‘அரசன்’ படத்தை அடுத்து சிலம்பரசன் `டியூட்’ கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிப்பார் என தகவல்கள் இருந்த நிலையில், இப்போது கோலிவுட் வட்டாரத்தில் புதிதாக ஒரு தகவல் பரபரத்துக் கொண்டிருக்கிறது. ஜேசன் சஞ்சய் ஹீரோவாகிறார். கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிப்பாரென கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு உலாவுகிறது. இது பற்றி விசாரித்ததில் கிடைத்தவை.

சிலம்பரசனின் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இயக்குநர் வெற்றிமாறன ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சிலம்பரசன் ‘டியூட்’ இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் படத்தையும் தொடங்குகிறார். ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் கவனம் செலுத்த உள்ளார், என்கிறார்கள். ஆனால், ‘சிக்மா’வுக்குப் பிறகு ஜேசன் சஞ்சய், டைரக்ஷனுக்கு பிரேக் விட்டுவிட்டு ஹீரோவாக நடிக்க முடிவெடுத்துள்ளதாகவும் அவரை கீர்த்தீஸ்வரன் இயக்குவார் எனவும் செய்திகள் பரவின. ஆனால் உண்மை அதுவல்ல.

‘டியூட்’ படத்திற்குப் பின் கீர்த்தீஸ்வரன், சிலம்பரசனுக்கான ஸ்கிரிப்டை எழுதி வந்தார். இப்போது முழு கதையும் எழுதி முடித்து விட்டார். சிலம்பரசன் இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ‘ஒஸ்தி’, `அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்குப் பிறகு மீண்டும் அவரை காக்கி யூனிஃபார்மில் பார்க்கலாம். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். கீர்த்தியின் ‘டியூட்’டிலும் இசையமைத்திருந்தார். இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது.

இந்த ‘எஸ்.டி.ஆர் 51’ படத்திற்கான ஒரு பாடலை சாய், சமீபத்தில் கம்போஸ் செய்தும் கொடுத்து விட்டார். இந்தப் படத்தில் சிம்புவின் ஜோடியாக டாப் ஹீரோயின் ஒருவர் நடிக்க உள்ளார். அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தீபாவளிக்குப் பிறகு அதாவது டிசம்பரில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர், போட்டோஷூட்டும் நடந்திருக்கிறது. இந்தப் படத்தை ஒரே மூச்சில் குறுகிய கால தயாரிப்பாக கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே ‘அரசன்’ படத்திலும் கவனம் செலுத்துவார் என்கின்றனர்.
Ramayana Advance Collection: ப்ரீ புக்கிங்கில் சக்கைப் போடும் ராமாயணா.. ரிலீஸுக்கு முன்னாடியே இத்தனை கோடியா?
October 29, 2026
'மனம் வலிக்கிறது; விமர்சனங்கள் செய்தால் பரவாயில்லை ஆனால்..!'- சுந்தர்.சி வருத்தம்
October 29, 2026
Jailer 2 Day 15 Box Office: 15வது நாளில் ஜெயிலர் 2 வசூல் எத்தனை கோடி?.. இந்த வாரமும் MVP வேட்டை தான்!
October 29, 2026
ஜான்வி கபூர் பேசுனதை ராம் சரண் பார்த்தா என்ன நினைப்பாரு?.. அப்படி நடிக்கவே மாட்டாராம்!
October 29, 2026
அனிருத் – காவ்யா திருமணம்: `பிரதமர் மோடி முதல் தனுஷ் வரை…' – யாருக்கெல்லாம் அழைப்பு?!
October 29, 2026
மாசாணி அம்மன் கோயிலுக்கு விரதம் இருந்த நயன்தாரா.. அட இது லிஸ்ட்லையே இல்லையே.. அவ்வளவு சின்சியராம்
October 29, 2026
Why are Wall Street firms paying up to $100k a month for faster access to Trump's Truth Social posts? Any specific goal?
October 29, 2026
Entrepreneurs Give Their Verdict On Britain’s Budget
October 29, 2026