திரைத் துறையில் 50 ஆண்டு கால சாதனைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் சிறப்பு தபால் தலை வெளியிட்டு இளையராஜாவை கவுரவித்திருக்கிறது ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்.

இந்த கவுரவத்தைப் பெற்றுக்கொண்ட பின் பேசியிருக்கும் இளையராஜா, “விக்டோரியா நாடாளுமன்றத்தில் என்னை கவுரவிப்பதும், எனது இசைப் பயணத்தை நினைவுகூரும் வகையில் அஞ்சல் தலை வெளியிடப்படுவதும் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது.

இசைஞானி இளையராஜா
இசைஞானி இளையராஜா

தமிழ்நாட்டின் ஒரு சிறிய, தொலைதூர கிராமத்தில் பிறந்த நான், இசையின் மூலம் திரைப்பட ஸ்டுடியோக்கள், இசை நிகழ்ச்சி அரங்குகள் என உலகம் முழுவதும் பயணித்திருக்கிறேன்.

இந்தப் பயணம் இவ்வளவு தூரம் செல்லும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், இசை தனக்கான பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டது.

இந்த நேரத்தில் என்னுடைய இசைக்கு உயிர் கொடுத்த எண்ணற்ற மக்கள், என்னுடன் இணைந்து பயணித்த கலைஞர்கள், என் பாடல்களை ரசித்துக்கொண்டிருக்கும் அனைத்து தலைமுறையினருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்,

இசைஞானி இளையராஜா
இசைஞானி இளையராஜா

50 ஆண்டுகால இசைப் பயணத்தில் இளையராஜாவுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கிடைத்த இந்த சிறப்பு கவுரவம், அவரது சர்வதேச இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்திருக்கிறது.

See all 196 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *