அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் கல்வி பயின்று வரும் மாணவன் பாரதிதாசனுக்கு விடுவிக்க வேண்டிய நிதி சம்பந்தமாக சர்ச்சை எழுந்திருந்தது. முறையான ரசீதுகளை சமர்பிக்காமல் மாணவருக்கு நிதியை விடுவிக்க முடியாது என சமூகநீதித்துறை உறுதியாக இருந்த நிலையில், இப்போது மாணவனுக்கான நிதி விடுவிக்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது. பின்னணியில் என்ன நடந்தது என்பதை விசாரித்தோம்.
இதுசம்பந்தமாக நம்மிடம் பேசிய கோட்டை வட்டாரத்தினர் சிலர், ‘மாணவன் பாரதிதாசன் விவகாரம் சட்டமன்றம் வரை விவாதமாகியிருந்தது. சட்டமன்றத்திலேயே எதிர்க்கட்சிகள் மாணவனின் கல்விக்கட்டணம் சார்ந்து சரமாரியாக கேள்வியையும் எழுப்பின. ஆனாலும், அமைச்சர் மிக உறுதியாக மாணவன் உரிய ரசீதுகளை சமர்பிக்காமல் பணத்தை விடுவிக்க முடியாது என தீர்க்கமாக கூறினார்.
அமைச்சரின் முடிவு சரியானதுதான். நிதிப் பற்றாக்குறை நிலவும் சூழலில், அரசின் கஜானாவிலிருந்து செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் முறையாக செலவழிக்கப்பட வேண்டுமென அமைச்சர் நினைக்கிறார். மேலும், ஒரு வருடத்துக்கு ஒரு மாணவருக்கு 36 லட்சம் வரைக்கும் உதவித்தொகையாக கொடுக்கலாம் என்றுதான் திட்டத்தில் இருக்கிறது. 36 லட்சத்தையும் முழுமையாக கொடுக்க வேண்டும் என்றில்லை. உதாரணமாக மாணவருக்கு 20 லட்சம்தான் செலவு எனில், அதை மட்டும் கொடுத்தால் போதும். ஆனால், மாணவர் பாரதிதாசன் 36 லட்ச ரூபாயையும் வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டிருக்கிறார். அதனால்தான் அவர் வைத்த சில செலவு ரசீதுகளில் ஆட்சேபனை ஏற்பட்டது. அதற்கு முறையான ரசீதுகளை கொடுங்கள் என்றுதான் துறை சார்பில் மாணவரிடம் கேட்கப்பட்டது.
மாணவர் இதை அரசியலாக மாற்றிவிட்டார். திமுகவும் இதை நன்றாக பயன்படுத்த தொடங்கிவிட்டது. மாணவனுக்கு கல்வி உதவித்தொகையை அரசு கொடுக்கவில்லையெனில், திமுகவே அந்தத் தொகையை கொடுக்கும் என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஸ்கோர் செய்தார். இதன்பிறகுதான் இந்த விவகாரத்தை முதல்வர் அலுவலகம் சீரியஸாக எடுத்தது. அரசு உதவித்தொகையை விடுவிக்காமல், திமுக அந்தப் பணத்தை கட்டும் சூழல் ஏற்பட்டால் அரசியல் களத்தில் தவெகவுக்கு அது பெரும் பின்னடைவை கொடுக்கும். இதை மனதில் வைத்துதான் முதல்வர் அலுவலகம் தரப்பில், சமூகநீதித்துறைக்கு மாணவரின் விவகாரத்தை பிரச்னையை மேலும் பெரிதாக்காமல் முடித்து வையுங்கள் என மெசேஜ் பாஸ் செய்யப்பட்டது. விசிக தலைவர் திருமாவளவனும் மாணவன் விவகாரம் பெரிதாக வளர்ந்து விசிகவுக்கு எதிராக திரும்புவதை விரும்பவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மாணவனுக்கான உதவித்தொகையை முழுமையாக விடுவிக்கும் முடிவுக்கு சமூகநீதித்துறை வந்திருக்கிறது. மாணவரிடம் முறையான ரசீதுகளை சமூகநீதித்துறை கேட்டது. அந்த ரசீதுகள் எதுவும் இன்னமும் கிடைக்கப் பெறவில்லை. மாணவனின் கல்விக்கட்டணம் தொடர்பாக மாணவர் பயிலும் பல்கலைக்கழகத்துக்கு சமூகநீதித்துறை ஒரு மெயில் அனுப்பியிருந்தது. அந்த மெயிலுக்கும் பல்கலைக்கழகம் இன்னமும் பதில் அனுப்பவில்லை. அரசியல்ரீதியாக பிரச்னை விஸ்வரூபம் எடுப்பதாலயே சமூகநீதித்துறை பேக் அடித்திருக்கிறது’ என்கின்றனர் அந்த விவரமறிந்த புள்ளிகள்.
"ரஷ்ய எண்ணெய்க்காக அமெரிக்கா இந்தியா மீது வரி விதிப்பதற்கு முன் யோசிக்க வேண்டும்.!" – JP Morgan CEO
September 23, 2026
தாராபுரம்: `விருப்பப்பட்டவர்கள் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்..!' – ஆவேசமான நிர்வாகிகள்!
September 23, 2026
"ஒரு குழந்தையின் கனவு நனவானது போல உணர்கிறேன்.!" – நடிகை பார்வதி
September 23, 2026
பாசிட்டிவ் ரூட்டில் ஈரான் போர் நிறுத்தம்? 'நவம்பருக்கு பின் ஒப்பந்தம்' – ட்ரம்ப் சொன்ன தகவல்கள்!
September 23, 2026
America AI, தானாகவே China AI மீது Attack நடத்தினால்… போரே வெடிக்கும்! | AI Hotline Explained
September 23, 2026
"சங் பரிவாரின் B Team ஆக மாறிவிட்டது காங்கிரஸ் அரசு" – பினராயி மீதான விசாரணைக்கு சிபிஎம் கண்டனம்
September 23, 2026
Control’s Story And Lore Gets Weird, So Here’s What You Need To Know Before Control Resonant
September 23, 2026
Fire Emblem Fortune’s Weave Gifts Guide
September 23, 2026
Mayawati Hands One Nephew Key Party Post, Snubs The Other
September 23, 2026
CBSE Announces Special Class 12 Exams For Students Affected By West Asia Crisis
September 23, 2026
8 UDP MLAs Join BJP, Making It 2nd Largest Political Party In Meghalaya
September 23, 2026
NDTV Defence Summit 2026: Full Agenda, Timings And Key Speakers
September 23, 2026