ராம் சரண் நடிப்பில் வெளியான ‘பெத்தி’ திரைப்படத்திற்காகத் தான் சந்தித்த விமர்சனங்கள் குறித்து நடிகை ஜான்வி கபூர் பேசியிருக்கிறார்.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் வருண் தவானுடன் கலந்துகொண்ட ஜான்வி கபூர், தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் மற்றும் படப்பிடிப்புத் தளத்தில் தான் உணர்ந்த அசௌகரியங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்.

அவர் பேசுகையில், “இந்த விஷயத்தைப் பற்றிப் பேசவே எனக்கு மிகவும் பயமாக இருந்தது. ஏனென்றால், அந்தப் படத்தில் பலர் கடினமாக உழைத்திருக்கிறார்கள்.

ஆனால், இந்த விவகாரத்தில் என் தரப்பில் உள்ள தவறை நான் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். ஏனெனில், இது போன்ற ஒரு தவறான சித்திரிப்பு நம் சமூகத்தில், குறிப்பாகப் பெண்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம் என் மனசாட்சியை மிகவும் உறுத்துகிறது.

அந்த அவமானத்தை என் வாழ்நாள் முழுவதும் நான் சுமப்பேன். ‘நான் இன்னும் எச்சரிக்கையாக இருந்திருக்கலாமோ?’ என்று கேட்டால், நூறு சதவிகிதம் ஆம் என்று சொல்வேன்.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

பெண்களைப் புறப்பொருளாக்கும் செயலாக இருந்ததா? என்றால், நிச்சயமாக ஆம் என்றே சொல்வேன். தென்னிந்திய சினிமாவில் முழுமையான திரைக்கதை வடிவம் கொடுக்கப்படுவதில்லை. அத்தோடு கேமரா கோணங்கள் எங்கே வைக்கப்படும் என்ற விவரங்கள் முன்பே வழங்கப்படுவது மிகக் குறைவு.

இருப்பினும், எனக்குக் கிடைத்த தகவல்களை வைத்து அந்த விவகாரத்தைப் பிரச்னை இல்லாமல் எப்படிக் கையாள்வது என்றுதான் யோசித்தேன். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் என் வாழ்க்கையில் நடக்காமல் பார்த்துக்கொள்வது மட்டுமே என்னால் செய்ய முடிந்தது” எனப் பேசியிருக்கிறார்.

See all 242 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *