இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் திருமணம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அனிருத் மற்றும் காவ்யா தம்பதி நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கிரீஸில் (Greece) திருமணம் செய்துகொள்ளவுள்ளனர். நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் இந்தத் திருமணம் பிரத்யேகமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பர் 21 அன்று சென்னையில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல், சினிமா மற்றும் கிரிக்கெட் உலகத்தைச் சேர்ந்த பலரும் கலந்துகொள்ளவிருக்கின்றனர். அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வராதபோதிலும், கொண்டாட்டங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.

அதைத் தொடர்ந்து, சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 21 அன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், அனிருத் – காவ்யாவோ அல்லது அவர்களது குடும்பத்தினரோ இந்தத் திருமணத் திட்டங்கள் மற்றும் விருந்தினர்கள் பட்டியல் குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை. சென்னையில் நடைபெறவுள்ள இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோருடன் பல மாநில முதல்வர்கள் மற்றும் பிரபல திரை நட்சத்திரங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய், தெலங்கானா முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி, ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு மற்றும் முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது.

மோடி
மோடி

திரைத்துறையிலிருந்து முன்னணி நடிகர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிநாத், ஏ.ஆர். ரஹ்மான், கமல்ஹாசன், தனுஷ் மற்றும் அஜித் குமார் – ஷாலினி தம்பதியர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் அல்லு அர்ஜுன் – சினேகா அல்லு ரெட்டி தம்பதி, சிவகார்திகேயன் – ஆர்த்தி தம்பதி, இயக்குநர் நெல்சன் திலீப்குமார், பிரசன்னா மற்றும் சூரஜ் வெஞ்சாரமூடு ஆகியோரின் பெயர்களும் இந்த பட்டியலில் உள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் காவ்யா மாறனுக்கு உள்ள தொடர்பால், கிரிக்கெட் உலகைச் சேர்ந்த பிரபலங்களும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

More in Cinema
Exclusive: மீண்டும் போலீஸாக சிலம்பரசன்; இயக்குநர் கீர்த்தீஸ்வரன்- சாய் இணையும் படத்தின் பரபர அப்டேட் Exclusive: மீண்டும் போலீஸாக சிலம்பரசன்; இயக்குநர் கீர்த்தீஸ்வரன்- சாய் இணையும் படத்தின் பரபர அப்டேட் October 29, 2026 Ramayana Advance Collection: ப்ரீ புக்கிங்கில் சக்கைப் போடும் ராமாயணா.. ரிலீஸுக்கு முன்னாடியே இத்தனை கோடியா? Ramayana Advance Collection: ப்ரீ புக்கிங்கில் சக்கைப் போடும் ராமாயணா.. ரிலீஸுக்கு முன்னாடியே இத்தனை கோடியா? October 29, 2026 'மனம் வலிக்கிறது; விமர்சனங்கள் செய்தால் பரவாயில்லை ஆனால்..!'- சுந்தர்.சி வருத்தம் 'மனம் வலிக்கிறது; விமர்சனங்கள் செய்தால் பரவாயில்லை ஆனால்..!'- சுந்தர்.சி வருத்தம் October 29, 2026 Jailer 2 Day 15 Box Office: 15வது நாளில் ஜெயிலர் 2 வசூல் எத்தனை கோடி?.. இந்த வாரமும் MVP வேட்டை தான்! Jailer 2 Day 15 Box Office: 15வது நாளில் ஜெயிலர் 2 வசூல் எத்தனை கோடி?.. இந்த வாரமும் MVP வேட்டை தான்! October 29, 2026 ஜான்வி கபூர் பேசுனதை ராம் சரண் பார்த்தா என்ன நினைப்பாரு?.. அப்படி நடிக்கவே மாட்டாராம்! ஜான்வி கபூர் பேசுனதை ராம் சரண் பார்த்தா என்ன நினைப்பாரு?.. அப்படி நடிக்கவே மாட்டாராம்! October 29, 2026 மாசாணி அம்மன் கோயிலுக்கு விரதம் இருந்த நயன்தாரா.. அட இது லிஸ்ட்லையே இல்லையே.. அவ்வளவு சின்சியராம் மாசாணி அம்மன் கோயிலுக்கு விரதம் இருந்த நயன்தாரா.. அட இது லிஸ்ட்லையே இல்லையே.. அவ்வளவு சின்சியராம் October 29, 2026

See all 242 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *