‘ஜெயிலர் -1’ படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக ‘சுவேதா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றவர் மிர்னா. கடந்த வாரம் வெளியான ‘ஜெயிலர் -2’-விலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் ‘ஜெயிலர் -2’ படத்தின்போது ஹிருத்திக் ரோஷனுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பதிவிட்டிருக்கிறார் மிர்னா.

மிர்னா மேனன்
மிர்னா மேனன்

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “சிறுவயது முதலே வியந்து பார்த்த ஹீரோவுடன், இப்போது ஒரே திரையில் இணைந்து நடிப்பது நம்ப முடியாத உணர்வாக இருக்கிறது!

‘ஜெயிலர் 2’ படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் சிறப்பான அனுபவம். அவருக்குப் பின்னால் இருக்கும் மனிதரை அறிந்துகொண்டது இன்னும் அழகான அனுபவமாக இருந்தது.

மிகவும் இனிமையானவர், எளிமையானவர், பணிவானவர். அவர் மீதான என் மதிப்பும் மரியாதையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. சில தருணங்கள் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். இது அப்படிப்பட்ட தருணம்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

See all 242 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *