தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘மூக்குத்தி அம்மன்- 2’ படம் வெளியாக இருக்கிறது.

சுந்தர்.சி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நவம்பர் 6 ஆம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரி ரிலீஸ் ஈவென்ட் நேற்று (அக்.28) நடைபெற்றது.

 'மூக்குத்தி அம்மன்- 2'
‘மூக்குத்தி அம்மன்- 2’

இதில் கலந்துகொண்டு பேசிய சுந்தர்.சி, ” இந்தப் படத்தில் இதுவரை எந்த படத்துக்கும் போடாத ஒரு உழைப்பை போட்டு இருக்கிறேன். நான் என்றைக்குமே ஹீரோவுக்காக கதை எழுதியதில்லை.

நான் எழுதிய கதைக்கு தான் நடிகர்களை தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஒரு ஐடியா என்னிடம் இருந்தது. ஆனால் அது அம்மன் கதையாக இல்லை. அந்த சமயத்தில் தான் ஐசரி சார் ‘மூக்குத்தி அம்மன் – 2’ நீங்கள் எடுக்குறீர்களா? எனக் கேட்டார். அது தெய்வீக சக்தி போல் இருந்தது.

மூக்குத்தி அம்மன் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் நான்கு விஷயங்கள் தான் சம்பந்தப்பட்டிருக்கிறது.

படத்தின் டைட்டில், ஐசரி சார், நயன்தாரா மற்றும் ஊர்வசி மேடம். இந்த படத்தை ஆரம்பிக்கும் போது இவ்வளவு பெரிய உழைப்பு தேவைப்படும் என யாருமே நினைக்க இல்லை.

நானும் வெங்கட் என்பவரும் 2 வருட உழைப்பை இதில் போட்டிருக்கிறோம். 800 பேர் ஒன்றரை வருடம் உழைத்திருக்கிறார்கள்.

சுந்தர். சி
சுந்தர். சி

சிஜி-யை பொறுத்தவரை கிட்டத்தட்ட 400 கலைஞர்கள் வேலை பார்த்துள்ளனர். இது சாதாரணமானது கிடையாது. ஆனால் யூடியூபில் சில விமர்சனங்களை பார்க்கும் போது வருத்தமாக இருந்தது.

விமர்சனங்கள் செய்தால் பரவாயில்லை விஷயமே தெரியாமல், ஏ.ஐ என பேசும்போதுதான் மனது வலிக்கிறது. இந்தப் படத்தில் மொத்தம் 3000 ஷாட்டுகளுக்கு மேல் சி.ஜி இருக்கிறது.

அதில் 15 ஷாட்டுக்குத்தான் ஏ.ஐ-யைப் பயன்படுத்தினோம். படத்தை பாருங்கள், சி.ஜி நல்லாயிருந்தால் பாராட்டுங்கள், நல்லா இல்லை என்றால் தட்டிக் கொடுங்கள். என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்த படம் இந்தப் படம்” என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

More in Cinema
Exclusive: மீண்டும் போலீஸாக சிலம்பரசன்; இயக்குநர் கீர்த்தீஸ்வரன்- சாய் இணையும் படத்தின் பரபர அப்டேட் Exclusive: மீண்டும் போலீஸாக சிலம்பரசன்; இயக்குநர் கீர்த்தீஸ்வரன்- சாய் இணையும் படத்தின் பரபர அப்டேட் October 29, 2026 Ramayana Advance Collection: ப்ரீ புக்கிங்கில் சக்கைப் போடும் ராமாயணா.. ரிலீஸுக்கு முன்னாடியே இத்தனை கோடியா? Ramayana Advance Collection: ப்ரீ புக்கிங்கில் சக்கைப் போடும் ராமாயணா.. ரிலீஸுக்கு முன்னாடியே இத்தனை கோடியா? October 29, 2026 Jailer 2 Day 15 Box Office: 15வது நாளில் ஜெயிலர் 2 வசூல் எத்தனை கோடி?.. இந்த வாரமும் MVP வேட்டை தான்! Jailer 2 Day 15 Box Office: 15வது நாளில் ஜெயிலர் 2 வசூல் எத்தனை கோடி?.. இந்த வாரமும் MVP வேட்டை தான்! October 29, 2026 ஜான்வி கபூர் பேசுனதை ராம் சரண் பார்த்தா என்ன நினைப்பாரு?.. அப்படி நடிக்கவே மாட்டாராம்! ஜான்வி கபூர் பேசுனதை ராம் சரண் பார்த்தா என்ன நினைப்பாரு?.. அப்படி நடிக்கவே மாட்டாராம்! October 29, 2026 அனிருத் – காவ்யா திருமணம்: `பிரதமர் மோடி முதல் தனுஷ் வரை…' – யாருக்கெல்லாம் அழைப்பு?! அனிருத் – காவ்யா திருமணம்: `பிரதமர் மோடி முதல் தனுஷ் வரை…' – யாருக்கெல்லாம் அழைப்பு?! October 29, 2026 மாசாணி அம்மன் கோயிலுக்கு விரதம் இருந்த நயன்தாரா.. அட இது லிஸ்ட்லையே இல்லையே.. அவ்வளவு சின்சியராம் மாசாணி அம்மன் கோயிலுக்கு விரதம் இருந்த நயன்தாரா.. அட இது லிஸ்ட்லையே இல்லையே.. அவ்வளவு சின்சியராம் October 29, 2026

See all 242 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *