சென்னையில் ஆட்டோமொபைல் வரைகலை நிறுவனம் ஒன்றில் பணியிலிருக்கிறார் மனோகர் (ஏகன்). அங்கே பயிற்சிக்காக இணையும் நிவேதாவுடன் (ஃபெனிமா ஜார்ஜ்) நட்பு ஏற்படுகிறது. இதனிடையே மனோகரின் கல்லூரிக்கால வாழ்க்கையும் நமக்குக் காட்டப்படுகிறது. கல்லூரியில் செய்த சேட்டையினால் மனோகரை (ஏகன்) அங்கிருந்து டிஸ்மிஸ் செய்துவிடுகிறார்கள். இறுதியாண்டில் டிஸ்மிஸ் செய்யப்பட்டதால், அவருக்கு வேறொரு கல்லூரியில் சீட் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இறுதியில், பெண்கள் மட்டுமே படிக்கும் ஒரு கல்லூரியை இருபாலருக்குமானதாக மாற்றிய பிறகு அங்கு முதல் மாணவனாகப் போய்ச் சேர்கிறார் மனோ. அங்கு பவளக்கொடிக்கும் (ஸ்ரீதேவி அபல்லா) மனோவுக்கும் காதல் சடுகுடு! அந்தக் காதல் என்னவானது, நிவேதாவுடனான நட்பு அடுத்த கட்டத்துக்குச் சென்றதா… இந்த இரண்டு உறவிலும் மனோகர் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் என்னென்ன என்பதுதான் அறிமுக இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கியிருக்கும் ‘ஹைக்கூ’.
துள்ளலான கல்லூரி இளைஞன் கதாபாத்திரத்திற்குக் காதல், கோபம், அமைதியுடன் கூடிய நிதானம் ஆகியவற்றைத் தேவைக்கேற்ப தர முயன்றிருக்கிறார் ஏகன். ஆனால், அவை பல இடங்களில் சம்பிரதாய ரியாக்ஷன்களாக மட்டும் சுருங்கிப்போவது துருத்தல். எமோஷனல் வகுப்புகளில் கதாநாயகிகள் ஸ்ரீதேவி அபல்லா, ஃபெமினா ஜார்ஜ் இருவரும் நல்ல ரேங்க் வாங்குகிறார்கள்.

தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் படத்தின் கலகல மீட்டரைச் சீராகக் கொண்டு சென்றிருக்கிறார் ‘அதிர்ச்சி’ அருண். இவர்களைத் தாண்டி சுப்ரமணியம் சேது, சபரீஷ் உள்ளிட்ட பலர் ஆங்காங்கே எட்டிப் பார்த்துவிட்டு மட்டும் செல்கிறார்கள்.
காதல் மொழி பேசும் கதைக்கும், இறுக்கமான எமோஷனல் கதைக்கும் வெவ்வேறு ‘டச்’களைத் தந்து கவனம் பெறுகிறார் ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமி. சுவாரஸ்யம் தடுமாறும் இடங்களையும், சொன்ன விஷயத்தையே மீண்டும் மீண்டும் சுற்றும் இடங்களையும் படத்தொகுப்பாளர் சக்தி பிரனேஷ் கருணையோடு டீல் செய்திருப்பது ஏனோ!

