தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரோடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, ஹைதராபாத்தில் உள்ள பார்க் ஹயாத் ஹோட்டலில் நேற்று மாலை பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “சமீபகாலமாக நல்ல கருத்துள்ள திரைப்படங்களை தெலுங்கு ரசிகர்கள் சின்ன படம், பெரிய படம் என்று பார்க்காமல் கொண்டாடி வருகிறார்கள். அதேபோல் ‘சிக்மா’ படமும் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன். ஜேசன் சஞ்சய்யைப் பார்க்கும்போது அவரது தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகரை எனக்கு நினைவூட்டுகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
எனது ஆரம்பகாலத்தில் ‘சட்டனிகி கல்லு லேவு’, ‘தேவாந்தகுடு’ போன்ற சிறந்த படங்களை அவர் எனக்கு இயக்கியுள்ளார். நடிகர் விஜய்யின் ஒரு படத் தொடக்க விழாவிற்கு நானும் ரஜினிகாந்தும் சென்று கைதட்டி வாழ்த்தினோம். தற்போது அதே குடும்பத்திலிருந்து வந்துள்ள சஞ்சய் என்னை அழைத்ததும் மகிழ்ச்சியுடன் வந்தேன். ஏன் தந்தையைப் போல நடிகராகாமல் இயக்கத்தைத் தேர்ந்தெடுத்தாய் என்று சஞ்சய்யிடம் கேட்டேன். அதற்கு எனக்கு எழுதவும் இயக்கும் வேலையும்தான் பிடிக்கும் என்றார்.
தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகர், பாட்டி சோபா ஆகியோரின் எழுத்து மற்றும் இயக்கும் திறமையின் மரபணு (Genetics) அவருக்குள்ளேயே இருக்கிறது. சஞ்சய் பார்ப்பதற்கு 1993-95 காலகட்டத்தில் விஜய் எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார். அவரது தாத்தாவும் தந்தையும் திரைத்துறையில் உச்சத்தை அடைந்தது போல, ஜேசன் சஞ்சய்யும் இயக்குநராகப் பெரிய உயரத்தைத் தொடுவார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
வசமாக சிக்கிய சந்திரகலா.. சொந்த வீட்டையே கொளுத்த சொன்ன சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம்
September 26, 2026
"அரசு OTT தளம் குறித்து வெகு விரைவில் நல்ல செய்தி" – என்ன சொல்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்?
September 26, 2026
"என்னை விட நல்ல கதைகள் வைத்திருக்கும் அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள்" – 'மொத ராத்திரி' இயக்குநர்
September 26, 2026
நல்லவங்களை இந்த உலகம் வாழவிடாது.. அனாதையா இருக்கோம்.. நடிகை விஜயலட்சுமி கண்ணீர்!
September 26, 2026
சாய் அபயங்கரை அட்டாக் செய்தாரா ஹிப்ஹாப் தமிழா ஆதி?.. மீசைய முறுக்கு 2 பஞ்சாயத்து!
September 26, 2026
ஆணும் ஆணும் கிஸ்.. தியேட்டர்ல பார்க்கவே அருவருப்பா இருக்கு.. டோரதி படத்தை கிழித்த நெட்டிசன்கள்!
September 26, 2026
Chess Olympiad 2026: Can India retain their gold medals on final day?
September 27, 2026
Virat on the brink of history, 59 runs away from breaking Sachin's ODI record
September 27, 2026
‘Godzilla Minus Zero’ Has Critics Raving In Early Rotten Tomatoes Reviews
September 27, 2026
Asian Games 2026: Treesa Jolly-Gayatri Gopichand bow out in Badminton quarters
September 27, 2026
Hyundai Alcazar long-term review, 21,000km report
September 27, 2026
Class topper, wooden gun, Nano rides: How Shapath found his way in Asian Games
September 27, 2026