ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி நடிப்பில் உருவாகி ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது ‘ஓம்’.

சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த மாதம் 20-ம் தேதி திரைக்கு வருகிறது. முதலில் இப்படம் இன்று வெளியாவதாக இருந்தது.

Mammootty - Dhanush
Mammootty – Dhanush

ஆனால், ரஜினியின் ‘ஜெயிலர் 2’ வருவதால் படத்தின் ரிலீஸைத் தள்ளி வைப்பதாக தனுஷ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

‘ஓம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

அவர் பேசுகையில், “கடந்த ஆகஸ்ட் மாதமே தனுஷ் சார் என்னிடம் ரிலீஸ் பற்றிய இந்த விஷயத்தைச் சொன்னார். ரஜினி சாரின் திரைப்படமும் அதே காலகட்டத்தில் வெளியாவதால், அவருக்குக் கொடுக்கும் மரியாதையின் நிமித்தமாக நமது படத்தின் ரிலீஸைத் தள்ளிவைக்கலாம் என்று கூறினார்.

நாங்கள் ஏற்கனவே ஓடிடி தளத்திற்கு ஒரு குறிப்பிட்ட ரிலீஸ் தேதியை உறுதி செய்திருந்ததால், அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே மாற்ற முடியும் என்ற சூழல் இருந்தது.

 'ஓம்'
‘ஓம்’

அப்படியிருந்தும், படத்தின் ரிலீஸைத் தள்ளிவைப்பதில் தனுஷ் சார் மிகவும் உறுதியாக இருந்தார். ஒரு திரைப்படத்திற்குச் சரியான ரிலீஸ் தேதியைத் தீர்மானிப்பது மிகவும் முக்கியமானது.

அடுத்தடுத்து பல திரைப்படங்கள் வெளியாகும் இந்தச் சூழலில், ஒவ்வொரு திரைப்படத்திற்கும் போதுமான அளவு திரையரங்குகளும் கவனமும் கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், படத்தின் ரிலீஸ் தேதியைப் பொறுத்தே எங்களது அடுத்தடுத்த வேலைகளுக்கான காலக்கெடுவும் தீர்மானிக்கப்படுகிறது” எனக் கூறியிருக்கிறார்.

See all 163 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *