திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டதைக் கொச்சைப்படுத்தித் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேசியதாக நேற்று திமுக பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியது.

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அந்தப் போராட்டத்தில் ஆ.ராசா பெண்களைக் கொச்சைப்படுத்திப் பேசியிருந்தார்.

அவரது பேச்சிற்கு எதிர்ப்புத் தெரிவித்துச் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“கடமை, கண்ணியம், கட்டுப்பாடு முழக்கத்தை முன்வைத்த திமுக, இப்போது வன்மம், வெறுப்பு மற்றும் ஆற்றாமையால் நிரம்பிக்கொண்டிருக்கிறதோ என ஐயம் எழுகிறது.

அமைச்சர் வன்னி அரசு
அமைச்சர் வன்னி அரசு

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் மட்டுமல்ல; முன்னாள் ஒன்றிய அமைச்சராகவும் பணியாற்றியவர் அண்ணன் ஆ.ராசா அவர்கள்.

இந்து அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் அண்ணன் சேகர்பாபு ஆகிய இருவரின் இந்த உரையைக் கேட்டால் அந்த ஆற்றாமை புரியும்.

‘எனக்குச் சந்தேகம் இருக்கு நீ யாருக்குப் பிறந்த?’ எனக் கேட்பது, பெண்களை இழிவுபடுத்துவது ஆகாதா?

அதனால்தான் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணியார் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள், திரு.ஆ.ராசா அவர்கள் அந்தக் கேள்வி எழுப்பும்போது எந்தவித அசைவும் இல்லாமல் தலை கவிழ்ந்தவாறு இருப்பார்.

முதல்வரை ஓடுகாலி எனத் திரு.சேகர்பாபு அவர்கள் உளறியதை ‘பீப்’ போட்டு அவமானத்தை மறைக்கிறது கலைஞர் தொலைக்காட்சி.

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் மதிப்புமிகு கவிஞர் கனிமொழி அவர்கள் குறித்து பாஜகவைச் சார்ந்த திரு.எச்.ராஜாவும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திரு.சீமான் அவர்களும் மிக இழிவாகப் பேசியபோது, கண்டித்த விடுதலைச் சிறுத்தைகள் இப்போது, திமுகப் பேச்சாளர்களின் இந்த இழிவான உரையைக் கண்டிக்கிறது.

பாஜக எச்.ராஜா, திமுக ஆ.ராசா என்ன வித்தியாசம் இருக்கிறது?” என்று வன்னி அரசின் அறிக்கை கூறுகிறது.

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

ஆ.ராசாவின் பேச்சிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகமும், “திமுகத் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அவர்கள் பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது.

திமுகத் தலைவர்களில் சிலர் தொடர்ந்து பெண்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவதும் அதைக் கேட்டுத் தொண்டர்கள் ஆர்ப்பரிப்பதும் சகிக்க முடியவில்லை.

அமைச்சர் நிர்மல் குமார் பேசியதைக் கண்டியுங்கள். அவருடைய தாயாரை இழிவுபடுத்துவதை எப்படித் திமுகத் தலைவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

பொதுவெளியில் பெண்களை இழிவுபடுத்திப் பேசுபவர் யாராக இருந்தாலும் அந்தந்தக் கட்சித் தலைமை கண்டிக்கவும், ஒழுங்குபடுத்தவும் முன்வர வேண்டும்.

சில திமுகவினர் ‘கண்ணியம்’ தவறுவது தொடர்கிறது. ‘கட்டுப்பாடு’ நிலைநிறுத்தும் ‘கடமை’யைத் திமுகத் தலைவர் செய்வார் என்று நம்புகிறேன்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

More in TamilNews
இடைத்தேர்தல் 2026: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்த சீமான்! – யார் யார் தெரியுமா? இடைத்தேர்தல் 2026: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்த சீமான்! – யார் யார் தெரியுமா? September 13, 2026 தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் – என்ன பேசினார்கள்? தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் – என்ன பேசினார்கள்? September 13, 2026 மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! – யார் எங்கே? மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! – யார் எங்கே? September 13, 2026 BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" – மோடி பேச்சு BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" – மோடி பேச்சு September 13, 2026 "தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” – நிர்மல் குமார் "தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” – நிர்மல் குமார் September 13, 2026 "நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" – தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை "நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" – தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை September 13, 2026

See all 774 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *