தமிழ் சினிமாவின் பக்தி காவியங்களில் பெரும் வரவேற்பை அள்ளிய படம ‘திருவிளையாடல்’. ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாகேஷ், டி.எஸ்.பாலையா என நடிப்பில் முத்திரை பதித்த கலைஞர்கள் நடித்த ‘திருவிளையாடல்’ வெளியாகி 60 ஆண்டுகளை கடந்தாலும் இன்று ரசிகர்களின் நெஞ்சில் நிறைந்த காவியமாக இடம்பெற்றிருக்கிறது.

இந்த படம் இப்போது வெளிநாட்டில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் செய்யப்பட்டு, ரீரிலீஸ் காணவிருக்கிறது. இதற்கு முன்னதாக படத்தின் டிரெய்லர் ரிலீஸும் சென்னையில் நடைபெறவிருக்கிறது. இது குறித்த தகவல்களை விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி..

சிவாஜி, சாவித்ரி

கடந்த 1965ம் ஆண்டு ‘திருவிளையாடல்’ படம் திரைக்கு வந்தது. சிவபெருமான சிவாஜி, கயற்கண்ணியாக சாவித்ரி, அவ்வையாக கே.பி.சுந்தராம்பாள், ஹேமந்த பாகவதராக டி.எஸ்.பாலையா, மன்னர் செண்பகப்பாண்டியனான முத்துராமன், தருமியாக நாகேஷ் என தமிழின் தேர்ந்த நடிகர்களின் சங்கமமாக இந்த படம் அமைந்திருந்தது.

இந்த படம் எப்படிப்பட்ட வெற்றியை குவித்த திரைப்படம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இப்போது இந்த படம் நவீன தொழில்நுட்பத்தில் ரெடி செய்யப்பட்டுள்ளது.

ஏ.பி.நாகராஜன்

பொதுவாக இதற்கு முன் டிஜிட்டலைஸ்ட் செய்யப்பட்டு ரீரிலீஸ் செய்யப்பட்ட படங்கள் பலவும், சென்னையில் தான் டிஜிட்டல் வேலைகள் செய்யப்பட்டதாக இருக்கும். ஆனால் இதில் ரொம்பவும் ஸ்பெஷல். இதன் டிஜிட்டல் வேலைகள் ஜெர்மனியிலும், லண்டனிலும் செய்துள்ளதுடன், படத்தின் டிரெய்லரும் ரெடி செய்துள்ளனர்.

வரும் அக்டோபர் 1ம் தேதி அன்று சிவாஜியின் 99வது பிறந்ததினம் வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா அன்று சென்னையில் கேசினோ திரையரங்கில் நடத்துகின்றனர். சிவாஜியின் தீவிர ரசிகரான பி.வி.முரளி இப் படத்தின் வெளியீட்டை ஒருங்கிணைத்து வருகிறார். ஸ்ரீ பால விநாயகர் பிக்சர்ஸ் சார்பில் ஜி. லதா மறு வெளியீடு செய்ய இருக்கிறார்.

இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் ஏ.பி. நாகராஜனின் மகனான ஏ.என். பரமசிவம் பங்கேற்கிறார். தவிர தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன், ஒய்.ஜி மகேந்திரன் , இளவரசு, வடிவுக்கரசி, அண்ணாதுரை கண்ணதாசன், இயக்குனர் பூபதி ராஜா , முனைவர் மருது மோகன் என பலரும் பங்கேற்று பேசவிருக்கிறார்கள். சில படங்களைத்தான் காலத்தால் அழியாத காவியமென சொல்ல முடியும். அந்த வரிசையில் இந்த ‘திருவிளையாட’லுக்கு எப்போதும் முதலிடம் உண்டு.!

More in Cinema
விஜய் கண்டிப்பாக வருவார் பாருங்க.. உறுதியாக நம்பிக்கை வைத்த உதயநிதி மனைவி.. இப்படியும் நடந்ததா? விஜய் கண்டிப்பாக வருவார் பாருங்க.. உறுதியாக நம்பிக்கை வைத்த உதயநிதி மனைவி.. இப்படியும் நடந்ததா? September 30, 2026 டாஸ்க்கும் வேணாம்.. ஒன்னும் வேணாம்.. ரூ.5 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய போட்டியாளர்! டாஸ்க்கும் வேணாம்.. ஒன்னும் வேணாம்.. ரூ.5 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய போட்டியாளர்! September 30, 2026 என் மகனை பார்ப்பதற்காகவே அமெரிக்கா வந்தார்.. பாரதிராஜா, பாக்யராஜ் பற்றி நெப்போலியன் உருக்கம் என் மகனை பார்ப்பதற்காகவே அமெரிக்கா வந்தார்.. பாரதிராஜா, பாக்யராஜ் பற்றி நெப்போலியன் உருக்கம் September 30, 2026 இளையராஜா முன்னாடி நிக்கணும்.. கானா பாட்ட சினிமாவுக்குள் கொண்டு வந்தது இதற்காகத்தான்.. தேவா பளிச்! இளையராஜா முன்னாடி நிக்கணும்.. கானா பாட்ட சினிமாவுக்குள் கொண்டு வந்தது இதற்காகத்தான்.. தேவா பளிச்! September 30, 2026 Dorothy Box Office: டல் அடித்த டோரதி.. 5 நாளில் கார்த்திக் சுப்புராஜ் படத்துக்கு வந்த வசூல் எவ்வளவு? Dorothy Box Office: டல் அடித்த டோரதி.. 5 நாளில் கார்த்திக் சுப்புராஜ் படத்துக்கு வந்த வசூல் எவ்வளவு? September 30, 2026 Yezhu Kadal Yezhu Malai First Review – ராமின் ஏழு கடல் ஏழு மலை முதல் விமர்சனம்.. வன்முறை இருக்காம் Yezhu Kadal Yezhu Malai First Review – ராமின் ஏழு கடல் ஏழு மலை முதல் விமர்சனம்.. வன்முறை இருக்காம் September 30, 2026

See all 145 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *