உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தலைவரான சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் (Lawrence Wong) ஆண்டுச் சம்பளம் தற்போது சுமார் 64 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் அவரது ஆண்டுச் சம்பளம் 2.2 மில்லியன் சிங்கப்பூர் டாலரிலிருந்து 3.6 மில்லியன் சிங்கப்பூர் டாலராக அதிகரித்திருக்கிறது. இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.26.9 கோடி. இந்தச் சம்பள உயர்வு மூலம் மீண்டும் உலகிலேயே அதிக சம்பளம் பெறும் அரசுத் தலைவர் என்ற இடத்தை லாரன்ஸ் வோங் தக்கவைத்திருக்கிறார்.

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்

அரசாங்கத்தில் திறமையான மற்றும் தகுதியான தலைவர்களை ஈர்க்கவும், ஊழலைத் தடுக்கவும் இந்தச் சம்பள உயர்வு அவசியமானது என்று சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

நாட்டின் தற்போதைய வாழ்க்கைச் செலவின உயர்வு மற்றும் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு பொதுமக்களிடையே இதற்கு எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன.

இதனிடையே இந்தச் சம்பள உயர்வு மூலம் தனக்குக் கூடுதலாகக் கிடைக்கும் தொகையை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப் போவதாக பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்திருக்கிறார்.

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்

மேலும், அந்நாட்டின் மற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளமும் உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More in TamilNews
இடைத்தேர்தல் 2026: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்த சீமான்! – யார் யார் தெரியுமா? இடைத்தேர்தல் 2026: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்த சீமான்! – யார் யார் தெரியுமா? September 13, 2026 தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் – என்ன பேசினார்கள்? தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் – என்ன பேசினார்கள்? September 13, 2026 மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! – யார் எங்கே? மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! – யார் எங்கே? September 13, 2026 BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" – மோடி பேச்சு BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" – மோடி பேச்சு September 13, 2026 "தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” – நிர்மல் குமார் "தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” – நிர்மல் குமார் September 13, 2026 "நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" – தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை "நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" – தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை September 13, 2026

See all 774 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *