“சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் நிலையங்களை மூடிவிட்டு தனியாரிடம் கமிஷன் டீல் பேசுகிறாரா அமைச்சர் கலெக்சன் குமார்? என திமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கைக் ஒழுங்குபடுத்த காவல்துறையை பயன்படுத்தாமல், பந்தோபஸ்துக்கும்-இனிப்பு வழங்குவதை தடுப்பதற்கும் பயன்படுத்தினால் கொலைகளும்-கொள்ளைகளும் பெருகாமல் என்ன செய்யும்? 2021-2026 திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவிலேயே சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தமிழ்நாட்டில்தான் சிறப்பாகச் செயல்படும் துறையாக முதலிடம் பெற்றுத் திகழ்ந்தது.
சிறைச்சாலைகள் வெறும் தண்டனைக் கூடங்களாக மட்டுமின்றி, கைதிகள் திருந்தி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திடவும், அங்கு இருக்கக்கூடிய தண்டனை சிறைவாசிகள் தங்கள் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வதற்கு பொருளாதாரத்தை ஈட்டுவதற்கும் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில்தான் கைதிகளால் நடத்தப்படும் சில்லறை பெட்ரோல் வணிக விற்பனை நிலையங்களும் சிறைத்துறையால் செயல்படுத்தப்பட்டன. சிறையில் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பதற்கு ‘பிரிசன் பஜார்’ என்கிற விற்பனை நிலையங்களும் சிறைத்துறை நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டன.
சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மூலம் ஒரு சிறைவாசி மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 7 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 12000 வரை வருமானம் ஈட்டி தன்னுடைய குடும்பத்திற்கு அனுப்பக்கூடிய ஒரு சூழ்நிலை உருவானது. குடும்பத் தலைவன் சிறையில் இருந்தாலும் அந்தக் குடும்பம் பொருளாதாரத்தில் பாதிக்கப்படாதபடி சிறைத்துறை நிர்வாகம் தந்த வேலை வாய்ப்புகள் மூலமாக அவர்கள் வருவாயை ஈட்டி தங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு வசதியாக அது அமைந்தது. சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையில் நடைபெற்ற விற்பனை நிலையங்கள் தமிழகத்திலேயே மிகச்சிறந்தவையாக கோடிக்கணக்கான ரூபாய் லாபத்தை ஈட்டி தருகின்ற விற்பனை நிலையங்களாக விளங்கின.

பெட்ரோல் நிலையங்கள் ஆண்டுக்கு சுமார் 13 கோடி ரூபாயும், பிரிசன் பஜார் ஆண்டு கோடியும் வருவாய் ஈட்டி தமிழக அரசு மற்றும் சிறைத்துறை நிர்வாகத்திற்கும் சிறைவாசிகளுக்கும் நல்ல வருவாயை உருவாக்கித் தந்தன. சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பில் நடைபெற்ற விற்பனை நிலையங்கள் மற்ற தனியார் நடத்துகின்ற பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு போட்டியாக, வசூலிலும், வருவாயிலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டன. இதெல்லாம் இன்றைய சிறைத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமாரின் கண்ணை உறுத்தியிருக்கிறது.
இன்றைக்கு தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை மூலம் நடைபெற்று வருகின்ற பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு ஒரு முயற்சி நடப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது. அதன் முதல் கட்டமாக தமிழகத்தில் மத்திய சிறைசலைகள் மூலமாக நடத்தப்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கிறது. அங்கே இறைச்சி மற்றும் சிறைத்துறை மூலம் தயாரிக்கபட்ட பொருட்கள் விற்கப்பட்ட விற்பனை நிலையமும் மூடப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக மற்றவற்றையும் மூடி கடைசியாக அவற்றையெல்லாம் தனியாருக்கு தாரை வாக்கின்ற அந்த மகத்துவமான பணியை செய்யப் போகிற அரசாக த.வெ.க அரசு இருக்கப்போகிறது.

எனவே மக்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாயை தனியாருக்கு தாரைவார்த்து அதில் கமிஷன் அடிப்பதில் ஒரு கணக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. ‘மக்கள் பணத்தை தொடமாட்டோம்’ என்று வீராவேசமாக பேசுவார்கள். ஆனால் கண்ணுக்குத் தெரியாத இடத்தில் கமிஷன் அடிக்கிறார்கள். இதுதான் தவெக அரசின் தாரக மந்திரமாக இருக்கிறது. எந்தத் துறையிலும் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயை தனியாருக்கு தாரை வார்ப்பதிலேயே தனிக்கவனம் செலுத்துகின்ற அரசாக தமிழக வெற்றிக் கழக அரசு இருக்கிறது. இந்த டம்மி அரசாங்கம் விலைவாசி உயர்வை பற்றி கவலைப்படவில்லை.
சட்டம் ஒழுங்கு குறித்து கவலைப்படவில்லை. இப்படி எதைப் பற்றியும் கவலைப்படாமல் வரப்போகிற இடைத்தேர்தலுக்கு என்ன செய்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்று அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய பொதுவுடமை தோழர்கள் இன்றைக்கு சிறைத்தறையினுடைய கட்டுப்பாட்டில் இயங்கி வருகிற அந்த பொருட்கள் விற்பனை நிலையங்கள் தனியாருக்கு தாரைவார்க்க படுவதை வரவேற்கப் போகின்றார்களா? அல்லது ஆதரிக்க போகின்றார்களா? அல்லது அனைத்து பிரிசன் பஜார்களும் தனியாருக்கு செல்வதை வரவேற்கப் போகின்றார்களா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
“இந்த வாதத்தை ஏற்க முடியாது' ; கே.என் நேரு மீது FIR பதிவு செய்ய தடையில்லை' – உச்ச நீதிமன்றம் அதிரடி
November 2, 2026
"அரசுப் பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது ஏன்?" – தவெக அரசுக்கு சீமான் கேள்வி
November 2, 2026
`பள்ளியில் சிக்கன் பிரியாணி: அதுவரைஅசைவம் சாப்பிடுவதில்லை என அமைச்சர் ராஜ்மோகன் முடிவு' – லயோலா மணி!
November 2, 2026
தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய எதிரொலி : மதுரை சிறை கைதிகள் நடத்தும் உணவகம், பெட்ரோல் பங்க் மூடல்!
November 2, 2026
’ஒருவேளை நான் செந்தில் பாலாஜியாக, கடந்த கால அமைச்சர்களாக இருந்திருந்தால்.!’ – அமைச்சர் விக்னேஷ்
November 2, 2026
“ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களின் ஆட்சியில் 5 கோடி பேரமா?" – டிடிவி தினகரன் காட்டம்
November 2, 2026
“இந்த வாதத்தை ஏற்க முடியாது' ; கே.என் நேரு மீது FIR பதிவு செய்ய தடையில்லை' – உச்ச நீதிமன்றம் அதிரடி
November 2, 2026
"அரசுப் பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது ஏன்?" – தவெக அரசுக்கு சீமான் கேள்வி
November 2, 2026
`பள்ளியில் சிக்கன் பிரியாணி: அதுவரைஅசைவம் சாப்பிடுவதில்லை என அமைச்சர் ராஜ்மோகன் முடிவு' – லயோலா மணி!
November 2, 2026
Cyclone Murasu impact: Over 20 flights cancelled at Andhra Pradesh, Chennai airports; IndiGo issues advisory
November 2, 2026
In a first, Indians can book Burj Khalifa, Singapore's Universal Studios tickets via UPI | Here's how to book
November 2, 2026
தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய எதிரொலி : மதுரை சிறை கைதிகள் நடத்தும் உணவகம், பெட்ரோல் பங்க் மூடல்!
November 2, 2026