இசையமைப்பாளர் சித்துகுமார் இசையில் பாடல்களில் பெரிய குறையில்லை என்றாலும், அவை படத்தின் வேகத்திற்கு பேரிகேட்தான். பின்னணி இசையும் காட்சிகளோடு இணையாமல் ஆங்காங்கே ஒருதலையாகவே சுற்றுகிறது.
இரண்டு காதல்கள், அதில் நாயகன் உணரும் பாடங்கள் என்ன என்பதைச் சுவாரஸ்யமான ஐடியாவோடு சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் யுவராஜ் சின்னசாமி. இருபாலருக்குமான கல்லூரியாக மாற்றப்பட்ட பிறகு அங்கு முதல் மாணவனாகச் சேரும் நாயகன், அங்கு அவர் எப்படி இருக்கப்போகிறார் என்கிற தொடக்கக் கதை சுறுசுறுப்போடு பார்க்க வைக்கிறது. பிறகு, நாயகனின் முதல் காதலை வழக்கமான காதல் சினிமா இலக்கணங்களோடு கொண்டு செல்கிறார் இயக்குநர்.
நாயகனுக்கும் – நாயகிக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள், எட்டிப் பார்க்கும் பிரச்னைகள், ஆணாதிக்க மனோபாவம் என எல்லாவற்றிலும் புதுமை என்பதே மிஸ்ஸிங்! நாயகிக்கு டாக்சிக் நாயகன் தரும் அழுத்தம் பற்றிப் பேசிய ஐடியாவெல்லாம் ஓகே பாஸ்! ஆனால், அந்த காட்சிகளை விவரிக்கும் இடங்களில் நாயகன் மீது பரிதாபப் பார்வையைக் காட்டுவது ஏன்?! இடையிடையே அதிர்ச்சி அருண் போடும் காமெடி கவுன்ட்டர்கள் மட்டும் திரைக்கதையைச் சோர்வாக்கிடாமல் கூட்டிப்போகின்றன.

இரண்டாம் பாதியில், வேறொரு காதல் கதைக்கு நகர்கிறது படம். அந்த காதல் படலத்தில் நாயகிக்கு நாயகனின் இறந்தகாலம் தொடர்பான பிரச்னை, அடையாளம் குறித்த உரையாடல் மட்டும் புதுசு! அதிலும் நிவேதாவுக்கு எழும் கோபம், அந்த கோபத்திற்குப் பின்னிருக்கும் காரணம் ஆகியவற்றை அவரின் பார்வையிலிருந்து விளக்கிய விதம் சிறப்பு. ஆனால், ஏற்கனவே விளக்கிவிட்ட இந்த விஷயங்களை இன்னும் தெளிவுபடுத்துகிறேன் என சில காட்சிகள் ரிப்பீட் அடிக்கின்றன. வழக்கமான அந்த க்ளைமாக்ஸுக்கும் வலுவான காரணங்கள் சொல்லப்படவில்லை.
நல்லதொரு ஐடியாவை, இன்னும் அழுத்தமான திரைக்கதையோடு இணைத்துச் சொல்லியிருந்தால் டைட்டிலைப் போலப் படமும் `ஹைக்கூ’வாக ரசிக்க வைத்திருக்கும்.
Exclusive: மீண்டும் போலீஸாக சிலம்பரசன்; இயக்குநர் கீர்த்தீஸ்வரன்- சாய் இணையும் படத்தின் பரபர அப்டேட்
October 29, 2026
Ramayana Advance Collection: ப்ரீ புக்கிங்கில் சக்கைப் போடும் ராமாயணா.. ரிலீஸுக்கு முன்னாடியே இத்தனை கோடியா?
October 29, 2026
'மனம் வலிக்கிறது; விமர்சனங்கள் செய்தால் பரவாயில்லை ஆனால்..!'- சுந்தர்.சி வருத்தம்
October 29, 2026
Jailer 2 Day 15 Box Office: 15வது நாளில் ஜெயிலர் 2 வசூல் எத்தனை கோடி?.. இந்த வாரமும் MVP வேட்டை தான்!
October 29, 2026
ஜான்வி கபூர் பேசுனதை ராம் சரண் பார்த்தா என்ன நினைப்பாரு?.. அப்படி நடிக்கவே மாட்டாராம்!
October 29, 2026
அனிருத் – காவ்யா திருமணம்: `பிரதமர் மோடி முதல் தனுஷ் வரை…' – யாருக்கெல்லாம் அழைப்பு?!
October 29, 2026
Why are Wall Street firms paying up to $100k a month for faster access to Trump's Truth Social posts? Any specific goal?
October 29, 2026