அரசுப் பணிகளில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்களை மட்டுமே நியமிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் உள்ள அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கடைநிலை ஊழியர்கள் முதல் மேலாளர் நிலை வரையிலான பணிகளுக்கு தற்காலிக பணியாளர்களைத் தேர்வு செய்ய வெளிநாட்டு மனிதவளக் கழகத்தை (Overseas Manpower Corporation Limited) முகமையாக நியமித்து, அரசுப் பணியாளர்களை இனி தற்காலிக ஒப்பந்த பணியாளர்களாக மட்டுமே நியமிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
இதுதான் தவெக அரசு ஏற்படுத்திய மாற்றமா?
அரசுப் பணி கனவுடன் பல ஆண்டுகளாகப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி, தங்களது இளமையையும் உழைப்பையும் செலவிட்டு காத்திருக்கும் தமிழக இளைஞர்களுக்கு போட்டித் தேர்வு மூலம் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி, நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அரசு, இருக்கின்ற அரசுப் பணியிடங்களையும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது ஏன்? இதுதான் தவெக அரசு ஏற்படுத்திய மாற்றமா? இதற்கு பெயர்தான் தூயசக்தியா?
அரசுப் பணிகளையே வெளிமுகமை வழியாக நிரப்ப முற்படுவது, அரசுப்பணிக்காக இரவுபகல் பாராமல் படித்து, அயராது முயலும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தினை இருளாக்கும் கொடுஞ்செயல் இல்லையா? தமிழக இளைஞர்கள் பட்டப்படிப்புகளைப் படிப்பது எதற்காக? தங்கள் தகுதிகளை வளர்த்துக்கொள்வது எதற்காக? இரவு பகல் பாராது அரசுப் பணிக்காக உழைப்பது எதற்காக?
நிரந்தர வேலை வாய்ப்புக்காகதானே? அதைக்கூட தவெக அரசால் தரமுடியாமல், இருக்கும் வாய்ப்பையும் தடுத்து கெடுப்பது என்ன நியாயம்? தவெக அரசு ஆட்சிக்கு வந்தது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கா? அல்லது இருக்கின்ற வேலைவாய்ப்புகளைக்கூட நிரந்தரமற்றதாக மாற்றுவதற்கா?
அரசுப்பணியாளர் தேர்வாணையம் என்ற ஒன்று எதற்கு?
அரசுப்பணிகள் அனைத்தையும் தனியார் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க தாரை வார்த்துவிட்டு, அரசு போட்டித்தேர்வு வயது வரம்பை உயர்த்துவதால் யாருக்கு என்ன பயன்? அரசுப் பணிகளை வெளிமுகமை மூலம் நியமித்தால் அரசுப்பணியாளர் தேர்வாணையம் என்ற ஒன்று எதற்கு? கலைத்துவிடலாமே? எல்லாவற்றையும் தனியாரிடம் ஒப்படைத்தால் அரசு எதற்கு? ஆட்சி நிர்வாகம்தான் எதற்கு? அரசுப் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்புவதற்கு அரசுக்கு என்ன தடை?
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் அரசுக்கு என்ன தயக்கம்? அரசுப் பணிகளை வெளிமுகமைகளிடம் ஒப்படைப்பதால் பயன்பெறப்போவது வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களா? அல்லது பணியாளர் வழங்கும் நிறுவனங்களா? தற்காலிக ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு அரசுப் பணியாளர்களுக்குரிய ஊதியம், பணிப் பாதுகாப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படுமே? தற்காலிக ஒப்பந்த பணியாளர் நியமனத்தில் இடஒதுக்கீடு பறிபோகுமே? அதற்கெல்லாம் தவெக அரசு என்ன பதில் கூறப்போகிறது? இதற்குப் பெயர்தான் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியா? வெட்கக்கேடு!

இதனை ஒருபோதும் ஏற்க முடியாது!
அரசின் அடிப்படைக் கடமையான வேலைவாய்ப்பை உருவாக்குவதிலிருந்து விலகி, நிரந்தரப் பணியிடங்களை ஒப்பந்தப் பணிகளாக மாற்றுவது வேலையில்லாத் திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும். இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறித்து, தமிழக இளைஞர்களின் அரசுப்பணி வாய்ப்பை சிதைக்கும் இத்தகைய நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்க முடியாது.
ஆகவே, அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான பணியாளர்களை தற்காலிக ஒப்பந்த முறையில் நியமிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு கைவிடுவதோடு, காலியாக உள்ள பணியிடங்களை அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து, பல இலட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் அரசுப்பணி வாய்ப்பையும், சமூகநீதி இட ஒதுக்கீட்டையும், தொழிலாளர்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று சீமான் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
“இந்த வாதத்தை ஏற்க முடியாது' ; கே.என் நேரு மீது FIR பதிவு செய்ய தடையில்லை' – உச்ச நீதிமன்றம் அதிரடி
November 2, 2026
`பள்ளியில் சிக்கன் பிரியாணி: அதுவரைஅசைவம் சாப்பிடுவதில்லை என அமைச்சர் ராஜ்மோகன் முடிவு' – லயோலா மணி!
November 2, 2026
சிறைவாசி பெட்ரோல் பங்க்: “தனியாரிடம் கமிஷன் டீல் பேசுகிறாரா அமைச்சர் கலெக்சன் குமார்?" – எஸ்.ரகுபதி
November 2, 2026
தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய எதிரொலி : மதுரை சிறை கைதிகள் நடத்தும் உணவகம், பெட்ரோல் பங்க் மூடல்!
November 2, 2026
’ஒருவேளை நான் செந்தில் பாலாஜியாக, கடந்த கால அமைச்சர்களாக இருந்திருந்தால்.!’ – அமைச்சர் விக்னேஷ்
November 2, 2026
“ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களின் ஆட்சியில் 5 கோடி பேரமா?" – டிடிவி தினகரன் காட்டம்
November 2, 2026
“இந்த வாதத்தை ஏற்க முடியாது' ; கே.என் நேரு மீது FIR பதிவு செய்ய தடையில்லை' – உச்ச நீதிமன்றம் அதிரடி
November 2, 2026
`பள்ளியில் சிக்கன் பிரியாணி: அதுவரைஅசைவம் சாப்பிடுவதில்லை என அமைச்சர் ராஜ்மோகன் முடிவு' – லயோலா மணி!
November 2, 2026
Cyclone Murasu impact: Over 20 flights cancelled at Andhra Pradesh, Chennai airports; IndiGo issues advisory
November 2, 2026
சிறைவாசி பெட்ரோல் பங்க்: “தனியாரிடம் கமிஷன் டீல் பேசுகிறாரா அமைச்சர் கலெக்சன் குமார்?" – எஸ்.ரகுபதி
November 2, 2026
In a first, Indians can book Burj Khalifa, Singapore's Universal Studios tickets via UPI | Here's how to book
November 2, 2026
தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய எதிரொலி : மதுரை சிறை கைதிகள் நடத்தும் உணவகம், பெட்ரோல் பங்க் மூடல்!
November 2, 2026