கோவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “டாஸ்மாக்கில் ஆண்டுக்கு 480 கோடி பாட்டில்கள் விற்பனையாகின்றன. காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் பத்து ரூபாய் கூடுதலாக வாங்கினால் 4800 கோடி ரூபாய் வரும். ஆனால் 50 சதவீத காலி பாட்டில்கள் தான் திரும்ப வருகின்றன. 50 சதவீத காலி பாட்டில்கள் வரவில்லை. அப்படியென்றால் 50 சதவீத பணம் யாருக்கு போயியுள்ளது? காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்திற்கு வாங்கும் பத்து ரூபாயை, பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குவதாக சொல்கிறார்கள். விமர்சனங்கள் மீது எங்களுக்கு பயமும் இல்லை, கவலையும் இல்லை.
ஒரு பாட்டில் விலை 140 ரூபாய் என்றால் கடந்த ஆட்சியில், காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்திற்கு பத்து ரூபாய், பார்ட்டி பண்டிற்கு பத்து ரூபாய் என கூடுதலாக 20 ரூபாய் சேர்த்து 160 ரூபாய் வாங்கினார்கள். அந்த பார்ட்டி பண்டை ஒழித்துவிட்டோம். கடந்த ஆட்சியில் 99 சதவீத காலி பாட்டில்கள் திரும்ப வந்ததாக கணக்கு காட்டியுள்ளார்கள். காலி பாட்டில் பெறுவதில் பெரிய லாபியே இருக்கிறது. தமிழ்நாட்டில் நடந்த பெரிய ஸ்கேம் பாட்டில் ஸ்கேம்தான்.

ஒருவேளை நான் செந்தில் பாலாஜியாக, கடந்த கால அமைச்சர்களாக இருந்திருந்தால் அந்தப் பணம் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கும். ஆனால், அந்த பணம் அரசிற்கு வர வேண்டும். எதற்காக இவ்வளவு போராட்டம் பண்ண வேண்டும்? நேற்று டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் 10 லட்சம் மதுப்பிரியர்கள் ஒருநாள் குடிக்காமல், 150 ரூபாயை வீட்டிற்கு தந்திருப்பார்கள், அவர்களது குடும்பம் சந்தோஷமாக இருந்திருக்கும் என்பது எனக்கு மகிழ்ச்சி.
மதுபானங்கள் விலை உயரவில்லை. காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்திற்காக வாங்கப்பட்ட பத்து ரூபாயை எம்.ஆர்.பி-க்குள் கொண்டு வந்துள்ளோம். பாட்டில்களை திரும்ப தந்தால் பத்து ரூபாய் திரும்ப தரப்படும். எல்லா கடையிலும் பாட்டிலை திரும்ப தருவதற்காக இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளன. மதுப்பிரியர்கள் யாரும் எம்.ஆர்.பி-யை விட எக்ஸ்டிரா பணம் தர வேண்டாம். டாஸ்மாக் ஊழியர்களை ஒரு டீம் பணம் கொடுத்து மூளைச்சலவை செய்து போராட்டம் செய்ய வைக்கிறார்கள். நேற்று கடையடைப்பு தொடர்பாக 960 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் தந்துள்ளோம். திறந்த கடைகளை பூட்ட வைத்த 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இன்று ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், மாற்றுப் பணியாளர்களை வைத்து கடைகள் திறக்கப்படும். பணிக்கு வராத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பார்கள் டெண்டர் ஓபன் டெண்டராக நேர்மையாக நடத்தப்படும். எலைட் கடைகளில் கிடைக்கும் மதுபானங்கள் டாஸ்மாக்கிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக்கை தனியார் மயமாக்குவது மட்டுமே பிரச்சனைகளுக்காக சர்வயோக நிவாராணி அல்ல. அதேசமயம் டாஸ்மாக் தனியாருக்கு மாறவே மாறாது எனவும் சொல்லவில்லை. தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனை இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை. இது த.வெ.க அரசு, தி.மு.க, அ.தி.மு.க அரசு அல்ல” என்றார்.
“இந்த வாதத்தை ஏற்க முடியாது' ; கே.என் நேரு மீது FIR பதிவு செய்ய தடையில்லை' – உச்ச நீதிமன்றம் அதிரடி
November 2, 2026
"அரசுப் பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது ஏன்?" – தவெக அரசுக்கு சீமான் கேள்வி
November 2, 2026
`பள்ளியில் சிக்கன் பிரியாணி: அதுவரைஅசைவம் சாப்பிடுவதில்லை என அமைச்சர் ராஜ்மோகன் முடிவு' – லயோலா மணி!
November 2, 2026
சிறைவாசி பெட்ரோல் பங்க்: “தனியாரிடம் கமிஷன் டீல் பேசுகிறாரா அமைச்சர் கலெக்சன் குமார்?" – எஸ்.ரகுபதி
November 2, 2026
தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய எதிரொலி : மதுரை சிறை கைதிகள் நடத்தும் உணவகம், பெட்ரோல் பங்க் மூடல்!
November 2, 2026
“ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களின் ஆட்சியில் 5 கோடி பேரமா?" – டிடிவி தினகரன் காட்டம்
November 2, 2026
“இந்த வாதத்தை ஏற்க முடியாது' ; கே.என் நேரு மீது FIR பதிவு செய்ய தடையில்லை' – உச்ச நீதிமன்றம் அதிரடி
November 2, 2026
"அரசுப் பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது ஏன்?" – தவெக அரசுக்கு சீமான் கேள்வி
November 2, 2026
Ajit Ranade: Why India shouldn't abandon capital gains tax for the sake of the rupee
November 2, 2026
`பள்ளியில் சிக்கன் பிரியாணி: அதுவரைஅசைவம் சாப்பிடுவதில்லை என அமைச்சர் ராஜ்மோகன் முடிவு' – லயோலா மணி!
November 2, 2026
Cyclone Murasu impact: Over 20 flights cancelled at Andhra Pradesh, Chennai airports; IndiGo issues advisory
November 2, 2026
சிறைவாசி பெட்ரோல் பங்க்: “தனியாரிடம் கமிஷன் டீல் பேசுகிறாரா அமைச்சர் கலெக்சன் குமார்?" – எஸ்.ரகுபதி
November 2, 2026