அனைத்து அரசு நியமனங்களும் ஒளிவுமறைவின்றிப் பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். தகுதி மற்றும் நேர்மையைப் புறக்கணித்துவிட்டு தனக்குத் தேர்தல் வேலை பார்த்தவர்கள் மற்றும் சினிமா நண்பர்கள் போன்றவர்களுக்கு அரசுப் பதவிகளைப் பரிசாக வழங்குவதை முதல்வர் நிறுத்திவிட்டு, தகுதியுடையவர்களுக்கு மட்டுமே பதவிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
புதின், ஜின்பிங் உள்பட பிரிக்ஸ் தலைவர்களுக்கு சைவ விருந்தா? ராகுல் கருத்தும் சூடு பிடிக்கும் விவாதமும்
September 13, 2026
உங்கள் துணை குறட்டை விடுவது உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கக் கூடும்?
September 13, 2026
முதலாளிகளை குறிவைக்கும் 'பாஸ் ஸ்கேம்': ஒரு மெசேஜ் மூலம் ரூ.1.5 கோடியை பறித்தது எப்படி?
September 13, 2026
ஒரு காலத்தில் குப்பைக்குள் உணவு தேடிய பெண் கோடீஸ்வரரானது எப்படி?
September 13, 2026
நடுக்கடலில் தலைகுப்புற கவிழ்ந்த படகின் மீது 2 நாள் அமர்ந்து உயிர் தப்பிய சிறுவன்
September 13, 2026
இடைத்தேர்தல் 2026: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்த சீமான்! – யார் யார் தெரியுமா?
September 13, 2026
Antonelli wins as Norris loses out under virtual safety car
September 13, 2026
Boks power & All Blacks of old – what did we learn from series?
September 13, 2026
Lions Star Jared Goff Is Now A Detroit-Style Pizza Pitchman
September 13, 2026
AI staff 'genuinely frightened' for humanity's future, ex-Anthropic researcher tells BBC
September 13, 2026