‘நீர்ப்பறவை’, ‘காதலில் விழுந்தேன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை சுனைனா.

சுனைனா

ஏ.ஐ. பயன்படுத்தித் தன்னை ஆபாசமாகவும் தவறாகவும் சித்தரித்து பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக நடிகை சுனைனா தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் பதிவில், “சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, எனது முகத்தை ஆபாசமான வீடியோவில் மார்ஃபிங் செய்து பரப்பி வருவது எனது கவனத்திற்கு வந்துள்ளது.

டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்கப்பட்ட இந்த வீடியோவிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. மிகவும் அருவருக்கத்தக்க மற்றும் வன்மமான இந்தச் செயலைக் கண்டு நான் அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன்.

இந்தச் செயலை நான் மிகக் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கிறேன். இந்த வீடியோவை உருவாக்கவோ, பதிவிடவோ அல்லது பகிரவோ நான் எந்தவித அனுமதியும் வழங்கவில்லை.

இது இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா 2023 சட்டப் பிரிவுகளின் கீழ் பாலியல் துன்புறுத்தல் மற்றும் அவதூறு பரப்பும் குற்றவியல் நடவடிக்கையாகும்.

எனவே, இந்த வீடியோவை உருவாக்கியவர்கள், பதிவேற்றியவர்கள் மற்றும் பகிர்ந்தவர்கள் அனைவரும் தங்களது கணக்குகள், குழுக்கள் மற்றும் சாதனங்களில் இருந்து உடனடியாக அதை நீக்க வேண்டும்.

முன்னறிவிப்பு ஏதுமின்றி, இந்தச் செயலில் ஈடுபட்ட அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் சட்டப் பிரிவுகளின் கீழ் நான் வழக்குத் தொடரவுள்ளேன்.

இனிவரும் நாட்களில் இந்த வீடியோவை மேலும் பரப்புபவர்களும் இந்தச் சட்ட நடவடிக்கைக்குப் பொறுப்பாவார்கள். என் நலன் விரும்பிகள், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் இந்த வீடியோவைப் பரப்பாமல், ஆன்லைனில் கண்டால் உடனடியாகப் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

See all 242 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *